வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கனகாபிஷேஹம்

From மரபு விக்கி

(Redirected from சடங்குகள்)
Jump to: navigation, search

கனகாபிஷேஹம்:

Kanakabisheham.jpg


இந்தப்புகைப்படம் 1989-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி எங்க பையரின் உபநயனத்தன்று திடீர் ஏற்பாடாக என் மாமனாருக்கும் மாமியாருக்கும் கனகாபிஷேஹம் செய்யப் பட்டபோது எடுத்த படம். பொதுவாய்க் கனகாபிஷேஹம் என்பது பிள்ளை வயிற்றில் பிறந்த ஆண் குழந்தைக்கும் திருமணம் ஆகிக் கொள்ளுப் பேரனோ, கொள்ளுப்பேத்தியோ பிறந்தால் செய்வார்கள். ஆனால் எங்க பையருக்கோ அப்போது பதினோரு வயது தான். என் பெரிய நாத்தனார் பெண்ணுக்குத் திருமணம் ஆகிக் குழந்தை பிறந்திருந்தாள். ஆகவே அதைமுன்னிறுத்தி என அப்பா ஏற்பாடு செய்தார். கனகாபிஷேஹம் ஆரம்பிக்கும் முன்னால் வைதீக சங்கல்பம் செய்துவிட்டுப் பின்னர் ஒரு சல்லடையில் அனைவரும் அவரவர் நகைகளைப் போட்டோம். தாலிச் சங்கிலி தவிர்த்த எந்த நகையை வேண்டுமானாலும் போடலாம். குடத்தில் ஜலம் நிரப்பி அதில் மந்திரங்கள் சொல்லிப் புனிதமாக்கிப் பின்னர் நகைகளோடு கூடிய சல்லடையைத் தம்பதிகள் தலை மேல் பிடித்துக்கொண்டு அபிஷேஹம் நடக்கும். அபிஷேஹப் படங்கள் வீணாகிவிட்டன. கொஞ்சம் பார்க்கும்படி இருப்பது இதுதான்.


--Geetha Sambasivam 04:07, 14 டிசம்பர் 2010 (UTC)

Contributors

Ksubashini

This page was last modified on 18 December 2010, at 07:51. This page has been accessed 3,481 times.