வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 30

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்


 தெவிட்டாத இன்பம் தேடுவோர் படிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். படித்தால் போதாது. தேடிப்பிடித்துப்படிக்க வேண்டும். தேடிப்பிடித்தால் போதாது. தேடிப்பிடிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். படிப்பும் தொடரும். தேடுவதும் நிற்காது. ரயில்வேக்காரர்களுக்கு எண்ட்லெஸ் வேகன்ஸ் (endless wagons) என்றால் புரியும். முடிவில்லாத இயல் என்றால், அது கல்வியும், அறிவும்,சிந்தனையும், வாய்மையும் தான். அதுவும் தாய்மொழியில் அமைந்து விட்டால், மிக்க மகிழ்ச்சியே. மிக்க சுவையே. அருமையான நல்வரவே.


தகவல்/செய்தி/விவாதம்/கருத்து/சிந்தனை யாவற்றையும் படைப்பதும், தருவதும் வாசற்படி என்றால் தொகுப்பும், ஒப்புமையும், ஆய்வும், மீள்பார்வையும் அடுத்தடுத்த மாடிப்படிகள், இந்த அறிவாற்றல் என்ற உப்பரிகைக்கு. கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும், இனவாரியாக தொகுக்கப்பட்டு வருவது, அச்சுத்தொழில் முன்னேற, முன்னேறை, அதிகரித்தது. ஏற்கனவே போற்றப்பட்ட அமரகோசம், நிகண்டு, அகராதி ஆகியவற்றின் வரவு அதிகரித்தது. அவற்றின் அடுத்த கட்டம்: களஞ்சியம் அல்லது என்ஸைக்ளோபீடியா. என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா என்ற மாபெரும் தொகுப்புக்களை இவற்றின் முன்னோடி எனலாம். ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு களஞ்சியம். இணையதளம் வந்த பின், தன்னார்வக்குழுக்களின் ஆர்வத்துக்கு வடிகால் அமைத்து, கூடன்பர்க், பல்கலைக்கழகங்களின் களஞ்சியங்கள் என பல தோன்றியகாலத்தில், தமிழார்வம் கொண்டோரின் கடும் உழைப்பின் பலனாக தோன்றிய தமிழ் தொகுப்புகளில், டாக்டர்.கல்யாணசுந்தரத்தின் கனவாகிய ப்ராஜெக்ட் மதுரை நிறைவேறியது. தமிழன்னையின் பழைய நூல்கள் மின்னுலகில் ஒளி வீசத்தொடங்கின. தற்காலம் பொள்ளாச்சி நசன் அவர்கள் தமிழ் இதழ்களை பராமரிப்பதையும், டாக்டர்.கண்ணனும், திருமதி.ஸுபாஷிணி ட் ரெம்மலும், அவர்களின் தமிழ் மரபு அறக்கட்டளை ஆர்வலர்களும் தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்வதையும் குறிப்பிடவேண்டும். டாக்டர். திருமூர்த்தி வாஸுதேவனின் பணியை நாம் சிலாகிக்கவேண்டும். எனக்கு தெரியாத பல அமைப்புகள் இருக்கலாம். நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.


விக்கிப்பீடியா விடாப்பிடியாகப் பிடித்திக்கொள்ளும் கவர்ச்சி உடையது. 2001 ல் ஆங்கிலத்தில் துவக்கப்பட்ட இந்த ஜனரஞ்சகமான, தகவல் களஞ்சியமான தினசரி சஞ்சிகை இன்று பல மொழிகளில் கிடைக்கிறது. இதற்கு உன்னதம் சேர்ப்பவர்கள் எல்லாரும் தன்னார்வத்தால் உந்தப்பட்டு, குறையில்லா பிரயாசையுடன், செயல்படுகிறார்கள். ராப் மாத்யூஸ் என்பவர் தரம் மிகுந்த 437 விக்கீப்பீடியா கட்டுரைகளை தொகுத்து, லண்டன் டெலிக்ராஃப் நாளிதழிடம் சபாஷ் வாங்கியிருக்கிறார். தமிழ் விக்கிப்பீடீயா ஸெப்டம்பர் 30, 2003ல் துவக்கப்பட்டது. நமக்கு தமிழ் ‘ராப் மாத்யூஸ்ஸுகள்’ தேவை.


அதனுடைய முதற்பக்கக்கட்டுரைகள், செய்திகள், தென்காசி சுப்பிரமணியன் போன்ற விக்கிப்பீடியர் அறிமுகம், உங்களுக்குத் தெரியுமா? என்ற கேள்விகள், சிறப்புப்படம்,, ‘இன்று’, பிற திட்டங்கள் எல்லாமே நல் வரவுகள்.


இது சிறீதரன் ஸ்பெஷல். மின் தமிழில் அவ்வப்பொழுது எட்டிப்பார்க்கும் இந்த விக்கிப்பீடியர்-தளபதி நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர். விட்டுப்போன தகவல்களை அருளுவாராக.


இன்னம்பூரான்
30 09 2011


உசாத்துணை:
http://ta.wikipedia.org/wiki/முதற்_பக்கம்
http://www.telegraph.co.uk/news/newstopics/howaboutthat/5549589/Wikipedia-turned-into-book.html











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 05:37, 30 செப்டெம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 30 September 2011, at 05:37. This page has been accessed 1,099 times.