வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஜூலை 28

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்

                                                                                               
Innamburan.jpg
சுனாமியை நினைத்தாலே குலை நடுங்குது இல்லை. நிலம் நடுங்கினாலும், குலை நடுங்கும். ஜூலை 28, 1976 அன்று 03 42 லோக்கல் டைம். 14-16 விநாடிகள், ஊரே குலுங்கியது. சைனாவின் தாங்ஷான் நகரில் (16 லக்ஷம் ஜனத்தொகை). பயங்கர நில நடுக்கம்: 8.3 ரிக்டர் அளவுகோலில். அதாவது மிக கடுமை. எனக்கு அந்த நாள் நினைவில் இருக்கிறது. அக்காலம் புவனேஸ்வரவாசி, நான். இறந்தவர் எத்தனை? 2.40 லக்ஷம்?/7.5 லக்ஷம்? சில பிற்கால கணிப்புகள் 50 லக்ஷம் பேருக்கு மேல் இறந்தனர் என்று கூறுகின்றன. அந்த நூற்றாண்டின் நிலநடுக்கங்களில் அதிக சாவு நேர்ந்தது இந்த 1976 நிலநடுக்கத்தில் தான்.                                                                                                              
H7-1.jpg

அந்த வருடம் டிராகன் வருடம். நம் தமிழ் ‘பிரபவ’...முதலிய வருடங்கள் போல, அங்கு ஒவ்வொரு வருடத்துக்கும் பெயர் உண்டு;ஆருடமும் உண்டு. டிறாகன் ஒரு பெரிய முதலையைப்போல: ஆனால், கற்பனை பிராணி. அது ஒரு தீநிமித்தமே என்பது பாமரமக்களின் அசையா நம்பிக்கை. அப்படித்தானே நடந்தது. பெரிய ஆஸ்பத்திரி சப்ஜாடா காலி; அங்கேயே இரண்டு ஆயிரம் பேர் காலி. முதல் ஷாக்கிலேயே 80 ஆயிரம் பேர் காலி என்கிறார்கள், விஷயம் அறிந்தவர்கள். ரோடு, பாலம், ரயில்வே ஸ்டேஷன், வீடுகள், தொழிற்ச்சாலைகள் எல்லாம் ஒழிந்தன. மக்கள் ஆங்காங்கே தூக்கியெறியப்பட்டனர். மின்சாரம் தடை பெற்றது. நிவாரணப்பணிகள் தொடங்கின என்றாலும், சைனா வெளியுலக உதவி/கொடை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டது. வேண்டிய அளவு, தீனியும், துணியும் இருக்கிறது என்றது. டாக்டர்களும் மருந்துகளும் வேண்டிய அளவில் அந்த நகரில் இருப்பதாகவும் சொல்லிற்று. சிலர் இதை சுயமரியாதை என்று புகழ்ந்தாலும், என்னால் மனிதநேயமற்ற தேசியத்தைப் பாராட்ட முடியவில்லை. அதை விட கொடுமை, ‘அதிபர் மா சே துங்க் அவர்களின் அறிவுரைகள் இயற்கை சீற்றங்களை தணிக்கும்!’ என்ற அரசியல் பிரகடனம். ஆனால், ஒன்று போற்றவேண்டிய விஷயம். புதிய தாங்ஷான் நகர் டாப்க்ளாஸ்.


இன்னம்பூரான்

28 07 2011


உசாத்துணை

http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/28/newsid_4132000/4132109.stm







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:10, 1 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 1 August 2011, at 15:13. This page has been accessed 2,419 times.