வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சித்தர் வழியில் தேரையார் 12

From மரபு விக்கி

Jump to: navigation, search

சித்தர் வழியில்.., தேரையார்

Imagesசிவாயா.jpg

நாட்டில் அப்போது பங்கரமான வறுமையும்,பஞ்சமும் தலைவிரித்தாடியது.எங்கும் வளம் குன்றி,பசி,பட்டினியால் மக்கள் துன்புற்றுற்றனர். உண்ண உணவில்லை. அதைப் பெற பணமில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை! மக்கள் தெய்வத்தைப் பார்த்தில்லை. ஆனால், தெய்வம் போல் உதவும் ஞானிகள்.ஆன்றோர்கள்,சித்தர்கள் இருந்தார்கள். மக்களின் மனகுறையை நீக்கவும், அவர்களின் உடல் நோய்களையும் தீர்த்துள்ளார்கள். இப்போதும் அவரைகளை அணுவதை தவிர வேறு வழியும், மார்க்கமும் தெரியவில்லை.நாட்டு மக்கள் அனைவரும் தேரையாரைக் காண அவரின் ஆசிரமம் சென்று, தங்களின் குறைகளைக் கூறித், தங்களை ஆதரித்து உதவ வேண்டுமென வணங்கி நின்றனர். ‘ உங்களுக்குப் பொன்தானே வேண்டும்? பொறுங்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு தங்கம் செய்து தருகிறேன்!’ என்று கூறி தன் சீடர்களை அழைத்தார்.


பக்கத்தில் நிமிர்ந்து நின்ற மலையைப் பார்த்தார். ”சீடர்களே நாட்டில் பஞ்சத்தால் மக்கள் பட்டினியால் வாடுகிறர்கள். அவர்களின் பசித்துயரை நீக்க நமக்கு மலை அளவு பொன் வேண்டும். இரசவாத்தால் இந்த மலையை, பொன்னாக்க முடிவு செய்துள்ளேன். ஆகவே, மலையைச் சுற்றி துருத்திகளை வைத்து நெருப்பு மூட்டுங்கள். நான் மற்றவற்றைத் தயார் செய்துகொண்டு வருகிறேன்” என்றார்.குருவின் கட்டளைப்படி சீடர்கள் நெருப்பு மூட்டினர். இதனால் மலையிலிருந்த பறவைகள்,மிருகங்கள் எல்லாம் பதறி ஓடின. மலையில் தவம் செய்துக்கொண்டிருந்த முனிவர்கள் நெருப்பின் தகிப்பு தாளாமல் அலறி மலை இருந்து கீழிறங்கி வந்தனர். இது தேரையாரின் வேலையென்று அறிந்து, நேராகத் தேரையாரின் குருநாதர், குறுமுனி அகத்தியரிடம் சென்று முறையிட்டனர்.இதனை அறிந்த தேரையார் தம் சீடர்களை அழைத்து அவர்களிடம் இரகசியமாக காதுகளில் ஏதோ கூறிவிட்டு அகத்தியரிடம் சென்று, வணங்கினார்.


“நீ குருவை மிஞ்சிய சீடனாகி விட்டாயோ.. ரிஷிகளைத் துன்புறுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டாயா?” என்று ருத்ரம் கொப்பளிக்க… தேரையாரின் இரண்டு கால்களையும் பிடித்து ஜராசந்தன் வதம்போல உடம்பை இரண்டாகக் கிழித்தெறிந்து தூரவீசிவிட்டுப் போய்விட்டார்.கூடி இருந்த ரிஷிகள் வாயடைத்துப் போய் நின்றனர். தேரையாருடன் அவரது சீடர்களும் வந்திருந்தனர். இருகூறாக இரத்தச் சேறாகக் கிழிந்து கிடந்த தங்களது குருவை கண்டனர். தேரையார்,தனக்கு இந்த நிலைமை ஏற்படக்கூடும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தார்.  ஆகவே சீடர்களிடம்  தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் கூறி இருந்தார். இந்த எச்சரிக்கை நினைவு வர, உடனே சீடர்கள் கிழிபட்ட உடல் சேரவும் உடலில் உயிர் வந்து கூடவும்,தேவையான மூலிகைகளையும் மந்திரத்தையும் சொல்லி தேரையாரை உயிர்ப்பித்தனர்.உயிர் பெற்று எழுந்த தேரையார், மிகவும் வருந்தினார். ‘மக்கள் சேவை மகேசன் சேவையல்லவா! அதைச் செய்தற்காக,தனக்கு இத்தனை பெரிய சோதனை, தண்டனையா? என்று சிந்தையில் இருந்த போது வானில் மின்னல் வெட்டியது. இடி முழங்கியது. மழை அமுதமென கொட்டியது. ஆஹா! இனி மக்கள் துன்பம் நீங்கிவிடும். வருண பகவானை வேண்டி மழை பொழிய வைத்து, நாட்டுக்கு வளம் சேர்த்துவிட்டார் அகத்தியர் என்பதைத் தேரையார் புரிந்துக்கொண்டார்


அகத்தியர் சென்ற திசையை நோக்கி வணங்கினார். அதன் போது “தேரையரே! நீ தேடும் ஞானம் அகத்தியரிடம் உள்ளது. வற்றாத ஞானசாகரம்.நீ அவரிடமே சீடனாக செல்” என்று அடையாளம் காட்டியவள் செளமினி.அதன்படி அகத்திய முனியிடம் சென்று ‘என்னைச் சீடனாகத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியபோது ‘தேரையாரே! நிலையில்லா இந்த மானுட தேகம்.இதைக்கொண்டு நிலையான ஞானத்தை அடையத்துடிக்கிறாய்.உடம்பு நிலைக்க வேண்டும்.அப்போதுதான் உனது எண்ணம் நிறைவேறும். காரியம் சித்தியாகும்.நீக்கமற நிலைக்கும் பரமானந்த சிவம் உன் உள்ளத்தில் நிலை நிறுத்து. அது உனக்கு உதவும்” என்றார்.சித்தர்கள் தங்களது மரணத்தை எதிர்கொள்வதற்கு எத்தனையோ கணக்கீடுகளும் அனுபவ ஆய்வுகளும் முடிவெடுத்துள்ளார்கள்.யோகிருக்கும் ஞானியருக்கும் கபால வழியாகவும், புண்ணியருக்கு கண்,காது,மூக்கு வழியாகவும், பாவிகளுக்கு ஆசனவாய் வழியாகவும் உயிர் பிரியும். மூச்சினைக் கொண்டு மரணத்தின் வருகை அறியும் கலையை சித்தர்கள் கண்டறிருந்து இருக்கின்றனர்.


இந்நிலையில் தேரையாரின் திறமைக்கு ஒரு சவால் நிகழ்ச்சி வந்தது. காசிவர்மன் என்ற மன்னனுக்கு கடுமையான தலைவலி வந்து அவதிப்பட்டு எவ்வகையிலும் நோய் தீராத நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தயாராகி விட்டான்.வைத்தியர் அனைவரும் கைவிட்டுவிட்ட நிலையில் அகத்திய முனிவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரது ஆசிரமம் வந்து நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தான் மன்னன்.“மன்னா நீ தூங்கும் போது மிகமிகச் சிறிய தேரைக்குஞ்சு உன் மூக்கினுள் புகுந்துவிட்டது. நீ மூச்சுக் காற்றை இழுத்தபோது அந்த தேரைக்குஞ்சு மூளைக்குள் போய் தங்கிவிட்டது.ஆகையால்தான் உனக்கு தீராத தலைவலிக்குக் காரணம். இதனை கேட்ட மன்னன் பேயறைந்தது போல் ஆனான்.நிகழாது என்பதற்கு எந்த நிகழ்வுமே இந்த உலகத்தில் முன்னுதாரணமில்லை. கவலை வேண்டாம். உன் தீராத தலைவலியைப் போக்குகிறேன் என்றார் அகத்தியர். மூலிகை சாறு கொண்டு மன்னனை மயக்கத்தில் ஆழ்த்தினர்.அறுவை சிகிச்சை மூலம் கபாலத்தை திறந்தார்.அங்கே திரவப்பகுதியில் தேரை இருந்தது. இடுக்கியைக் கொண்டு எடுக்க முனைந்தால், தேரை மூளைப்பகுதிகளுக்குள் இங்குமங்கும் தாவி மூளையை சேதமாக்கி விடுமே என்று அஞ்சினார்.


அருகில் அமர்ந்திருந்த தேரையர் உடனே எழுந்துபோய் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து பக்கத்தில் வைத்து, தண்ணீரில் அலை எழுப்பி ஓசைப்படுத்தினார்.உடனே அந்தத் தண்ணீர் பாத்திரத்தில் தாவிக் குதித்து நீச்சலடித்தது. உடனே சட்டென அகத்தியமுனி ‘சந்தான கரணி’ என்னும் மூலிகையால் மன்னனின் மண்டை ஓட்டை மூடிவிட்டார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த மன்னனுக்குத் தலைவலி இருந்ததற்கான சுவடே தெரியவில்லை.தேரையரின் நுட்பமான அறிவாற்றல் அகத்திய முனிவரை அளவற்ற ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தேரையர் என்று அதன் பின்னரே அழைக்கப்பட்டார். காசி மன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கோ அளவில்லை.

பாண்டிய மன்னன் ஒருவனுக்கு நீண்ட நாள் இடுப்பு வலி இருந்து.அதனால் அரண்மனையில் இராஜ வைத்தியம் செய்யப்பட்டது.அதன் காரணமாக அந்த மன்னனுக்கு முதுகில் கூன் விழுந்துவிட்டது. நாட்டையாளும் வாலிப மன்னனுக்கு கூனலோடு இருந்தால் அவமானம் அல்லவா? அகத்தியர் ஆசிரமத்திற்கு மன்னன் வந்து சேர்ந்ததான்.மன்னனை பரிசோதித்துவிட்டு தேரையரிடம் சில ஆபூர்வ மூலிகைகளைக் கொண்டு வரும்படி அகத்தியர் கொண்டு வர பணித்தார். அந்த அபூர்வ மூலிகைகளின் இடம் தேடி கொண்டு வந்து சேர்த்தார். அகத்தியர் அந்த மூலிகை இரசத்தை பாத்திரத்தில் ஏற்றி அடுப்பில் கொதிக்க வைத்தார்.


‘’ தேரையரே.., நான அவசரமாக வெளியே செல்ல வேண்டும். தைலம் பதம் வந்ததும் கவனமாகப் பார்த்து இறக்கி வைக்கவும்.” என்று கூறி சென்றுவிட்டார். அடுப்பு தகதகவென காந்தலாய் எரிந்து கொண்டிருந்தது.தைலம் பதம் வரும் நேரத்திற்காக கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் தேரையர்.வெடி வைத்து மலையை உடைத்தார் போல மேல் கூரையில் சத்தம் பலமாகக் கேட்டது. தேரையர் நிமிர்ந்து பார்த்தார். எரியும் அடுப்புக்கு நேர் மேலாக ஆசிரமக் கூரையில் பல்லக்கிற்காக வளைந்த மூங்கில் ஒன்று…, அடுப்பின் அனலில் கொதித்துக் கொண்டிருந்த மூலிகைச் சாற்றின் ஆவிபட்டு, வளைந்திருந்த மூங்கில் படீரென நிமிர்ந்திருக்கிறது. அந்தச் சத்தம்தான் அது என்பதைப் புரிந்துக் கொண்டார்.


வில்லாக வளைந்திருந்த மூங்கில் நிமிர்ந்த நிலைதான் மூலிகைச் சாற்றினை இறக்க வேண்டிய பதமான நிலை என்பதை உணர்ந்தார் தேரையர் உடனே அடுப்பிலிருந்த தைலத்தை இறக்கி வைத்தார். வெளியில் சென்றிருந்த அகத்தியர் அடுப்பிலிருந்த மூலிகைச் சாறு இறக்கி வைக்கப்படிருப்பததைப் பார்த்து அவருக்கு கோபம் வந்துவிட்டது.’’தேரையரே.., என்ன காரியம் செய்தாய். அதற்குள் மூலிகை ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிவிட்டாயே.பதம் வரும் முன் இப்படி செய்து விட்டாயே’’ ‘ என கடிந்தார்.’’ குருநாதரே, மன்னிக்கவேண்டும். நான் சரியான பக்குவத்தில்தான் இறக்கியுள்ளேன். பல்லாக்கு மூங்கிலைப் பாருங்கள். தைல ஆவிபட்டு மூங்கிலே நிமிர்ந்து விட்டபின் அதுதானே பக்குவம்’’ ஏன்று நடந்தைக் கூறினார். அகத்தியரே சீடனின் நுட்பம் அறிந்து பரவசப்பட்டார். அதன்பின் அந்த தைலத்தை எடுத்து பாண்டிய மன்னன் முதுகில் தடவ கூன் நிமிர்ந்ததது.


ஒருநாள் யோகி ஒருவருக்குத் தீராத வயிற்று வலி. ஆசிரமம் வந்து அகத்தியரிடம் ‘வலி பொறுக்க இயலவில்லை. தயவு செய்து இந்த வயிற்று வலியை நீக்கவும் என வேண்ட, அகத்தியரும் மருந்து கொடுத்தார். ஆனால் வயிற்று நோய் தீரவில்லை. வலியால் வாடியவர்க்கு தேரையர் மருந்து கொடுத்தார். அதே மருந்துதான். ஒரு கொருக்கு குச்சி எடுத்து அதன் உள்ளீடற்ற ஓட்டை வழியாக யோகியின் பல்லில் படாமல் தொண்டைக்குள் மருந்தை செலுத்தினார். சிறிது நேரத்தில் யோகியின் வயிற்று வலி தீர்ந்தது.“குருவே, தங்களது மருந்து முதலில் பலம் இழந்து போனதற்குக் காரணம் யோகியின் பற்களில் இருந்த பாஷாணம். ஆகவே பல்லில் படாமல் கொருக்குக் குச்சி ஓட்டை வழியே மருந்தை தொண்டைக்குள் மருந்தை ஊற்றினேன்” என்றார் தேரையர்.


“தேரையரே, இனி நாம் இருவரும் ஒரே இடத்தில் இருப்பது நல்லதல்ல. நீர் தனியாக உமக்கு விருப்பமான இடத்துக்குச் செல்லாம்” என்றார். அகத்தியர் கூறியதைக்கேட்டு தேரையர் மிகவும் மனம் உடைந்து போனார். கவலையுடனே தனியாக மலைக்காடுகளில் அலைந்து மூலிகை இரசியங்களை மேலும் அறிந்தார்.இந்நிலையில் அகத்தியருக்குக் கண் பார்வை மங்கி போக, எல்லா சிகிச்சைகளும் பலனற்று போன நிலையில் சீடர்கள் அவரிடம் “ முனிவர் பெருமானே…, அநாயம் காட்டில் ஒரு முனிவர் இருக்கிறாராம். அவர் இறவ முலிகை இரகசியம் பலவற்றை அறிந்து வைத்துள்ளாராம். அந்த அற்புத சித்தரை இங்கு அழைத்து வருகிறோம்.தாங்கள் நிச்சியம் கண்பார்வை பெறுவீர்கள்’’


‘ அகத்திய முனிவர் தனது ஞான திருஷ்டியால் அந்த சித்தர் யார் என அறிந்து, மனத்திற்குள் ஒரு மெல்லிய புன்முறுவல் பூத்தார்.‘’அப்படியா… சீடர்காள் வேண்டுமானால் போய் அழைத்து வாருங்கள் அந்த சித்தரை. ஆனால் செல்லும் கடும் வெயில்.ஆகவே களைப்பு தீர புளிய மர நிழலில் ஓய்வெடுத்து விட்டுச் சென்று வாருங்கள்.” என்றார்..சீடர்களும் அகத்தினர் கூறியபடி புளியமர நிழலில் தங்கி, ஆறாவது நாளில் தேரையர் ஆசிரமம் வந்தடைந்தனர். அப்போது அவர்கள் இரத்த வாந்தி எடுத்து எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தனர்.. தேரையர் அவர்களைப் பார்த்தும் நடந்தைப் புரிந்துக்கொண்டார்..


“நீங்கள் உங்கள் என்று அஞ்ச வேண்டாம்.நான் உங்களோடு உங்களுக்குப் பின்னால் வருகிறேன். திரும்பிப் போகும் போது வேம்பு மர நிழலில் தங்கிச் செல்லுங்கள்” என்றார் தேரையர்.அவர்களும் அப்படியே செய்ய இரத்த வாந்தி நின்று தங்களுது உடல் நலம் பெற்று,வலுப்பெற்றதை உணர்ந்தனர். அதனி அகத்தியரிடமும் கூறினர்.அதே நேரம் தேரையரும் வந்து சேர்ந்தார். மூலிகை சாற்றை பிழிந்து அகத்தியரின் பார்வையை மீட்டுக் கொடுத்தார். ‘’மூலிகை இரகசியம் அனைத்தும் அறிந்த இந்த சித்தர் தேரையர்தானே” என்று புன்முறுவலோடு அகத்தியர் கேட்டதும் தேரையர் உள்ம் நெகிழ்ந்து போய் அவரது கால்களில் விழுந்து வணங்கி அவரை தழுவிக் கொண்டார்.


“ரொம்ப சந்தோஷம் தேரையரே.., நீர் முழு வைத்திராக்கிவிட்டீர். எனக்கு கண் ’வெடிச்சான்’ மூலிகை கொஞ்சம் தேவைப்படுகிறது. கொண்டு வருவீரா?’’ நீண்ட காலத்திற்குப் பின் குருநாதரிடம் திரும்பவும் நட்பு கொண்டநேரத்தில் மறுப்பு சொல்ல தேரையருக்கு மனம் ஒப்பவில்லை. அப்படியே கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அகன்றார்.அகத்தியர் கேட்ட மூலிகை சாதாரண மூலிகை இல்லை. கண் வெடிச்சான் மூலிகை மிகக் கொடிய மூலிகை.அதனை ஒடித்தால் உடனே குபுகுபுவென பொங்கும் ஆவியால் அடுத்த வினாடியே தன்னுடைய கண்பார்வை போய்விடும். குருநாதர் ஏன் தொடர்ந்து இப்படி சோதனைக்கு மேல் சோதனை செய்கிறார்! தாங்க இயலாது அளவுக்கு சோகம் முட்டியது தேரையருக்கு. பார்வையைக் கொடுத்த தனக்கே கண் பார்வை பறிப்பது எப்படி நியாயமாகும் என்று அம்பிகையை  நோக்கி வெம்பி புலம்பினார்

.

“தேரையரே, உன் கவலையை என்னிடம் சேர்த்து விடு.. உனக்குப் பதிலாக நானே அந்த மூலிகையை கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்று கூறி அந்த மூலிகையைக் கொண்டு வந்து கொடுத்தாள்.தேரையர் அதனை அப்ப்டியே கொண்டுபோய் அகத்தியரிடம் சேர்ப்பித்தார். அப்போது அகத்தியர் முகத்தில் எல்லையற்ற பரிபூரண சந்தோஷம் தென்பட்டது. ”’ தேரையரே, தங்கத்தை புடம் போடப்போட அதன் ஜோதி மிளிரும். அது போல உம்மைப் பலதடவை புடம் போட்டு மகா சித்தனாக்கி விட்டேன். நீர் இனி இந்த பூவுலகத்து மக்களின் துயரங்களை போக்க இரஸவாத வித்தை கொண்டு வெல்வீராக”அதனை ஏற்று அடர்ந்த காட்டினுள் சென்று ஆழமான பள்ளம் தோண்டி அதனுள் இறங்கி, ஒரு பாறையால் மூடி அந்த பள்ளத்தினுள் தவம் செய்ய ஆரம்பித்தார்.எத்தனை யுகம் தவம் இருந்தாரோ…. திடும்மென ஒருநாள் பாறை வெடித்தது. தவம் களைந்த தேரையர் கண் விழித்துப் பார்த்த போது சுற்றிலும் ஏராளமான ரிஷிகள்! ’’கல்பகோடி காலமாய் மக்களைக் காப்பாற்ற வேண்டிய இறவா வரம் பெற்ற மகோன்னதச் சித்தர் நீங்கள். மனிதர்களின் குணாதிசயங்கள் கண்டு மனம் வெதும்பி தனிமைச் சிறை இருப்பது முறையா?


“பிரபஞ்சவாசத்தின் பரிணாம வளர்ச்சி மாற்றங்களை ஞான வாசத்தின் மூலம் அறியும் ஆற்றலைப் பெற்றவர்கள் சித்தர்கள். தங்கம் செய்ய முயன்றேன். உலகத்தை விலை வாங்கவோ, ஆசையின் பாலுமில்லை. உயிர் வாழ்வதற்கு யோக நெறியில் இரசவாதம் செய்பவர்கள் தேவர்களுக்கும், சிவனுக்கும் ஓப்பானவர்கள். சித்தர்களுக்கு சமாதி நிலை ஒன்றும் புதியதல்ல. மாயத்தைக் கண்ட சித்தர் மதியதைப் பெருக்கிக் கொண்டு காயத்திலிருக்கும் போதே கர்த்தனைக் கலந்து கொண்டவர்கள். ஒரு பூரணத்துவம் வாய்க்கப் பெற்ற சித்தர் ஆன்ம ஞானத்தைப் பெருக்கிக்கொண்டு தம் உடலுடன் இருக்கும்போதே நினைவு., செயல் யாவற்றையும் துறந்து சிவனுடன் ஐக்கியமாய் விடுவர். இது பரத்தோடு சேர்ந்து பரம்பிரும்மாய் எங்கும் நிறைந்து விடுவர்”

என்று உபதேசித்த தேரையரை மற்ற சித்தர்கள் கைகூப்பி கட்டுண்டு வணங்கி நின்றனர்.

For theraiyar.jpg

எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


[ நன்றி - நூல் குறிப்பு உதவி :- இறவா வரம்பெற்ற சித்தர்கள், சித்தமெல்லாம் சிவம்]


--Geetha Sambasivam 04:56, 7 மார்ச் 2011 (UTC)



Contributors

Geetha Sambasivam

This page was last modified on 7 March 2011, at 09:03. This page has been accessed 4,277 times.