வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 14

From மரபு விக்கி

Jump to: navigation, search
உகந்தலிங்க ஞானதேசிக சுவாமிகள் மடம்

(கோ.ஆ.பொ.மடம்)

பொருள் வைத்த சேரி ----சிக்கல்

காலடியில் தோன்றிய ஆதிசங்கர அத்வைத மரபில் வந்தவர்கள், உகந்தலிங்க ஞான தேசிக சுவாமிகள் அவர்கள்.  சுவாமிகளின் காலம் 1770--1819. இவர்களிடமே கோவிலூர் ஆண்டவர் வேதாந்த நூல்களைப் பயின்றார்கள்.  1819-இல் இம்மடம் கோவிலூர் ஆண்டவரால் கட்டப்பெற்றது.  அதன் பின்னர் 42 ஆண்டுகள் வீரபத்திர சுவாமிகள் இந்த மடத்தின் தலைவராக இருந்தார்கள்.

திருக்களர் ஆண்டவரின் மாணவர் மெய்யப்ப ஞானதேசிகர் காலத்தில் சொர்ணபுரீசுவரர்--செளந்தரிய நாயகி அம்பாள் கோவிலுக்கு ஒன்றேகால் லட்சம் ரூபாய் செலவில் (1910 ஆம் ஆண்டு அளவில்) திருப்பணி செய்தார்கள்.  மடத்தைப் புதுப்பிக்கவும் விரிவாக்கிக் கட்டவும் ரூ. 50,000/- செலவிட்டார்கள். விளை நிலங்களும் வாங்கினார்கள்.

1910-இல் முடிவு பெற்ற திருப்பணிக்குக்  கோவிலூர் ஆதீனகர்த்தர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகள் சொல்லியவாறு காரைக்குடி நா.வ. மெய்யப்பச் செட்டியாரும், நகரத்தார் பலரும் பெரும் பொருள் வழங்கினார்கள்.   காரைக்குடி சா.நா.அ..சொ. சொக்கலிங்கம செட்டியார் உதவிய பொருளைக் கொண்டு விநாயகர், துர்க்காம்பாள் கோவில்கள் கட்டப்பெற்றன.  மீண்டும் திருப்பணி வேலை நடைபெற்றுக் கும்பாபிஷேஹம் 19--5--1929--இல் செய்யப் பெற்றது.

கோ.ஆ.பொ. மடாலயத்தின் பொருளைக் கொண்டு சொர்ணபுரீசுவரர் கோயிலும், உகந்த ஞான தேசிகர் கோவிலும் புதுப்பிக்கப் பெற்று 1961--இல் கும்பாபிஷேகம் செய்யப் பெற்றது.

இந்த மடத்தின் தலைவராக இருந்திருப்பவர்கள் வருமாறு :-

1. வீரபத்திர சுவாமிகள்

2. சிங்காரவேல் சுவாமிகள்

3. முத்தைய சுவாமிகள்

4. சட்டையப்ப சுவாமிகள்

5. மாரிமுத்து சுவாமிகள்

6. மெய்யப்ப சுவாமிகள்

7. கோவிலூர் ஆதீனம் (ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர சுவாமிகள்)

8. இராமலிங்க சுவாமிகள்

1997-இல் சோம. இராமலிங்க சுவாமிகள் பரிபூரணம் அடைந்த பின்னர், கோ.ஆ.பொ. மடம், கோவிலூர் ஆதீனகர்த்தர் நேரடி மேற்பார்வையில் இருந்து வருகிறது.  2002-இல் கும்பாபிஷேஹங்கள் நடைபெற்றன.  2003-இல் விருந்தினர் மாளிகை கட்டிச் செயல்பட்டு வருகின்றன.  (இவை குறித்துத் தனியே செய்திகள்)


--Geetha Sambasivam (பேச்சு) 08:51, 25 ஜனவரி 2014 (GMT)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 25 January 2014, at 08:51. This page has been accessed 1,675 times.