வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அஷ்டலட்சுமி திருக்கோவில் - சென்னை

From மரபு விக்கி

Jump to: navigation, search

* அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்

                                                                                                            
T 500 11.jpg

மூலவர் : அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,
அம்மன்/தாயார் : ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி
தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி(வங்கக் கடல்)
பழமை : 500 வருடங்களுக்கு முன்
ஊர் : பெசன்ட் நகர்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:

கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார ஷேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.

ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.


தலபெருமை:


அஷ்ட லட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.


தல வரலாறு:


சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது.

இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.


திருவிழா:

புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.


திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:52, 10 ஜூன் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 10 June 2011, at 03:56. This page has been accessed 2,367 times.