கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அடுத்த திட்டங்கள்:

1. சித்த மருத்துவக் கல்லூரி

2. கலை--அறிவியல் கல்லூரி

3. மருத்துவம்/மருந்தியல் சார்ந்த கல்விகள்

கோவிலூர் திருமடத்தின் ஆதரவில் நடைபெற்று வரும் மாண்டிசோரிப் பள்ளிகள்:

1. மாதிரி மாண்டிசோரிப் பள்ளி --சென்னை

2. முக்தி ராமலிங்க ஆண்டவர் மாண்டிசோரி -- கோவிலூர்

3. கம்பன் அறநிலை --மாண்டிசோரி -- காரைக்குடி

4. கோவிலூர் ஆண்டவர் மாண்டிசோரி --ரிஷிகேஷ்

5. வள்ளியம்மை ஆச்சி டிரஸ்ட் - மாண்டிசோரி  --புது வயல்

6. வள்ளியம்மை ஆச்சி டிரஸ்ட் - மாண்டிசோரி --புதுவயல்

7. என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.  --மாண்டிசோரி --தேவகோட்டை

8. கோவிலூர் ஆண்டவர் மாண்டிசோரி --அரியக்குடி


சமுதாயப் பணிகள்

கோவிலூர் ஆதீனம் குரு மகா சந்நிதானம் சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிகர் அவர்களின் பொருள் உதவியுடன் நடந்து வரும் சமுதாயப் பணிகள்.

1. கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர்க்கு உதவித் தொகையாக மாதம் ரூ. 250/- வழங்கி வருகிறார்கள்.  தற்போது ஏறக்குறைய 650 முதியோர்கள் பயன்பெறுகிறார்கள்.  தொகை ரூ. 350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இதனை 1000 நபர்கள் வரை வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்கள்.

2. கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக, கோவில் சார்ந்த கலைகள் கற்கும் மாணவர்கள் 150 பேருக்கு உண்டி உடை உறையுள் தந்து இலவசக் கல்வியும் தந்து உதவுகிறார்கள்.

3. நம் திருமடங்களில் ஏறக்குறைய 50 மாணவர்கள் தங்கிப் பள்லிகட்கு சென்று படித்து வருகிறார்கள்.

4. கடந்த ஆறு ஆண்டுகளாக , ஆண்டு ஒன்றிற்கு ஏற்க்குறைய அறுபது லட்சம் ரூபாய் வரையில் மாணவர்களின் மேற்படிப்பிற்காக திருப்பித் தரும் வட்டியில்லாக் கடன் உதவி செய்து வருகிறார்கள்.  இதுவரை மூவாயிரத்திற்கும் மேலான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

5.  ஆறு ஆண்டுகளாக ஆண்டிற்கு 300-க்கும் மேலான ஏழைப்பெண்கள் திருமணத்திற்கு ரூ. 5000/- வீதம் உதவி வருகிறார்கள்.

குரு மகா சந்நிதானம் சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் அருள் ஆசியாலும் பொருள் உதவியாலும் நடந்துள்ள கட்டிடப் பணிகளின் விபரம்

1999 திருவண்ணாமலையில் ஆறு அறைகளும் -- 60 பேர் தங்கக் கூடிய ஒரு பெரிய ஹாலும் கொண்ட விருந்தினர் மாளிகை. (15 லட்சம்)

2001 அக்டோபர் மாதம் : கோவிலூர் --18 அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகை (32 லட்சம்)

       தியான மண்டபம் + மேல் தளத்தில் உள்ள இரு சிறப்பு விருந்தினர் அறைகள் (6 லட்சம்)
        16 வீடுகள் கொண்ட சிப்பந்திகள் குடியிருப்பு (19 லட்சம்)

2002 ஏப்ரல்  கிழக்கு ரத வீதியில் இரண்டு ஹால்கள் (தற்போது உடற்பயிற்சிக் கல்லூரியின் உடற்பயிறிசித் தளமும் (Multi Gym) நூலகமும் --சிர்பக் கல்லூரியும் உள்ளன.  (30 லட்சம்)

2002 மே  கோவிலூர் ஆண்டவர் திருமண மண்டபம் (65 லட்சம்)

2002 அக்டோபர்  கோவிலூர் வடக்கு ரத வீதியில் 2 ஹால்கள் (தற்போது உடற்பயிற்சிக் கல்லூரியின் ஆய்வுக் கூடங்களும், கேட்டரிங் கல்லூரியும் உள்ளன. (Catering College)  (35 லட்சம்)

2003 ஏப்ரல்  கோவிலூர் கிழக்கு ரத வீதியில் தற்போது கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சிக் கல்லூரி உள்ள கட்டிடம் (22 லட்சம்)

2003 ஜூன் சிதம்பரம் கல்யாண மண்டப உணவு மண்டபம் (29 லட்சம்)

2003 அக்டோபர் கோவிலூர் மேற்கு ரத வீதியில் உள்ள 2 ஹால்கள் (தற்போது ஶ்ரீலஶ்ரீ முக்தி ராமலிங்க ஆண்டவர் பள்ளி உள்ளது. (35 லட்சம்)

2004 ஏப்ரல் கோவிலூர் முதன்மை சாலையில் இருந்து கோவிலைச் சுற்று கான்க்ரீட் சாலை (18 லட்சம்)

2004 மே  திருக்களர் மடம்--(6 அறைகள், 4 சிறிய ஹால்கள், உணவு மண்டபம் போன்ற வசதிகளுடன் புதிதாகக் கட்டித் திறக்கப் பட்டது. ) (45 லட்சம்)

2004 திருவண்ணாமலையில் 8 கடைகள் (6 லட்சம்)

2005 ஏப்ரல்  சிதம்பரம் பொன்னம்பல சாமி திருமண மண்டபம் உணவுச் சாலைக்கு மேல் 12 அறைகளும் + 30 பேர் தங்கக் கூடிய ஒரு ஹாலும் கட்டப் பெற்றது. (30 லட்சம்)


கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சிக் கல்லூரி

2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சிக் கல்லூரி கோவிலூரில் தேவையான அனைத்து அரசு+பல்கலைக் கழக அனுமதிகளுடன் தொடங்கப் பெற்று நடந்து வருகிறது.  இது தற்போதுள்ள கட்டிடங்களில் நடைபெற்று வருகிறது  12.5 ஏக்கர் பரப்பளவில் இதற்கான விளையாட்டுத் திடல்களும் ஓடு களமும் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

முனைவர் ஏ.எம். மூர்த்தியை (முன்னாள் கல்வித்துறைத் தலைவர், அழகப்ப பல்கலைக் கழகம்) முதல்வராகக் கொண்டு ஐந்து ஆசிரியர்களுடன் முப்பத்தொரு மாணவர்களுடனும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.  

தேவையான அனைத்து ஆய்வுக் கருவிகளும், உபகரணங்களும் நூலகமும் அமைக்கப் பெற்றுள்ளன.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டியற் பல்கலைக் கழகத்தின் சார்பில் கல்லூரிகட்கு இடையேயான தடகளப் போட்டி கோவிலூரில் நடைபெற்றது.

குருமகாசந்நிதானம் தலைமை ஏற்க அழகப்பா பல்கலைக் கழகத் துனை வேந்தர் பேரா. முனைவர் பி. இராமசாமி அவர்கள் போட்டிகளைத் துவக்கி வைத்தார்கள்.  தமிழகத்திலுள்ள பதினொரு உடற்பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து ஏறக் குறையை இருநூறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினார்கள்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.  சுவாமிகள் ஆசி வழங்க, அழகப்பா பல்கலைக் கழகத் துணை வேந்தர் தொடக்க உரை நிகழ்த்தினார்.  16 ஆம் தேதி தவத்திரு சுவாமிகள் தலைமை தாங்கி ஆசி வழங்கினார்கள்.  தமிழ்நாடு உடற்பயிற்சிக் கல்விப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பேராசிரியர் திருமலை சாமி அவர்கள் பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.  அழகப்பா பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் முனைவர் தண்டபாணி அவர்கள் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசினார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கல்வியியற் தலைவர் பேராசிரியர் முனைவர் வைத்தியநாதன் அவர்கள் வெற்றியாளர்களைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.  கல்லூரியின் தாளாளர் மெய்யப்பன் நன்றி கூறினார்கள்.

விழாவும் போட்டிகளும்மிகச் சிறப்பாகவும் திறமையாகவும் நடை பெற்றதாக எல்லாராலும் பாராட்டப் பெற்றன.


--Geetha Sambasivam (பேச்சு) 09:52, 24 டிசம்பர் 2013 (GMT)

[[பகுப்பு;கோவிலூர் ஆதீனம்]]

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 25 டிசம்பர் 2013, 09:53 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,534 முறைகள் அணுகப்பட்டது.