வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

இறைவனைக் காண்போம்! பேய் மரம்!

From மரபு விக்கி

Jump to: navigation, search

பேய் மரம் என்று ஒரு மரம்.  இந்த மரத்துக்கு இன்னும் பல பெயர்கள் உண்டு.  போபாப் (Boabob) மரம், குரங்கு ரொட்டி மரம் (monkey-bread tree), தலைகீழ் மரம் (Upside-down tree), செத்த எலி மரம் (dead rat tree),  இவற்றில் முதல் பெயரைத் தவிற மற்றவை காரணப் பெயர்கள்.  இதன் தாவரவியல் பெயர் ஆடன்சோனிய டிஜிடாடா (Adansonia Digitata) என்பதாகும்.
 
இந்த மரம் நம் நாட்டில் சில இடங்களில் இருந்தாலும், இது வெளி நாட்டில் இருந்து வந்த மரம்.  ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மரம் இது.
 
மரங்களிலேயே மிகத் தடிமனான குட்டையான அடி மரம் கொண்டது பேய் மரம்.
 
பேய் மரத்தின் இலைகள் ஒவ்வொன்றும் ஐந்து இலைகளால் ஆனவை.  மாவிலைகளை விட சற்று அகலமானவை.

இலைகள் உதிர்ந்தபின் மரத்தின் கிளைகள், தவறுதலாய்த் தலைகீழாய் நடப்பட்ட மரம் போன்ற காட்சி தரும்.  அதனால் இதை ஆப்பிரிக்கர் தலைகீழாய் நடப்பட்ட மரம் என்று அழைக்கிறார்கள்.
 
பல நாட்கள் இலையின்றி அச்சம் தந்திடும் காட்சி தருவதால் இதன் பெயர் பேய் மரம்.
 
பேய் மரத்தின் மலர்கள் வெள்ளை நிரத்தில் பெரியதாக இருக்கும்.  அதன் மகரந்தத் தண்டுகள் நூற்றுக் கணக்கில் ஒரு பூப்பந்து போல இருக்கும்.


பேய் மரத்தின் காய்கள் சுமார் ஆறு முதல் எட்டு அங்குல நீளமும் மூன்று முதல் நான்கு அங்குல விட்டமும் கொண்டதாக இருக்கும்.  முற்றிய நிலையில் உள்ள காய்கள் தலை கீழாய்க் கட்டித் தொங்கவிடப் பட்ட செத்த எலிகள் போலக் காணப்படும்  அதனால்தான் இதன் பெயர் செத்த எலி மரம் என்பது.


காய்கள் நன்றாகக் காய்ந்ததும் வெடித்துத் தரையில் விழும்.  உள்ளே சதைப் பற்றான பகுதி வெள்ளையாக பஞ்சு போன்று, ரொட்டித் துண்டுகள் எனக் காட்சி அளிக்கும்.  இது குரங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நல்ல உணவாகும்.  இப்போது புரிகிறதா பேய் மரத்தின் ஒரு பெயரான குரங்கு ரொட்டி மரம் என்பதன் காரணம்?
 
ஆப்பிரிக்காக் கண்டத்தில் பேய் மரத்தின் காய் பலரது பரம்பரை உணவு.
 
பேய் மரத்தின் காய்களில், பாலக்கீரையை விட ஐம்பது சத வீதம் அதிகமான சுண்ணாம்புச் சத்தும், அதிக அளவிலான பிராணவாயுஏற்றித் தடுப்பானும் (anti oxidant), ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் போல இரு மடங்கு வைடமின் சி யும் இருக்கிறாதாம்.  அதனால் பேய் மரத்தின் காய்க்கு சூப்பர் பழம் என்று ஒரு பெயர்.
 
கூவம் கால்வாய் கரையில், சென்னையில், நுங்கம் பாக்கத்திற்கும், எழும்பூருக்கும் இடையே  ஆயிரத்தி ஐம்பதுகளில் காலியாக இருந்த இடத்தில் இந்த மரங்களில் இரண்டு இருந்தன.  அவை இருந்த இடத்தில் இப்போது கான்கிரீட் கட்டிடங்கள்.  சென்னையில் இன்றும் ஒரு மரம் அடையாறு கலா க்ஷேத்திரத்தில் இருக்கிறதாம்.
 
 நடராஜன் கல்பட்டு
<div
--Geetha Sambasivam (பேச்சு) 12:30, 29 செப்டெம்பர் 2015 (GMT)

</div>

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 29 September 2015, at 12:31. This page has been accessed 1,928 times.