வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

இத்தாலியன் குக்கீஸ்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


மைதா – 100 கிராம்

பேக்கிங் பவுடர் – 3 தேக்கரண்டி

முட்டை – 3

முட்டை சேர்க்காதவர்கள் அதை விட்டு விட்டு இதே செய்முறையில் குக்கீஸ் செய்யலாம்.

பொடித்த சர்க்கரை – 1 1/2 கப்

எண்ணெய் – 1/2 கப்

பாதாம் எஸன்ஸ் – 1/2 தேக்கரண்டி

(எந்த எஸன்ஸ் வேண்டுமானாலும் சேர்க்கலாம்)



செய்முறை


1.முதலில் மைதா மாவை பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

2.முட்டையோடு சர்க்கரையைச் சேர்த்து அடித்துக் கொள்ளுங்கள்.

3.இடையில் சிறிது சிறிதாக எண்ணெயும் எஸன்ஸையும் சேர்த்து அடிக்கவும்.

4.பிறகு சலித்து வைத்துள்ள மைதா கலவையை முட்டைக் கலவையில் சிறிது சிறிதாக தூவிப் பிசையுங்கள். இது ஏறக்குறைய சப்பாத்தி மாவு போன்ற பதத்திற்கு வந்து விடும். இதை அரை இன்ச் உயரத்திற்கு சப்பாத்தி போல திரட்டி நீள நீள பிஸ்கெட் துண்டுகள் போல வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டிய துண்டங்களை உடையாமல் ட்ரேயில் பரத்தி ஓவனில் வைத்து பேக் செய்யுங்கள்.

இப்போது இத்தாலியன் குக்கீஸ் ரெடி.

இதற்கு ஐசிங் தயாரிக்க-

அரைக் கப் பால், ஐசிங் சர்க்கரை 2 கப், மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு இவற்றைச் (1 முட்டை ) சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கிக் கொள்ளுங்கள். இந்தக் கலவையில் நீளமான குக்கீஸின் ஒரு முனையை மட்டும் முக்கி எடுத்து சுத்தமான ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். சுமார் ஒரு மாதம் வரை இந்த குக்கீஸ் கெடாமல் இருக்கும்.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:14, 25 அக்டோபர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 25 October 2011, at 02:14. This page has been accessed 1,950 times.