அன்றொரு நாள்: ஏப்ரல் 23மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
கோட்டையும், கொத்தளமும்
கதை கேளும். பிடித்தால் சொல்லும்; பிடிக்காவிட்டாலும் சொல்லும். தமிழ்நாட்டு அரசின் இணையதளம், நான் வணிகத்துக்கு இருப்பிடம் என்பதால், வரலாற்றுச்சிறப்பு உள்ள உப்பரிகைகள் இல்லை என்று சொல்வதை வன்மையாக மறுக்கிறேன். ஏரிகளை குப்பை கூளங்களால் நிரப்பி, கோயில் சொத்தில் கை வைத்து,நஞ்சை, புஞ்சை எல்லாம் பினாமி வீடு கட்டி, ரங்கநாதன் தெரு இலக்கணம் பேசும் மக்கள், வரலாற்றுச்சிறப்பு உள்ள உப்பரிகைகளை விட்டு வைக்கவில்லை என்பதே என் ஆதங்கம். ஐயம் இருப்போர் சென்னை வரலாற்றுப் பதிவாளர் முத்தையா அவர்களையும், அவருடைய சகபாடியும், எமது நண்பருமான கே.ஆர்.என்.நரசய்யா அவர்களையும் அணுகலாம். தடுக்கி விழுந்தால், குட்டியூர் சமஸ்தானங்கள், ராசாக்குஞ்சுகள், ஜமீந்தார், ஜாகீர்தார், மிராசுதார்கள் தூங்கி வழிந்த அந்தக்காலத்தில், சந்திரகிரி சமஸ்தானாதிபதி தாமர்லா வெங்கட்டப்ப நாயக்கரிடம், ‘கூவம் நதிக்கும், வங்காள விரிகுடாவுக்கும் நடுவில் உள்ள உள்ளங்கை நிலத்திலே எங்களுக்கு ஒரு அமைப்பு ( பாக்டரி) வேணும்.’ என்று கூழைக்கும்பிடு போட்ட பரங்கி (ஆங்கிலேயன்), வாசாலகமாக பேசி, நைச்சியம் பல பகர்ந்து, ஒரு கோட்டை, கொத்தளமும் கட்டிக்கொண்டான், அது தான் நான். நாற்பது வருடம் கழித்து,அக்டோபர் 28, 1680 அன்று எழும்பியது இந்தியாவின் முதல் ஆங்ளிகன் மாதாகோயில்: சைண்ட் மேரிஸ் சர்ச், இந்த வளாகத்துக்குள்ளெ. அங்கே தான் ராபர்ட் க்ளைவ் என்ற கயவனாக வந்து பிரபுவாகி, பனாதை ஆகிவிட்ட வரலாறு புடைத்தவனுக்கு, மார்கெரெச் மாஸ்கலீனுடன் திருமணம், ஃபெப்ரவரி 18, 1753 அன்று, பதிவானது. சொல்லப்போனால், திறந்த சிலநாட்களிலே எலிஹு யேல் என்ற கவர்னருக்கும்,கேத்தரீன் ஹிம்மர்ஸ்ஸுக்கும் நவம்பர் 4, 1680 அன்று திருமணம் பதிவானது. எலிஹூ அடித்த கொள்ளை சொல்லி மாளாது. பரவாயில்லை. அமெரிக்க யேல் பல்கலைகழகம், அவனுடைய நன்கொடையில் வளர்ந்தது. சுற்றுப்படையில்லாத கோட்டையா, நான்? ஊஹூம். கவர்னரின் உப்பரிகை நடுவில். அதை சுற்றி ஆங்கிலேயர்களின் இல்லங்கள். இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் தான், கை பிடிக்க, கால் பிடிக்க ஆட்கள். இங்கிலாந்தில் இஸ்திரி போடக்கூட ஆள் கிடைப்பதில்லை. கூலியும் கட்டுப்படியாகாது. ஆனால், அக்காலத்து கலோனிய அதிகாரவர்க்கத்துக்கு, கை பிடிக்க ஒரு ஆள், கால் பிடிக்க ஒரு ஆள். மாமியின் தாதிகள், கணக்கில் அடங்கா. அதனாலே, நெசவாளிகளும்,சலவையாளிகளும், குசினிக்காரர்களும், பட்லர்களும் வாழ்வதற்கு, வடக்கில் சென்னப்பட்டணம். பெரி திம்மப்பா தான் ஸ்தாபகர். காலம் போகிறப்போக்கில் உப்பரிகைகள் குப்புறக்கவிழ்ந்தன. அதாவது இடிந்து போயின. ஃப்ரென்ச்க்காரன் வேறு 1746ல் போரில், பாதி ஊரை அழித்து விட்டான். அந்தக்காலத்தில் பண்ட/நிதி பரிமாற்ற மையமாக இருந்தவிடத்தில் தான் கோட்டை ம்யூசியம் உளது.
உசாத்துணை:
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:28, 26 ஏப்ரல் 2012 (UTC) |