வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தக்காளி சூப்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


அரிசி – 1 கைப்பிடி

செலரிக்கீரை – 1 கைப்பிடி

தக்காளி -1 கிலோ

இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன்

மிளகுத்தூள் -1 டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்


செய்முறை


தக்காளியுடன் அரிசி செலரிக்கீரை சேர்த்து வேக வையுங்கள்.

வெந்ததும் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்ததில் தேவையான நீர் சேர்த்து கலந்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.

வடிகட்டிய நீரில் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.

கொதித்ததும் வெண்ணெய் சேர்த்துச் சூடாகப் பரிமாறுங்கள்.







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:40, 24 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 24 November 2011, at 06:40. This page has been accessed 1,639 times.