உறவுகள் பற்றியது,
1) தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்,
பொருள்:-தாயார் ஒரு வேலை செய்வதை விட அவர் மகன்/மகள்
இரண்டு மடங்கு செய்வார்கள்,
2) கிட்டிப் போனால் முட்டிப்பகை
பொருள்:-உறவினர்களுக்கு மிகஅருகாமையில அடிக்கடி போனால்
சீக்கிரம் பகைமை வந்து விடுமென்பதைக் குறிக்கும்
3 ) தூரத்துப்பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
பொருள்:-தள்ளி இருந்து உதவி செய்வது உத்தமம்,
எப்போ வருவார்கள் என நம்மை ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்
4) கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை
பொருள்:-நாம் ஒருவருக்குக் கடனாகப் பணம் கொடுத்து விட்டு அதனைத் திருப்பித் தரக் கேட்டால் உடனே நம்மிடம் வாங்கியவர் செய்த உதவியை மறந்து விட்டுப் பகைமையே நினைத்து, உறவினை முறித்துக் கொள்வர்
5) மருமகளுக்குப் போட்ட சோறும் மாங்காய்க்குப் போட்ட உப்பும் வீண் போகாது
பொருள்:-மாங்காய் புளிப்புச்சுவை உடையது அதனால் உப்புப் போட்டால் நீண்ட நாட்கள்
இருக்கும்,அதேபோல் மருமகளும் மாமியார் போட்ட சோற்றுக்குச் செக்காக உழைப்பாள்
(அந்தக்கால மருமகள்கள் இந்தக் காலம் reverse!
சாரதா சுப்பிரமணியம்
தேதி - 07/04/2011.