அன்றொரு நாள்: ஆகஸ்ட் 30மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
திரைப்படங்களுக்கு காலம் போலிருக்கிறது. ஆகஸ்ட் 30 1957 அன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயற்கை எய்தினார். யானும் அவருடைய விஜயராகவாச்சாரி இல்லத்தில் போய் இறுதி மரியாதை செலுத்தினேன். இதற்கு மேல் உங்களுக்கு தெரியாதது எதை சொல்லிவிட போகிறேன்? நமக்கு தெரிந்தது தான் எவ்வளவு? கிரிக்கெட் வீரர்களில் அடிமட்ட வீரர்களின் வரலாற்றை விவரமாக அளிக்கும் விக்கிப்பீடீயா கூட அதிகப்படி தகவல்கள் தேவை என்கிறது, கலைவாணரை பற்றி எழுதும் போது. அவர் பெயரில் தனித்து இயங்கும் இணைய தளமோ புதிதாக ஒன்றும் கூறவில்லை. அது ஒரு மெய்கீர்த்தி. அவர் காலத்தில் கொடி கட்டி பறந்த நகைச்சுவை நடிகர்களில், காளி.என்.ரத்னம் பத்தாம்பசலி சிரிப்புடன் சரி. டி.என்.ராமச்சந்திரன் கோமாளி. மற்றவர்கள் எல்லாம் பூச்சாண்டிகள், இந்த காலத்து வடிவேலு, செந்தில், கவுண்டமணி போல. விவேக் கூட ஃபார்முலா நகைச்சுவை மட்டுமே அளிப்பதில் வல்லவர். என்னை கேட்டால் கலைவாணர், சந்திரபாபு, நாகேஷ்: அத்துடன் சரி, நகைச்சுவை. மற்றவர்கள் எல்லாம் சிரிப்பு தயாரிப்பாளர்கள், டணால் தங்கவேலு உள்பட. ஆனால். அவர் கொஞ்சம் பரவாயில்லை/தேவலை! கலைவாணரிடம் உதாரகுணமும், சீர்திருத்த மனப்பான்மையும் ’31 பற்கள்’ ‘எவெர் ரெடி’ ஜோக் திறனும் குடியிருந்தன. ’31 பற்கள்’ ஜோக் சொல்லிட்டு ஓடிடிறேன். ஏன்னா, அண்ணா வெங்கிட் சாமிநாதன் எழுத, அதை த.ம.அ. மரபு விக்கியிலேயே போட்டு இருக்கிறது. இனி நான் ‘குண்டக்க மண்டக்க’ எதாவது எழுதினால், நன்னா இருக்காது. அதை படிச்சுறுங்கோ. ஒரு துளி மாதிரிக்கு:
“...அவர் அளவுக்கு அவரது நகைச் சுவை பங்கேற்பை வெற்றுச் சிரிப்பூட்டும் காரியமாக மட்டும் அல்லாமல், சமூகத்தில் தான் காணும் கேலி செய்யப்பட வேண்டியவற்றை கேலி செய்யவும், கண்டனம் செய்யப்படவேண்டியவற்றைக் கண்டனம் செய்யவும் பயன்படுத்திக்கொண்டார். எப்படி கேலி என்பது தான் ஏற்றுக்கொண்ட பாத்திர வெளிப்பாடாக அவர் கருத வில்லையோ அப்படியே இந்த சமூக கேலியையும் கண்டனத்தையும் அவரது தன் வெளிப்பாடாகவே காணவேண்டும். இது மிக அரிதாகக் காணும் காரியம். இதை நான் சார்லி சாப்ளினைத் தவிர வேறு யாரிடமும் கண்டதாகத் தோன்றவில்லை தமிழ் நாட்டில் என்.எஸ்.கிருஷ்ணனனைத் தவிர. அது அவரது சிந்தனைகள் சார்ந்து, நம்பிக்கைகள் சார்ந்ததாக இருந்தது. அவரது நகைச் சுவை, சந்தர்ப்பங்களால் ஆனது, சிந்தனைகளால் ஆனது. பேச்சினால் ஆனது. அவரது தோரணைகளால் ஆனது.....”
இனி 32வது பல்: ஒரு இடத்தில் இவர் பேச வேண்டிய வசனம் ~‘உன் 32 பல்லையும் உடைப்பேன்’; பேசியது ~ ‘உன் 31 பல்லையும் உடைப்பேன்’ சமாளிப்பு: ‘ நீ பல்வலியால் சாகவேண்டும் என்று என் விருப்பம். அதற்காக ஒன்றை விட்டு வைத்தேன்! இன்னம்பூரான் 30 08 2011 உசாத்துணை: http://www.heritagewiki.org/index.php?title=ஒரு_அசலான_மனுஷன்_-_என்._எஸ்._கிருஷ்ணன்
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 00:37, 30 ஆகஸ்ட் 2011 (UTC) |
