வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஜனவரி:25

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்


 ‘பழி’ (J'ACCUSE ...!")


உலகம் சிறியது, சிந்தனை பரவியிருந்தால். இந்தியாவின் கான்பூரில் ஒரு வழக்கு. குற்றவாளியின் தன்னிலை விளக்கத்தைக் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள். அமெரிக்காவில் அது 1932ம் ஆண்டு மீட்கப்பட்டது.‘அன்றொரு நாள்: ஜனவரி:13:நீயோ அரசு! நீயே கள்வன்!’ என்ற இழையின் தொடராக, இது அமைந்தது தற்செயலே. ஆனால் முற்றிலும் பொருத்தமே.

இந்தியன் பீனல் கோட் 121 A யை மீறி மாட்சிமை தங்கிய அரசரின் முடியாட்சியை கவிழ்க்க சூழ்ச்சி செய்ததாகப் பழி சுமத்தபட்டது.

பின்னணி:

1920லிருந்து இந்தியர்களின் சுயாட்சி, கலோனிய கவிழ்ப்பு, தொழிலாளிகளின் புரட்சி என்றெல்லாம் இடை விடாமல், பேசி. எழுதியதும் குற்றமே.

அரசு அஞ்சும் வகையில் அவர்களின் எழுச்சியை ஊக்குவித்ததும் குற்றமே.

மற்ற முதலாளித்துவ ஆளுமைகளில் ஒத்துழைப்புடன், குற்றவாளியை, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், இத்தாலி, ஹாலண்ட், ஸ்விட்சர்லாந்து மற்றும் பல நாடுகளிலிருந்து வெளியேற்றினோம். அவர் அடங்கவில்லை. அமெரிக்காவுக்கு டிம்கி கொடுத்தவர், அவர்.

அவருடைய புரட்சி இயக்கத்தை ஒடுக்கினோம்; அடக்க முடியவில்லை.

1926-28 களில், இந்தியாவின் பல இடங்களில் வேலை நிறுத்தங்கள்.

1929ல் ஒரு சங்கிலி தொடராக, தொழிற்சங்கத்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1930ல் குற்றவாளி கலோனிய அரசை வீழ்த்தப் புரட்சி துவக்கினார்.

போதாக்குறையாக, ஒரு தேசீய அரசியல் சாஸன மையம் அமைக்கத் திட்டம் வகுத்தார். மக்களை தூண்டினார். 1929ல் அரசு முடக்கிய தொழிற்சங்கங்களை உயிர்ப்பித்தார்.

ஆனால், அவர் இருக்குமிடம் தெரியவில்லை. அவர் இந்தியாவுக்கு வந்து விட்டார் என்று வதந்தி. பம்பாய்,கல்கத்தா வாரணாசி, லக்னோ, ஃபைஜாபாத் ஆகிய ஊர்களில் அவர் தான் என்று சந்தேஹித்து, பலரை கைது செய்தோம். அவர் என்னமோ அகப்படவில்லை. அவர் ஆவியுருவில் தான் உலவுகிறறோ?

'பல நாள் திருடன்...! ஜூன் 21, 1931 அன்று, ஏழு வருடமாக செல்லுபடி ஆகாத பிடி வாரண்டை வைத்துக்கொண்டு, அவரிருந்த சிறிய வீட்டை பெரிய போலீஸ் படையுடன் சூழ்ந்து கொண்டோம். தூங்கிக்கொண்டிருந்த ‘ராஜத்துரோகியை’ கைது செய்தோம். மேலும், 11 நாட்களில் நாடு முழுதும் நூற்றுக்கணக்கான கைதுகள். ஜவஹர்லால் நேரு ஓடி வந்தார். நாங்கள் அவரை குற்றவாளியை பார்க்க அனுமதிக்கவில்லை. ஏன்? வக்கீலையே கிட்ட விடவில்லை. மக்களின் எதிர்ப்பும், ஆரவாரமும் வலுத்தது. ரகசியமாக, அவரை கான்பூருக்கு கொண்டு போனோம். ஆனால், உலகெங்கும் எதிர்ப்பு. வரலாற்று ஆசிரியர் எடுவெர்ட் ஃபக்ஸ்: ‘...இந்திய பிரச்னை உலகரங்கில் வந்து விட்டது’ என்றார். ஆல்பெர்ட் ஈன்ஸ்டீன் அவருடைய விடுதலை கோரினார்.'

என்ன பயன்? ஆகஸ்ட் 1, 1931 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வக்கீலுக்கு அனுமதி இல்லை. அவரே, வழக்கை விசாரித்துத் தான் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று வாதாடினார். என்ன தான் போலீஸ் இருந்தாலும், மக்களின் கொந்தளிப்பு அடங்கவில்லை. அஞ்சிய மாஜிஸ்ட் ரேட் விசாரணையை சிறைக்குள் வைத்துக்கொள்ள தொடங்கினார். குற்றவாளியின் தந்திகளை விலாசதாரர்களுக்கு அனுப்ப மறுத்தார். ஓடி வந்த நேரு திருப்பி அனுப்பப்பட்டார். குற்றவாளி ஒரு குச்சில் அடைக்கப்பட்டார். இதழ்கள் மறுக்கப்பட்டன. நிருபர்களை அண்டவிடவில்லை. அவருக்கு தன்னிலை விளக்கம் தர அனுமதி மறுக்கப்பட்டது. ராஜத்துரோக உரைகளுக்கு கோர்ட்டார் அனுமதி கிடையாது என்று முழங்கிய மாஜிஸ்ட் ரேட், விசாரணையை நவம்பர் 3,1931 அன்று எடுத்துக்கொண்டார். நம்மவரோ, இந்த ஒருதலை விசாரணைக்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்தார். குண்டுக்கட்டாக, தூக்கிக்கொண்டு வந்தார்கள். ஜனவரி 9, 1932 அன்று அவருக்கு 12 வருடங்கள் தீவாந்திர தண்டனை வழங்கப்பட்டது. கைதியின் உடையில் அவர் பரைலி சிறைக்கு ரகசியமாகக் கொண்டுப்போகப்பட்டார். அவர் அங்கிருக்கும்போது, இந்த தன்னிலை விளக்கம் அமெரிக்காவில் வெளியானது.


அதை கேட்போமா? அதன் தலைப்பே:

J'ACCUSE ...!"

(தொடரும்)


இன்னம்பூரான்

25 01 2012











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:26, 31 ஜனவரி 2012 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 31 January 2012, at 03:26. This page has been accessed 1,740 times.