வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கீரை ஒட்ஸ் பொரியல்

From மரபு விக்கி

Jump to: navigation, search

கே.வீ.விக்னேஷ்


எனக்கு கீரை ரொம்ப பிடிக்கும் அதுவும் தஞ்சாவூர் கும்பகோணம் பக்கத்தில் கிடைக்கும் கீரை வகைகள் ரொம்ப பிரமாதமாக இருக்கும். உங்களுக்கு விருந்து/மருந்து இங்கே.


தேங்காய் சேர்த்துக்கலாம். அவர் அவர் விருப்பம். கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் நோ தேங்காய்.
எதாவது ஒரு வகை கீரையினை தினமும் சமையலில் சேர்த்து கொள்வதால் உடலிற்கு நிறைய சத்துகள் கிடைக்கின்றது.அதிலும் கீரையுடன் ஒட்ஸ் சேர்வதால் கூடுதல் சத்துகள் கிடைக்கின்றது.அரிசிக்கு பதிலாக ஒட்ஸுனை சேர்ப்பதால், உடல் இளைக்க, வயதனவர்கள், டயபெடிக், என பலருக்கும் எற்ற நல்ல உணவு.


தேவையான பொருட்கள் :

கீரை – 1 கட்டு

ஒட்ஸ் – 1/2 கப்

எண்ணெய் – 1 தே.கரண்டி

கடுகு – தாளிக்க

பூண்டு – 2 பல்

காய்ந்த மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு


செய்முறை :-

கீரை சுத்தம் செய்து பொடியாக வெட்டி கொள்ளவும்.v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கீரை + உப்பு சேர்த்து வதக்கி, தட்டு போட்டு மூடி வேகவிடவும்.v ஒட்ஸினை ஒரு சிறிய கடாயில் போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

மிக்ஸியில் பூண்டு + காய்ந்த மிளகாய் போட்டு பொடித்து கொள்ளவும். அத்துடன் ஒட்ஸ் சேர்த்து ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.

கீரை நன்றாக வெந்தபிறகு, பொடித்த ஒட்ஸினை போட்டு மேலும் 1 நிமிடம் வதக்கவும்.

சுவையான கீரை ஒட்ஸ் பொரியல் ரெடி.


கீரை பொரியலுக்கு எப்பொழுதும் தண்ணீர் சேர்த்து வேகவைக்க தேவையில்லை. கீரையில் இருந்தே தண்ணீர் வெளிவரும்.முருங்கைகீரை, அகத்திகீரை, தண்டுகீரை போன்றவற்றில் இந்த மாதிரி பொரியல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

Contributors

Ksubashini

This page was last modified on 4 February 2010, at 17:21. This page has been accessed 3,127 times.