கெஸ்ஸி (மங்களுர் ஸ்பெஷல்)From மரபு விக்கிஉமா சண்முகம்
வெங்காயம் - 1 பூண்டு – 10 பல் தனியா – ஸ்பூன் வெந்தயம் - 10 காய்ந்த மிளகாய் – 4 புளி - தேவையான அளவு வெல்லம் - சுவைக்கு ஏற்ப தேங்காய் (துருவியது) – 1/2 கப் வேகவைத்த துவரம் பருப்பு – 1கரண்டி உப்பு எண்ணெய் – தேவையான அளவு கரம் மசாலா – 1சிட்டிகை
செய்முறை
1.குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், முளை கட்டிய பயிறு, 3 பல் பூண்டு போட்டு ஒரு விசில் விட்டு இறக்கவும். 2.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா, மீதி இருக்கும் பூண்டு போட்டு வதக்கவும். 3.இந்தக் கலவையோடு தேங்காய், புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். 4.இப்போது குக்கரைத் திறந்து அரைத்த கலவையைப் போட்டு ஒரு கொதி விட வேண்டும். 5.இறக்கும் போது துவரம் பருப்பு, தேவையான அளவு உப்பு, கரம் மசாலா போட்டுத் தாளித்துக் கலக்கவும்.அதன் பிறகு வெல்லம் சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி இலையை தூவவும். சாதம் தோசைக்கு இது சூப்பர் காம்பினேஷன்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 01:56, 25 அக்டோபர் 2011 (UTC) நன்றி - வல்லமை |