குல்ஃபி செய்வது எப்படி!மரபு விக்கி இருந்துநல்ல சுத்தமான பாலாக மூன்று லிட்டர், பாதாம் பருப்பு ஐம்பது கிராம், பிஸ்தா ஐம்பது கிராம், முந்திரிப்பருப்பு ஐம்பது கிராம். ஏலக்காய், தேவை எனில் வனிலா எசென்ஸ் அல்லதுபாதாம்/பிஸ்தா எசென்ஸ் ஏதேனும் ஒன்று. பாலில் ரிச்னெஸ் கம்மியாக இருந்தால் கஸ்டர்ட் பவுடர் வெனிலா ஃப்ளேவரில் வாங்கவும். மேலே தூவ பாதாம், பிஸ்தா, முந்திரியை நன்கு சீவி இரண்டு டேபிள் ஸ்பூன் வைச்சுக்கவும். இது தனி மேலே சொன்னது தனி.
நாளைக்குக் குல்ஃபி தயாராக இருக்கணும்னா இன்னிக்கே பாதாம், பிஸ்தா, முந்திரியை நீரில் ஊற வைச்சுக்கவும். மறுநாள் மூன்று லிட்டர் பாலையும் நன்கு காய்ச்சி அரை லிட்டராகக் குறுக்கவும். அல்லது குறைந்த பக்ஷமான முக்கால் லிட்டருக்குள் குறுக்கிக் கொள்ளவும். ஊற வைத்த பாதாம், பிஸ்தா, முந்திரியை நன்கு அரைத்துப் பாலில் கலக்கவும். சர்க்கரை சேர்க்கவும். எசென்ஸ் ஏதேனும் ஒன்று சேர்க்கவும். எசென்ஸ் சேர்த்தால் ஏலக்காய் வேண்டாம். ஆனால் ஏலக்காயே நன்றாக இருக்கும். பின்னர் கலந்த பாலை நன்கு ஆற வைத்து குல்ஃபி மோடில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் வைக்கவும். அநேகமாய் இரண்டு மணி நேரத்தில் தயாராகி விடும். இல்லை எனில் உங்களுக்கு என்று தேவையோ அதற்கு முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வெளியே எடுத்து இரண்டு நிமிடத்தில் குல்ஃபிக்களை அப்படியே வெளியே எடுக்கலாம்.
கஸ்டர்ட் சேர்த்துச் செய்வது. பாலைக் காய்ச்சிக் குறுக்கும் முன்னர் அரைக் கிண்ணம் பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைப் போட்டுக் கலக்கவும். பின்னர் ஒரு கிண்ணம் பாலைத் தனியாக அடுப்பில் வைத்து அதில் இந்தக் கஸ்டர்ட் கலவையைப் போட்டுக் கொஞ்சம் வெண்ணெயும் (ஒரு டேபிள் ஸ்பூன் போல)போட்டுக் கிளறவும். கெட்டியாக ஆகும். இதை மிக்சியில் போட்டு அடித்துக்கொள்ளவும். இப்போது கீழே இறக்கிக் குறுக்கி வைத்திருக்கும் பாலில், அரைத்த பருப்புக்களோடு கலக்கவும். பின்னர் குல்ஃபி மோடில் ஊற்றவும். இதற்கு வனிலா ஃப்ளேவர் இருப்பதால் ஏலக்காயோ, வேறு எசென்சோ சேர்க்க வேண்டாம். எனினும் ருசியில் மாறுபாடு இருக்கும்.
--Geetha Sambasivam 09:06, 9 டிசம்பர் 2012 (UTC) |

