வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 29

From மரபு விக்கி

Jump to: navigation, search
திருக்களர் கோ.ஆ.வீர. மடம்

திருக்களர்--மன்னார்குடி வட்டம்--தஞ்சை மாவட்டம்

கோவிலூர் ஆதீனத்தின் கிளை மடங்களில் இது தனிச் சிறப்பு உடையது.  இத்தலத்தின் பெயரால், கோவிலூர் ஆதீன கர்த்தர்களுள் ஒருவரான வீரப்ப ஞான தேசிகர் அவர்கள், கோவிலூர் ஆண்டவரென வழங்கப் பெறுகிறார்கள்.  திருக்களர் ஆண்டவருடைய சமாதிக் கோவில் திருக்களரில் உள்ளது.

கோச்சடைய வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சீவல்லபதேவற்கு யாண்டு இருபத்தஞ்சாலு மேவு நாயிற்றுப் பூர்வபக்ஷத்து ஏகாதிசியும் சனிக்கிழமையும் பெற்ற மகத்து நாள் பாண்டி மண்டலத்து மிழலைக் கூற்றத்து "ஒக்கூருடையார்" என்று திருக்களர்க் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது.  எனவே நகரத்தார்க்கும் , திருக்களர்க்கும் தொன்மையான தொடர்பு இருந்தது என்று தெரிகிறது.

இந்த மடம் சிறந்த முறையில் இயங்கி வருகிறது.  ஶ்ரீ கிருஷ்ணாநந்த சுவாமிகள் அவர்கள் மடாதிபதியாக இருந்து மடத்திற்குச் சொந்தமான நில வளங்களைப்போற்றிக் காத்து வளர்த்தார்கள்.

திருக்களர் ஆண்டவர் அதிஷ்டானத்திற்கும் அருள்மிகு அமிர்தவல்லி உடனாய பாரிஜாத வனேஸ்வரர் திருக்கோவிலுக்கும் திருப்பணிகள் செய்து 1971-இல் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்கள்.

மருதவனம் அருள்மிகு மருதவனேஸ்வரர் திருக்கோவிலுக்கும் 1973-இல் கும்பாபிஷேஹம் செய்து வைத்தார்கள். 

இவர்க்குப் பின் தஞ்சாவூர் கிருஷ்ண சுவாமிகள் மடத்தின் தலைவராக இருந்து பரிபாலித்தார்கள். தற்போது இம்மடம் கோவிலூர் மடாதிபதி அவர்களின் நேரடி மேற்பார்வையில் உள்ளது.



--Geetha Sambasivam (பேச்சு) 12:38, 4 ஜூலை 2014 (GMT)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 4 July 2014, at 12:38. This page has been accessed 1,614 times.