வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஆட்டுக்கால் சூப்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


ஆட்டுக்கால் -4

இஞ்சி பூண்டு விழுது-4 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் அல்லது

மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்

பட்டை கிராம்பு தலா -2 (பொடிக்கவும்)

சோம்பு -1/4 டீஸ்பூன்

தக்காளி -1

உப்பு -தேவையான அளவு

கருவேப்பிலை கொத்தமல்லி -அலங்கரிக்க


செய்முறை


ஆட்டுக்காலைக் கடையில் வாங்கும் போதே தேய்த்து, சுத்தம் செய்துதான் தருவார்கள். சுத்தம் செய்த ஆட்டுக்காலை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.

தக்காளி வெங்காயத்தை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். அடுத்து அரைத்த வெங்காயம், தக்காளி விழுதை இதில் போட்டு வதக்குங்கள்.

கூடவே இதில் மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சோம்பு, இஞ்சி பூண்டு விழுது போட்டுக் கொதிக்க வையுங்கள்.

பச்சை வாசனை போனதும் ஊற வைத்த ஆட்டுக்காலை இதில் போடுங்கள்.

நான்கு அல்லது ஐந்து கப் தண்ணீர் விட்டுக் குக்கரில் வேக வையுங்கள். வெந்ததும் வடிகட்டுங்கள்.

எண்ணெயில் பட்டை, கிராம்பு தாளித்து வடிகட்டிய சூப்பில் கொட்டுங்கள்.

சூப்பை பரிமாறும் போது கொத்தமல்லித் தழை தூவி, விரும்பினால் ஆட்டுக்கால் போட்டும் கொடுக்கலாம்.











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:38, 24 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்











Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 24 November 2011, at 06:38. This page has been accessed 1,966 times.