கோதுமை மாவு பரோட்டா

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
 தேவையான பொருட்கள்:  நான்கு நபர்களுக்கு

இரண்டு கிண்ணம் கோதுமை மாவு

கொஞ்சம் போல் உப்பு,
நல்லெண்ணெய்,

நீர் பிசையத் தேவையான அளவுக்கு


கோதுமை மாவைக் கொஞ்சம் போல் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைக்கவும்.

தொட்டுக்கொள்ள சைட் டிஷ்:

உருளைக்கிழங்கு,

வெங்காயம்

தக்காளி,

பச்சைப்பட்டாணி(தேவையானால்)

பச்சை மிளகாய்,

இஞ்சி, 

கருகப்பிலை,

மஞ்சள் பொடி,

உப்பு தேவையான அளவுக்கு

மிளகாய்த் தூள்

லவங்கம் (கிராம்பு)

லவங்கப்பட்டை,

ஏலக்காய்,

பச்சைக் கொத்துமல்லி


வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், கருகப்பிலை, இஞ்சி போன்றவற்றையும் நறுக்கிக் கொள்ளவும். . கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் தாளித்துக் கொண்டு இஞ்சி ப,மி, கருகப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கி வெங்காயத்தைச் சேர்த்துப்பொன்னிறமாக வதக்கவும்.  பின்னர்  தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கிக் கொண்டு, வெந்த உருளைக்கிழங்கில் அரை டீஸ்பூன் மி.பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு நீர் விட்டுக் கலந்து உதிர்த்தாப்போல் வதக்கிய தக்காளியில் கொட்டிக் கலந்து தேவையான உப்புச் சேர்க்கவும்.  இறக்கும் முன்னர் லவங்கம், லவங்கப்பட்டை, ஏலக்காய் வறுத்துப் பொடித்த தூள் ஒரு கால் டீஸ்பூன் சேர்த்துக் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும்.

இப்போப் பரோட்டா.


இதான் பிசைந்த மாவு.     மாவை எடுத்துக் கொண்டு உருட்டி அதில் வெண்ணெய் தடவி மடித்துப் போட வேண்டும்.  மீண்டும் வெண்ணெய், மடித்துப் போடணும்.  இம்மாதிரி நான்கைந்து முறையாவது வெண்ணெய் தடவி மடித்துப் போட்டால் நன்கு உள்ளே லேயர் லேயராக வரும். வெண்ணெய் தடவிக் கீழே பார்க்கலாம்.


இது வெண்ணெய்னு சொல்லித் தெரியவேண்டாம். :))))))


வெண்ணெய் தடவி இரண்டு மூன்று முறை மடித்துப் போட்டாச்சு.  மடித்ததைக் கடைசியில் இப்படிக் கீழே காண்கிறாப்போல்  நீள வாட்டத்தில் சுருட்டணும்.



சுருட்டினதை நீள வாட்டத்திலே எடுத்து அப்படியே மடிக்கணும்.  கீழே பாருங்க.


இந்த மாதிரி உள்ளுக்குள்ளே மடிப்புக்களோடு சுருட்டணும்.  சுருட்டியதை அப்படியே மீண்டும் குழவியால் சமன் செய்து இடணும். 


இட்டதை காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல்லில், (  சப்பாத்திக்குத் தனிக்கல், தோசைக்குத் தனிக்கல் என இருந்தால் நலம்.) கொஞ்சம் போய் அடியில் நெய் தடவிப் பரத்திவிட்டுப் போடணும்.  உடனடியாக வேக எண்ணெயோ அல்லது நெய்யோ(நெய்யே நல்லா இருக்கும், முடியாதவங்க நெய்யோடு கடலை எண்ணெய் கலந்துக்கலாம்.) விடக் கூடாது.  ஒரு பக்கம் வெந்து இம்மாதிரி உப்பி வரும்.  அப்போ மறுபக்கம் திருப்பிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து நெய் ஊற்றினால், நன்கு உப்ப ஆரம்பிக்கும்.



உங்கள் பரோட்டா வெந்து கொண்டிருக்கிறது.  விரைவில் ரெடியாயிடும்.  சாப்பிட வாங்க. 

--Geetha Sambasivam (பேச்சு) 12:26, 4 ஜூன் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=கோதுமை_மாவு_பரோட்டா&oldid=12812" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 4 ஜூன் 2014, 12:27 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,311 முறைகள் அணுகப்பட்டது.