அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 10

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


உலகம் சுற்றிய முதல் தமிழ் வாலிபன் எனலாம், திரு ஏ.கே.செட்டியார் அவர்களை. சமீபத்தில் நான் படித்து வந்த பல்கலைக்கழகத்தில் எங்கள் புதுக்கோட்டையின் ‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தி, திரு ஏ.கே.செட்டியார் பிரசுரித்த குமரிமலர்களுடன் வந்து அவரை பற்றி பேசினார். அன்னார் எடுத்த மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படத்தைப் போட்டு காட்டினார். அவரை பற்றி நன்கு அறிந்த சான்றோர் சபையில் தத்து பித்து என்று உளராமல், திருமதி. மீனாக்ஷி முகர்ஜிக்கும், திரு.ஈஸ்வரமூர்த்திக்கும் நடந்த மடலாடலின் சுருக்கம்:


‘அன்பின் திரு.ஈஸ்வரமூர்த்தி,

நன்றி பல. நானோ தமிழ் கலாச்சாரத்தை சார்ந்தவள் இல்லை. மஹாத்மாவை பற்றி இவர் எடுத்த ஆவணப்படம் காணவில்லை என்பது அதிர்ச்சியை தருகிறது. அது பற்றி ஆங்கிலத்தில் படித்த நான் திரு ஏ.கே.செட்டியார் அவர்களை பற்றி அறிய விரும்பினேன். உங்களுக்குத் தெரிந்ததை எழுதுங்கள்...
அன்புடன்,
மீனாக்ஷி முகர்ஜி
*
ஜூன் 27, 2007
அன்பின் மீனாக்ஷி முகர்ஜி,
ஜூன் மாதத்து Economic and Political Weekly இதழில் உங்களது திரு ஏ.கே.செட்டியார் பற்றிய கட்டுரை படித்தேன்...அவர் என் நண்பர்; ஆசான். யாரையும் வசீகரம் செய்து விடுவார்...அவருடைய தமிழ் நடை மிளிரும். பயணக்ககட்டுரைகளின் முன்னோடி, அவர். அக்காலத்திலேயே அவர் புத்தகங்களுக்கு நல்ல கிராக்கி...அவர் ரொமான் ரோலா, சுபாஷ் எல்லாரையும் சந்தித்து இருக்கிறார்...மஹாகவி பாரதியார் அவர்களின் மறைந்திருந்த படைப்புகளை வெளிக்கொணர்ந்த புண்ணியம் அவரை சாரும்...சொல்லப்போனால், அவருடைய வாழ்க்கைச் சரித்திரம் எழுதவேண்டும்...காந்தி ஆவணப்படம் வரை அவர் துரதிர்ஷ்டசாலி தான். காந்தி ஸ்மாரக் நிதி, ராஜாஜி, தேவ்தாஸ் காந்தி எல்லாரும் அவரை கை விட்டனர்...அவருக்கு விருந்தோம்பியவர்களில் புதுக்கோட்டை ஞானாலாயா தம்பதிக்கு முதன்மை ஸ்தானம்...அவருக்கு செல்வம் முக்கியமல்ல; நண்பர்கள் தான் முக்யம்.
வி. ஈஸ்வரமூர்த்தி
வடமலைக்குழு
பங்களூர்.
ஏப்ரல் 14, 2009


எங்கள் பள்ளிக்கு வருகை தந்தவர் திரு ஏ.கே.செட்டியார் அவர்கள். எனக்கு ‘மலேயா முதல் கனடா வரை’ என்ற அவருடைய நூலை பரிசளித்தார். அதை பத்திரமாக பாதுகாத்து வருகிறேன்.
ஸி. ராதாகிருஷ்ணன்
நைஜீரியா
*
ஸெப்டம்பர் 10 அவருடைய நினவு தினம். பிறந்தது நவம்பர் 3, 1911: அமரர் ஆன வருடம்: 1983.
இன்னம்பூரான்
10 09 2011
பி.கு. மேற்கூறிய நிகழ்வில் எனக்கு பொன்னாடை மரியாதை! ஏன் என்று தெரியாது.


http://www.youtube.com/watch?v=Ljhh937O0uU

உசாத்துணை:

http://www.isvarmurti.com/2007/06/27/akchettiar-the-man-to-make-the-first-documentary-film-on-mahatama-gandhi-when-gandhi-was-very-much-alive/

http://www.hindu.com/2006/04/28/stories/2006042820390200.htm
YouTube - Videos from this email







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:59, 11 செப்டெம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 11 செப்டெம்பர் 2011, 13:59 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,043 முறைகள் அணுகப்பட்டது.