வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள் : ஆகஸ்ட் 11

From மரபு விக்கி

Jump to: navigation, search
Scan0008.jpg
இன்னம்பூரான்


நாலே நாட்களில் சுதந்திரநாளை கொண்டாடும் இந்தியர்கள் ஆகஸ்ட் 11, 1908 என்ற தேதியை மறக்கவே கூடாது. பாலகன் குதிராம் போஸ் அன்றைய தினம் தூக்கிலிடப்பட்டான். என்னை கேட்டால் கர்சான் பிரபுவின் பலி கடா என்பேன். வங்காளத்தை இரண்டாக பிரித்தான், அந்த மஹானுபாவன். அது தேசாபிமானத்து அடிப்படையில் இல்லை; அதற்கு முரணாக. சத்யேன் போஸ் தலைமையில் எழுந்த புரட்சி வலுத்தது அதில் கலந்து கொண்டு, கிங்க்ஸ்ஃபோர்ட் என்ற மாஜிஸ்டிரேட்டை கொலை செய்ய திட்டமிட்ட இரு இளைஞர்கள் தவறுதலாக இரு பெண்களை சுட்டுக் கொன்றனர், 13 ஏப்ரல் 1908 அன்று. அவர்களில் ஒருவனனான ப்ரஃபுல்லா சாக்கி தன்னையே மாய்த்துக்கொண்டான், வாஞ்சியைப் போல. குதிராம் போஸ் துணிவுடன் தன் பங்கை ஒப்புக்கொண்டான். ஆங்கிலேய நீதி இரு மாதங்களுக்குள் அவனுடைய உயிரை பலி வாங்கியது. நூறாண்டுகள் கடந்த பின்னரும், அதிகம் பேசப்படாத இவருடைய புகழை, இன்றும் வங்கத்தின் நாட்டுப்பாடல்கள் பாடுகின்றன. வாழ்க குதிராம் போஸ்ஸின் அமரகாவியம்.

                                                                                                   

குறிப்பால் உணர்த்தினால் மட்டும் போதுமா? ஆணிவேரை பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று மார் தட்டி விட்டு, சல்லி வேரை பற்றி மட்டும் எழுதுவது ஞாயமா? என்பர், அன்பர். ஞாயமில்லை தான். வேறு வழியில்லை, இழையை நிறுத்துவதை தவிர. Roots என்ற அலெக்ஸ் ஹேலி எழுதிய நூல் ஒரே வருடத்தில் ஒரு மிலியன் பிரதிகள் விற்றது. நேஷனல் அவார்டும், புலிட்ஸர் பரிசிலும் பெற்றது. 500 கல்லூரிகளில் பாடப்புத்தகமாயிற்று. சம்பிரதாய வரலாறுகளை தூக்கியடித்து நொறுக்கியது, அந்த நூல். இத்தனைக்கும் அதை எழுதிய கருப்பர், ஒரு பாமர மனிதன். மிஸ்டர் தமிழன்! செவி சாய்த்து கேளும். நா. வானாமாமலையும், லூர்தும் முன் வைத்த தமிழ் நாடோடி இலக்கிய கருவூலம் போல, ஆஃப்பிரிக்கர்கள் தங்கள் கலாச்சாரத்தையும், நகைச்சுவையையும், நாட்டுப்பாடல்களையும், பேச்சுமொழியையும், கிராமதேவதைகளயும் பொக்கிஷம் போல் பாதுகாத்ததை தான் அலெக்ஸ் ஹேலி எடுத்துரைத்தார். அவருடைய மூதாதை குன்டா கின் டே அமெரிக்காவுக்கு சிறை பிடித்துக் கொண்டு வரப்பட்ட அடிமை. தப்பியோடிதற்காகக் காலை ஒடித்து விடுகிறார்கள். அதற்கெல்லாம் மசியவில்லை, ஐயா. டோபி என்று பெயர் வைக்கிறான் வெள்ளைக்காரன். இவரோ, கின் டே என்று அழைத்தால் தான் வருவார்.


அலெக்ஸ் ஹேலி. தன்னுடைய நூலுக்கு (அது புதினமாக வெளி வந்தது.) ஆய்வும் செய்தார். யாத்திரையும் செய்தார். கால இயந்திரத்தில் சொகுசாகவும், பணிவுடனும், பயணமும் செய்தார். அவருடைய வாக்குகளில் இரண்டு:


“ இந்த நூல் நாடி பிடிக்கும் பட்டு இழை. நமக்கு நாமே விதித்துக்கொண்ட வித்தியாசங்களை அகற்றி, அடிப்படையில் நம் ஒருமைப்பாட்டை நோக்குகிறது, இந்த நூல்.”


“நம் கிராமங்களில் மூன்று சமூகங்கள், சாமி! ~1. அதான், நடமாடிக்கிட்டு இருக்காகளே, அவுக தான்; 2. பாட்டி வந்துட்டாஹ. களை கூடறது! இல்லெ! ஓ! மூதாதை கும்பலே நிக்குது. வாங்க! வாங்க! கும்பிட்றேணுங்க. டேய்! யாருடா அங்கே! கீழவெண்மணி மாதிரிடா! படையலுக்கு எல்லாம் எடுத்து வை. டாஸ்மாக் மூடிடப்போறான்? ஐயாவுக்கு ரம் தான் பிடிக்கும். Three Monks ஒரு போத்தல் கொண்டாந்துறுடா. 3. மூன்றாவதா? பிறக்கப்போற சந்ததி, சாமி. நெடுமரம் நிக்குது. வேரு கண்ணுக்கு தெரியல்ல. ஆனா இருக்கு. பூ மலர்ந்து கிட்டே இருக்கேடா, கண்ணா!


இனி எழுத கை ஓடமாட்டேன் என்கிறது. வேர்களை நாடுவோமாக.


இன்று அவர் ஜன்மதினம்:1921
http://rlv.zcache.com/alex_haley_stamp_postage-p172888158244074470anr4u_400.jpg






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:33, 16 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 16 August 2011, at 13:36. This page has been accessed 2,452 times.