வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 005

From மரபு விக்கி

Jump to: navigation, search
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

 

[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]

 


         இதுவரை எழுத்துகள் முழுமையும் பார்த்தோம். இனி, நேரடியாகக் கல்வெட்டுகளின் மூலவடிவத்தில் எழுத்துகளை இனம் கண்டு, படிக்கும் பயிற்சி தொடங்குகிறது. முன்பே குறிப்பிட்டவாறு, பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என மூவகை வடிவங்களைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். தமிழ் எழுத்துகளைப் பொதுமைப்படுத்தி, முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 985) எழுத்து வடிவங்களையே நாம் பயின்றோம். இக்கால எழுத்துகள் திருத்தமான வடிவும் அழகும் அமையப்பெற்றவை.  இவற்றை மையமாகக் கொண்டு பயின்றால், இதன் காலத்துக்கு முன்பு, பின்பு என எழுத்துகளின் வடிவ மாறுபாட்டைக் கண்டுணர்ந்து  பயிற்சி பெறுதல் எளிது. எனவே, தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டு எழுத்துகளில் நம் பயிற்சி தொடங்குகிறது.




கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 005-Kalvettu27.JPG




எழுத்துகளைப் படித்துத் தனியே எழுதிவைத்துக்கொண்டு, கீழே தரப்பட்ட கல்வெட்டின் பாடத்தோடு உங்கள் பயிற்சியை ஒப்பிடுக.

கல்வெட்டின்  பாடம்




த்து ஏழு கழஞ்சேய் முக்காலே நாலு ம
த்து எண் கழஞ்சு-ஒற்றை கங்கி(ல்)
பள்ளித்தொங்கல் மகுடங்கள் திருப்ப
ழஞ்சேய் முக்காலே யிரண்டு மஞ்சாடி
சேய் முக்கால் திருப்பள்ளித்தொ
(தி)ன் கழஞ்சாக இரண்டினால் பொன்
பத்து ஒன்பதின் கழஞ்சே ஏழு ம(ஞ்)
ண்டு மஞ்சாடியுங் குன்றி - திருப்ப(ள்)


எழுத்துகளில் கவனிக்கவேண்டியவை




1. எகரம், ஏகாரம் இரு எழுத்துகளும் ஒன்றே.
2. ”ழு”, “மு”  இரு எழுத்துகளும் ஒன்றே.
3. “னா” எழுத்தின் பழைய வடிவம்.
4. “பொ” எழுத்தில் பின்னொட்டுக் குறியீடு “ப” எழுத்தை அடுத்து எழுதப்படாமல்
   “ப” எழுத்தோடு ஒட்டியுள்ளது.
5. இரண்டாவது வரியில் “ஒற்றை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு.

இன்னுமொரு கல்வெட்டு.



கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 005-VadaSuvar60.JPG




கல்வெட்டின் பாடம்




முதல் வரியில் கிரந்த எழுத்துகள் உள்ளன. எனவே பாடம் தரவில்லை.

இருபத்தாறாவது நாள் நூற்று
மேற்படி கல்லால் நிறை
ழஞ்சு -  நாளதினாலேய் கு
டுத்த பொன்னின் கலச
பொன்னின் தட்டம் ஒன்
ல்  நிறை ஐய்ம்பதின் க

கவனிக்கவேண்டியன




1. “றா”  எழுத்தின் பழைய வடிவம்
2. “ஞ்” எழுத்து முந்தைய கல்வெட்டில் உள்ள “ஞ்” எழுத்திலிருந்து
    மாறுபட்டுள்ளது.
3. இறுதி வரியில் உள்ள “நிறை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு
   முந்தைய கல்வெட்டில் உள்ள குறியீட்டிலிருந்து மாறுபட்டுள்ளது.



___________________________________________________________

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156

___________________________________________________________

Contributors

Themozhi

This page was last modified on 6 March 2016, at 14:48. This page has been accessed 4,465 times.