தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் 5From மரபு விக்கிகாலதூஷகன் என்னும் திருடன் ஒருவன் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தான். அவன் தன்னோட கொள்ளைப் பணத்தில் பாதியை ஸ்ரீவைகுண்டத்துப் பெருமாளுக்குக் கொடுப்பதை வழக்கமாய் வைத்திருந்தான். ஒருமுறை கொள்ளை அடிக்கும்போது அரசனின் காவலர்களால் பிடிக்கப் பட்டான். கடவுளை நிந்தித்தான். கடவுளே, என்னோட கொள்ளையில் உனக்கும் பங்கு சரிபாதியாய்க் கொடுத்துட்டுத் தானே வரேன். என்னை இப்படிப் பிடிச்சுக் கொடுத்துட்டியேனு மனம் நொந்தான். சரி, போகட்டும், இப்போ என் கிட்டே இருக்கிற எல்லாமும் உனக்கே தான் கொடுத்துடறேன். என்னை எப்படியாவது இந்த ராஜ தண்டனையிலே இருந்து காப்பாத்துனு அவனைச் சரணடைந்தான். பார்த்தார் பெருமாள். இந்தத் திருடனுக்கு ஞானம் உதயம் ஆகும் நேரம் வந்தாச்சு. அரசனுக்கும் இவனைப் பத்திப் புரியணும், அதே சமயம், இவனையும் காக்கவேண்டும். திருடனுக்கு ஞானமும் வரவேண்டும் என எண்ணிய ஈசன் கள்ளனைப் போல வேடம் தரித்து மன்னனிடம் சென்றார். கோபியரிடம் வெண்ணெய் திருடி உண்டவனுக்குக் கள்ளன் வேஷம் தரிப்பதில் என்ன கஷ்டம்? அவன் இஷ்டப் படும் வேஷம் அல்லவோ அது?? கள்ளனைப் பார்த்த மன்னனுக்கு அவன் பேரில் கோபமே வரவில்லை. என்ன காரணமோ பரிவும், அன்பும், பாசமும், பக்தியுமே மேலிட்டது. திகைத்த மன்னன் கள்ளனைப் பார்த்து, "இது என்ன மாயம்? நீயோ கள்ளன், என்னால் தண்டிக்கப் படவேண்டியவன். ஆனால் எனக்கு உன்னிடம் அளவுகடந்த பக்தியும், பாசமும் மேலிடுகின்றதே?" எனக் கேட்டான். கள்ளன் அதற்குப் பதில் சொன்னான். மன்னனுக்கு உண்மை புரிந்தது. அன்றிலிருந்து தன்னுடைய கஜானாவின் பணம் எல்லாம் உரிய நேர்மையான வழியில் செலவிடப் படுகின்றதா என்று கவனித்துச் செலவிட்டான். திருடனை மன்னித்துவிட்டான். அரசனும், திருடனும் இறை அருளால் ஞானம் பெற்றனர். பெருமானுக்கோ கள்ளருக்கெல்லம் பிரான் என்ற பட்டப் பெயர் நிலைத்து நின்றது. அன்றிலிருந்து கள்ளபிரான் என அழைக்கப் படுகின்றார் இவர். இந்த ஸ்ரீவைகுண்டத்தின் மற்றொரு சிறப்பு, நம்மாழ்வார் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாள் ஆழ்வார் திருநகரியில் இருந்து வந்து கலந்து கொண்டு காலையில் மங்களாசாசனமும், திருமஞ்சனம், கோஷ்டி போன்றவற்றிலும் கலந்து கொண்டு, மாலையில் நம்மாழ்வாருக்குரிய அன்னவாகனத்திலும், பொலிந்து நின்ற எம்பிரான் கருட வாகனத்திலும் திருவீதி உலா வந்து மறுநாள் நம்மாழ்வார் மங்களாசாசனம் பெற்று விடைபெற்றுச் செல்லும் காட்சியும் கண்கொள்ளாக் காட்சி என்று சொல்லுகின்றனர். ஆனால் கூட்டத்தில் எப்படிப் பார்க்க முடியும்? புரியலை. சாதாரண நாட்களில் சென்றால் பெருமாளை திவ்ய தரிசனம் செய்யலாம். 600 அடி நீளமான கோயிலின் உட்புறத்து கர்ப்பகிருஹத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை சூரியன் சித்திரை, ஐப்பசி மற்றும் பெளர்ணமி தினங்களில், தன்னுடைய கிரணங்கள் பகவான் காலடியில் படும்படி வந்து தரிசிப்பது சிறப்பாய்க் கருதப் படுகின்றது. மார்கழி மாசம் நடக்கும் திரு அத்யயன உற்சவம் பின் பத்து நாட்களில் பரமபத வாசல் திறப்பு, படியேற்றம், பத்தி உலா, கற்பூர சேவை போன்றவை காணக் கிடைக்காத காட்சி எனச் சொல்லப் படுகின்றது. சுவர்க்கத்திலிருந்து ஆஸ்தானம் புறப்பாடு வெள்ளித் தோளுக்கினியானில் பனிக்காக குல்லாய், வெல்வெட் போர்வையுடனே கிளம்பி பத்தி உலா நடக்கும். சிம்ம கதி, சர்ப கதியுடன், தாள வாத்தியங்கள் முக வீணை முழங்க படியேற்றமும் கற்பூர சேவையும் நடைபெறுகிறது. சாதாரணமாய் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பிடிக்கும் இந்த சேவை இங்கே ஒரு விநாடிக்குள் பெருமான் ஆஸ்தானத்தில் சேவை சாதிப்பதும், ஒரு நிமிஷத்திற்குள் கற்பூர சேவையும் நடந்து முடிகின்றது. அடுத்து வரகுணமங்கை என்னும் நத்தம் செல்லுகின்றோம். ஸ்ரீ வைகுண்டத்திற்குக் கிழக்கே, தூத்துக்குடி செல்லும் வழியில், ஒரு மைல் தொலைவுக்குள்ளாக தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள திருத்தலம் வரகுணமங்கை என்னும் நத்தம் ஆகும். பெருமாளின் பெயர் விஜயாசனர். தாயார் வரகுணவல்லி. விமானம் விஜயகோடி விமானம் என அழைக்கப் படுகின்றது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்த ஊரில் அக்னி பிரத்யக்ஷம் என்று சொல்லப் படுகின்றது. இறைவன் கிழக்கே பார்த்துக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கின்றார். அக்னி பகவானுக்குப் பிரத்யக்ஷமாய்க் காக்ஷி அளித்ததைத் தவிர, உரோமச முனிவருக்கும், சத்யாவனுக்கும் காக்ஷி கொடுத்தார் எனச் சொல்லப் படுகின்றது. இது கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பதால், முன்கூட்டியே கோயில் பட்டாசாரியாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லுவது நல்லது. நாங்கள் காலை வேளையிலேயே சென்று விட்டதால் தரிசனம் கிடைத்தது. உள்ளூர் மக்கள் நத்தம் என்றே இந்த ஊரைச் சொல்லுவதால் நத்தம் என்றே கேட்கவேண்டும். இந்தக் கோயிலின் தல புராணம் முன் பிறவியில் செய்த கர்மவினை இப்பிறவியிலும் தொடர்ந்தாலும் ஒருவன் இந்த ஊரில் பிறந்த காரணத்தாலேயே நற்கதியும் அடைந்தான் என்று சொல்லுகின்றது. தலவரலாறு வருமாறு: உரோமச முனிவர் இங்கே தவம் செய்து வந்தார். சத்தியவான் அவருடைய சிஷ்யன். குருவிற்குத் தொண்டு புரிந்து கொண்டும் , பாடங்கள் கற்றுக் கொண்டும் வந்தான். இங்கே இருந்த திருக்குளத்திற்கு அகநாச தீர்த்தம் என்ற பெயர் இருந்து வந்தது. அந்தத் தீர்த்தத்தில் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சத்தியவானுக்கு ஒரு செம்படவன் வலை வீசி மீன்கள் பிடிப்பது தெரியவந்தது. ஏராளமான மீன்கள் பிடித்தும் ஆசை அடங்காமல் மேலும் மேலும் வலையை விரித்து வந்த செம்படவனை ஒரு நாகம் பின்னாலிருந்து தீண்டியதையும், தீண்டிய நாகம் மறைந்ததையும், செம்படவன் உடனே இறந்ததையும் கண்டான் சத்தியவான். ஆனால் என்ன ஆச்சரியம்???? அந்தச் செம்படவனை தேவலோகத்தில் இருந்து கந்தர்வர்கள் அலங்கரிக்கப் பட்ட அழகிய விமானத்தைக் கொண்டு வந்து சொர்க்கத்திற்குக் கூட்டிச் சென்றதையும் அவன் காண நேர்ந்தது. மீன்களைத் துன்புறுத்தி வந்த இந்தச் செம்படவனுக்கு இவ்வளவு நற்கதியா என யோசித்த வண்ணம் குருவிடம் சென்ற சத்தியவான், தான் கண்டதை அவரிடம் கூறி, செம்படவனுக்கு நற்கதி ஏற்பட்ட விதம் எவ்வாறு எனக் கேட்டான். உரோமச முனிவர் தன் சக்தியால் அந்தச் செம்படவன் முற்பிறவியில் விதர்ப்ப தேசத்து அரசகுமாரனாய் இருந்து தீவினை புரிந்து வந்து நரக வாசத்தை அனுபவித்ததாயும், எப்போதோ செய்த ஒரே ஒரு நற்செயலின் விளைவாக இந்தப் பூமியில் இந்த ஊரில் வந்து பிறந்திருக்கின்றான் எனவும் கூறினார். இந்த ஊரில் பிறந்த காரணத்தாலேயே அவன் கர்மவினை அழிந்து அவன் நற்கதி அடைந்திருக்கிறான் என்றும் சொன்னார்.
மேலும் உரோமசர் தன் சீடனிடம் சொன்னதாவது: இந்தக் கோயிலின் ராஜ கோபுரத்தில் தசாவதார சிற்பங்கள், காளிங்க நர்த்தனம் சிற்பம், வசுதேவர் தன் தலையில் கூடையில் குழந்தைக் கிருஷ்ணனை வைத்துக் கொண்டு யமுனையைக் கடப்பது ஆகிய சிற்பங்கள் காணவேண்டிய ஒன்றாகும். முன்னேற்பாடுடன் செல்லாததால் அப்போது படமெல்லாம் எடுக்கவில்லை. :((((((( அடுத்துத் திருப்புளியங்குடி செல்லப் போகின்றோம்!
--Geetha Sambasivam 09:41, 2 ஏப்ரல் 2011 (UTC)
|