கொங்காலம்மன் திருக்கோவில் - ஈரோடுFrom மரபு விக்கி
* அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோவில் - ஈரோடு.
மூலவர் : கொங்காலம்மன் (கொங்கலாயி)
இது தவிர கருப்பண்ணசாமி கோயில், கன்னிமார், பேச்சியம்மன், காட்டேரி, முனியப்பன், வீரபத்ரன் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியாக சிறிய கோயில்கள் உள்ளது.
இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக பெரிய அரசமரம் உள்ளது. இந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு ¬முன் இக்கோயிலின் திருப்பணிக்காக தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பூமிக்கு அடியில் குழி தோண்டப்பட்டது. அப்போது அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய இரண்டரை அடி உயரம் உள்ள செப்பினால் செய்யப்பட்ட அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையையும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். பொது கோயில்: கொங்கு நாட்டில் உள்ள கோயில்களில் கொங்கலம்மன் கோயில் ¬முக்கியமானது. எனவே இந்த கோயிலை சமுதாய பொது கோயில் என்பர். கொங்கு நாட்டு கூட்டம் பல சமயங்களில் இங்கு நடந்துள்ளது. பல சமுதாய ஒப்பந்தங்கள் இங்கு எழுதப்பட்டுள்ளன. நீதி கிடைக்காதவர்கள் இங்கே வந்து நீதி கேட்டு போராடியுள்ளனர். ஆண்களும் பெண்களும் கொங்கலம்மன் பெயரை இன்றளவும் வைத்து வருகின்றனர். மூன்று நிலை புதிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் அழகாக காணப்படுகிறது. கோயிலின் உட்சென்றால் பலிபீடம், கொடிமரம், சிம்மவாகனம், கல்தூண்களில் அமைந்த தூரிக்கல் உள்ளது. இந்த தூரிக்கல் 1815ம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது.
தல வரலாறு: இந்த கோயிலில் இருந்த கொங்கலம்மனை சிலர் தங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காக மாட்டு வண்டியில் திருடி சென்றனர். வெப்படை ஆனங்கூர் அருகே சென்ற போது, வண்டியின் அச்சு முறிந்தது. இதையடுத்து அம்மனை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் ஓடிவிட்டனர். ஆனங்கூர் மக்கள் இந்த அம்மன் சிலையை பார்த்து பரவசமடைந்து அங்கேயே பிரதிஷ்டை செய்து தெய்வமாக வழிபட்டனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட ஈரோடு மக்கள் ஆனங்கூர் சென்று கொங்கலம்மனை வழிபட்டனர். இது ஆதி கொங்கலம்மன் என்றழைக்கப்படுகிறது. இந்த அம்மன் 12 கைகளுடன் காட்சி தருகிறார். இந்த கைகளில் சூலம், உடுக்கை, பாம்பு, வேதம், மணி, கபாலம் போன்றவை இடம் பெற்றுள்ளது. இந்த அம்மன் சிலையை பார்த்த மக்கள் ஈரோட்டில் புதிதாக ஒரு அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினர். ஈரோட்டில் பிற கோயில்களில் விழாக்கள் கொண்டாடும் போது காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் முதல் தீர்த்தம் கொங்கலம்மனுக்கு அபிஷேகம் செய்த பின்னர் தான் மற்ற கோயில்களுக்கு கொண்டு செல்வது வழக்கத்தில் உள்ளது.
சிறப்பம்சம்:
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:42, 22 ஏப்ரல் 2011 (UTC) நன்றி - தின மலர்.
|
