வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஒ ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.

From மரபு விக்கி

Jump to: navigation, search

சிங்கை கிருஷ்ணன் 



ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
ஒதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒருநாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய் பிறந்தால் பகைமை.
ஒழுக்கம் உயர் குலத்தின் நன்று.


ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
ஓடுகிறவனை கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
ஓர் ஊருக்கு ஒன்பது வழி.

ஒள
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:44, 27 செப்டெம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 27 September 2011, at 13:44. This page has been accessed 1,740 times.