சித்தர் சிவப்பிரகாசர்மரபு விக்கி இருந்துகாணாமல் போனது ஏன்...? சோ.இராஜலட்சுமி
17ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற புலமையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சித்தர் சிவப்பிரகாசர். "கற்பனைக் களஞ்சியம்" என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்பட்டவர். 16, 17ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சூழலில் கன்னட சைவர்களான வீரசைவ மரபினரின் ஆக்கங்கள் அதிகம் கிடைத்தன. இவ்வீரசைவ மரபைச் சேர்ந்த சிவப்பிரகாசர், மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் ஆஸ்தானக் கவியாக இருந்தவர். சமயக் குரவர்களைப்போல வாதம் செய்து, அதில் வெற்றியும் கண்டதுதான் இவரின் தனிச்சிறப்பு. இவரைப் பற்றிய தொகைப்பாட ஒன்றில், - சிவப்பிரகாசர் (34) ஆகிய மூன்று சகோதரர் பற்றிய நூல்களைப் பட்டியலிடுகிறது. சிவப்பிரகாசரின் முப்பத்துநான்கு (34) நூல்களுள் மூன்று நூல்கள், 1. திருவெங்கையலங்காரம் முழுமையும் கிடைக்கவில்லை. "ஏசுமதநிராகரணம்" என்ற நூலில் மூன்று பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மற்ற நூல்கள் 19ஆம் நூற்றாண்டில் அனைத்தும் அச்சிற் பதிப்பிக்கப்பட்டுவிட்டன. 17ஆம் நூற்றாண்டில் கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வு சமய எதிர்ப்புகள். குறிப்பாக, சைவம் - கிறிஸ்தவம் இரண்டு சமயங்களுக்கிடையில் நிகழ்த்தப்பட்ட கருத்தாடல்கள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு சமயக் கருத்தை எதிர்த்து இன்னொரு சமயத்தார் வாதிடுகிற முறையில் அமைவன இக்கண்டன நூல்கள். - மறுப்பு இப்படி ஒரே இலக்கிய மாதிரிக்கு வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தினர். 16,17ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இராபர் டி நொபிலி (தத்துவ போதகர்) என்பவர் சமயத்தொண்டு புரிய 1606இல் தமிழகம் வந்தார். இந்துக்களை கிறிஸ்தவராக்குவது இவரது நோக்கம். மக்களைக் கவர சைவ உணவு, சந்தனம், பூணூல் பூண்டார். தம்மை அந்தணர் என்று சொல்லிக் கொண்டார். தத்துவ போதகர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். தமிழிலும், வடமொழியிலும் வல்லவரான இவர், வடமொழியில் "ஏசுரவேதம்" என்ற நூலை இயற்றி, கடவுளே செய்த "ஐந்தாம் வேதம்" என்று இந்துக்களை நம்பவைத்து, மதம் மாற்றினார். கிறிஸ்தவ மதத்தை ஏளனம் செய்தவர்களைக் கண்டித்து "தூஷ்ண திக்காகரம்" எனும் நூலைச் செய்தார். இதை எதிர்த்து துறைமங்கலம் சிவப்பிரகாசர், "ஏசுமதநிராகரணம்" எனும் நூலைச் செய்தார். இவ்விரண்டு நூலைத் தொடர்ந்து, கிறிஸ்தவம் - சைவம் ஆகிய இரு சமயத்துக்குமான சாடல்கள் தொடர்ந்தன. தத்துவ போதகர், ஏசுமதத்தை மறுக்கிறவர்கள் குறிப்பிடும் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான கருத்துருவாக்கங்களை இராபர் டி நொபிலி உருவாக்கிக்கொள்ளக் காரணமாக அமைந்தது சிவப்பிரகாசர் போன்றோரின் வாதங்களாக இருந்திருக்கக் கூடும். தமிழில் இப்படியான சமயக் கருத்தாடல்கள் பக்தி இயக்க காலத்திலிருந்தே கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. - அனல்வாதம் செய்தும், சுவடிகளை ஆற்றில் விட்டு எதிர்த்துவரச் செய்தும், எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியும் அன்றைய வைதிக சமயப் புரட்சியாளர் ஒருவர் (ஞானசம்பந்தர்) சமண, பெளத்த செல்வாக்கைச் சிதைத்தார். சிவப்பிரகாசரின் "ஏசுமதநிராகரணம்" இன்று காணாமல் போய்விட்டது! அப்போதைய ஆதிக்க சமயமாக, கிறிஸ்தவம் இருந்ததாலோ என்னவோ அந்நூல் காணாமல் போய்விட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது! 18, 19ஆம் நூற்றாண்டுகளில் சித்தர் சிவப்பிரகாசரின் மரபு தொடர்ந்தது. ஆறுமுகநாவலர் போன்றோர் ஆக்கங்கள் அதனை உறுதிசெய்யும். இராபர் டி நொபிலி போன்ற பாதிரிமார்களின் நூல்கள் இன்றும் கிடைக்க, அதனை எதிர்த்து (இந்துக்கள்) செய்த நூல்கள் மட்டும் ஏன் கிடைக்கவில்லை? எப்படிக் காணாமல் போனது? ஒவ்வொரு இலக்கியமும் தான் உருவாகும் காலத்திய அரசியல், சமூக, வரலாற்று இயங்கு தரவுகளோடு தொடர்புபடுத்தியே உருவாகியிருக்கிறது. மேற்குறித்த கண்டன நூல்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அவற்றை முழுதும் அறிவதற்கான தரவுகள் இன்று நம்மிடையே இல்லையே...!
நன்றி:- தினமணி --Ksubashini 18:44, 6 ஆகஸ்ட் 2011 (UTC) |