வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

இறைவனைக் காண்போம் 11 தேனீ தின்னும் பச்சைக்குருவி

From மரபு விக்கி

Jump to: navigation, search

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்

11 தேனீ தின்னும் பச்சைக்குருவி

Green Bee eater-2.jpg


Green_Bee_eater-2.


தேனீக்களைத் தின்று வாழ்வதெற்கென்றே ஒர் பறவையைப் படைத்திருக்கிறான் ஆண்டவன். அதுதான் தேனீ தின்னும் பச்சைக் குருவி

.


இதன் வண்ணத்தைப் பார்த்து சிலர் இப் பறவையை கிளியின் குஞ்சோ என்று எண்ணிவிடக் கூடும். ஆனால் இதன் அலகும் வால் சிறகுகளின் நுனியில் கம்பி போல நீண்டிருக்கும்


சிறகுகளும் இது கிளிக் குஞ்சல்ல என்பதைக் காட்டி விடும்.



இந்தக் குருவி கிராமப் புரங்களில் தந்தி, மின் கம்பிகளின் மீதோ, வேலிக் கம்பிகளின் மீதோ அல்லது செடிகளின் ஒரு உயர்ந்த கிளையின் மீதோ உட்கார்ந்திருக்கும். திடீரென அது சிறு தூரம் பறந்து சென்று பின் திரும்பி வந்து முதலில் உடகார்ந்திருந்த இடத்திற்கே வந்து சேரும். அப்போது பார்த்தால் அதன் அலகில் ஒரு தேனீ இருக்கும். தலையை சற்றே தூக்கி இரண்டு மூன்று விழுங்கலில் தேனீயைத் தின்னும்.



ராம பாணம் குறி தப்பாது என்பார்கள். வல்லரசுகள் படைத்த ஏவு கணைகள் கூட சில சமயம் குறி தப்பலாம். ஆனால் தேனீத் தின்னியின் குறி ஒரு நாளும் தப்பாது.



பல தேனீக்களை உண்ட சில நேரத்துக்குப் பின் தேனீத் தின்னும் குருவி அதன் வாயினால் சுமார் ஒரு சென்டிமீடர் நீளம் உள்ள நீண்ட கோழி முட்டை வடிவிலான ஒரு கருப்புக் கட்டியை வெளியே துப்பும். அதைக் கையில் எடுத்து பார்த்தால் அதில் அப் பறவையால் ஜீரணிக்க முடியாத

தேனீயின் இறக்கை, கால்கள் மற்றும் உடல் கூடு இவை இருக்கும்.


Green bee eater throwing out undigested material.JPG


green bee eater throwing out undigested material.JPG


(சில வினாடிகளில் வேளி வரப் போவது ஜீரணிக்க முடியாத பகுதிகள்)



இயற்கையின் எழிலில்தான் இறைவன் நாம் பார்த்து ரசிக்கஎத்தனை காட்சிகளை அளித்துள்ளான் !



(வண்ணப் படங்கள் – சுதீர் ஷிவ்ராம்)












நடராஜன் கல்பட்டு

--Geetha Sambasivam 08:29, 17 ஜனவரி 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 17 January 2011, at 08:29. This page has been accessed 1,134 times.