வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கிறிஸ்துமஸ் கேக்

From மரபு விக்கி

Jump to: navigation, search

உமா சண்முகம்


தேவையான பொருட்கள்;-


மைதா மாவு -300 கிராம்

பேக்கிங் பவுடர் -3 டீஸ்பூன்

சோடா உப்பு -1/2 டீஸ்பூன்

வெண்ணெய் -200 கிராம்

பொடித்த சர்க்கரை -250 கிராம்

முந்திரிப்பருப்பு -50 கிராம்

உலர்ந்த திராட்சை -50 கிராம்

செர்ரி -50 கிராம்

முட்டை -3

பிஸ்தா பருப்பு -50 கிராம்

சுல்தானாஸ் -50 கிராம்

கேக் மசாலா -1 டீஸ்பூன்

கோக்கோ -1 டீஸ்பூன்

பால் -100 மில்லி

வென்னிலா எஸ்சென்ஸ் -சில துளிகள்


செய்முறை :


1.மைதா மாவு பேக்கிங் பவுடர் சோடா உப்பு கேக் மசாலா இவைகளை ஒன்றாக

கலந்து இரண்டு மூன்று முறை சலிக்கவும்.

2.பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும்.முட்டைகளை உடைத்து

ஊற்றி நுரைக்க அடிக்கவும்.

3.குழைத்த கலவையுடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.

4.மைதா மாவில் ஊற்றி விரல் நுனிகளால் எல்லாம் ஒன்று சேரும்படி கலக்கவும்.

5.இவற்றில் கோக்கோ பால் காரமல் சர்க்கரை எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.

6.கடைசியாக மாவு தூவிய செர்ரி பழங்கள் உலர்ந்த திராட்சை சுல்தானாஸ்

முந்திரிப்பருப்பு சேர்த்து பேக்கிங் ட்ரெயில் ஊற்றி ஒவனில் வைத்து பேக் செய்யவும்.

7.வெந்ததும்வெளியில் எடுத்து விரும்பியபடி ஐசிங் அல்ங்காரம் செய்யலாம்.






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:59, 17 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 17 September 2011, at 02:59. This page has been accessed 1,944 times.