வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 27

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்புரான்


நீங்கள் எல்லாம் கலித்தொகை படித்து ‘மஞ்சு விரட்டியவர்கள் என்று தெரியும். நானியற்றியதோ, எட்டுத்தொகை’ ~ ‘கிரிக்கெட் எட்டுத்தொகை’! ‘பதினொன்று முட்டாள்கள் ஆடுகிறார்கள், ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள்’ என்றாராம், வேவல் பிரபு. வேலை போயிடுத்து! இதனால் இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. விடுங்க அதை. கிரிக்கட்டின் ஆளுமை கடல் கடந்து, மலையேறி, பனி மழை/கடும்வெயில்/ வீசும் காற்று எல்லாம் தாங்கி, இவ்வுலகின் பல நாடுகளில் கொடி கட்டி பறக்கிறது. சூதாட்டம் வலுத்தாலும், பந்தாட்டம் குறையவில்லை. ஜாக்கெட் வித்து பாக்கெட் நிரம்பினாலும், ஆட்டத்துக்குக் கூட்டம் வந்தபடி. லண்டன் ஓவல் மைதானமானாலும் சரி, சேப்பாக்கமாக இருந்தாலும் சரி, கிரிக்கெட்டபிமானம், நாடு கடந்த தேசாபிமானம்.


ஆகஸ்ட் 23, 2011 ஹிந்து இதழ்: ‘ இன்னா டென்ஷன், ஓவல் மைதானத்தில்! டமாரத்தில் இழுத்துக்கட்டிய ஆட்டுத்தோல் போல...கேமராக்களும் கண்ணாயிரங்களும் என்ன என்ன?...டெண்டுல்க்கர் 91 அடிச்சாரே! ப்ரெஸ்னன் அவரை வீழ்த்திய நேர்த்தி என்ன, என்ன?...காலை முன் எடுத்து வைத்தாரே... மட்டையை ஓங்கின வேகத்திலே, ஆஃப்ஸ்டம்ம்புக்கு நகர்ந்தாரே...அடிச்சது என்னமோ சரி தான். ஆனாக்கே லெக்-ஸ்டம்ப் ஆயிடுத்தே...’ எத்தனை டெக்னிக்கல் சொற்கள் ஐயா? தனித்தமிழ் கிரிக்கெட்டில் என் செய்ய இயலும், சேசாத்திரி? இத்தனை முஸ்தீப்பு எதுக்கு? கிரிக்கெட் ஐக்யூ தான் டெமாக்ரடிக் ஆச்சே!


பக்காத்தாத்து வாண்டு ‘கிரிக்கெட் குட்டு’ (குற்றால லிங்கம்) சொல்றான்! ஹீரோ சராசரி 99.4 ஓட்டங்கள் எடுத்து ரிக்கார்ட் பண்ணாரு;
தன் கிரிக்கெட் வாழ்நாளில், மூன்றவது தடவையே டெஸ்ட் மாட்சுக்களில் 50 க்கு மேல் எடுத்ததவராச்சே, வாழ்நாள் முழுதும் அந்த ரிக்கார்டை மைண்டைன் பண்ணாரு, ஹீரோ;


‘ஒரே நாளில் 309 ஓட்டங்கள் எடுத்தார், தெரியுமா’ என்கிறான், முச்சு விடாமல் சொல்றான்: 1930:லீட்ஸ்: இங்கிலாந்து என்று;
5 டெஸ்ட் சீரீஸ்லெ ஐயா ரிக்கார்டு 201.50 ஓட்டங்கள்; கேக்கறத்துக்கு முன்னாலே பதில்: 1931 32 தென்னாப்பரிக்கா X ஆஸ்ட் ரேலியா என்று படபடக்றான்.


தெரியுமா? டெஸ்ட்களில் ஏழு தடவை 500 ஓட்டங்கள் ஒரே சீரீஸ்லெ’ என்று குதியாட்டம் போட்டண்டே சொல்றான், ‘லாராவும் இப்டி’ னு;
முதல் தர கிரிக்கெட்டில் ஹீரோ எடுத்த மொத்த ஸ்கோர்: 28,067; அம்மாடி! பார்க்கப்போனால், டெஸ்ட்களில் டீம் எடுத்ததில் 26% ஹீரோ எடுத்தது; அப்படியா?


இந்த மாதிரி பட்டியல்களை வைத்து, கிரிக்கெட் குட்டு கட்டியம் கூறியது யார் என்று இது வரை தெரியாவிட்டால், தொல்லைக்காட்சியில் கூட நீங்கள் கிரிக்கெட் பார்க்கக்கூடாது. அவனை கேட்டேன், ‘ஏண்டாப்பா! இத்தனை வக்கணையா, என்னிக்கோ விளையாடிய ஸர் டொனால்ட் ப்ராட்மென்னை பற்றி இத்தனை சொல்றயே: அவர் 2001 இல் போனபோது நீ ஜனிக்கக்கூட இல்லை என்று சொல்லி, ஸ்டைலா 17x14 என்ன என்று கேட்டேன். கைபேசிலே இருக்ற கால்குலேட்டர்லெ கண் வக்கறான். அதை முறியடிக்க, 27 - 19 எவ்வளவு என்றேன். 42 என்றான். தேறாத கேஸ்னு விட்டுட்டேன்.


கிரிக்கெட்டில் முதல் ஸர் விருது வாங்கிய அதிசய ஹீரோ டொனால்ட் ப்ராட்மனின் பிறந்த நாள், இன்று. ஆஸ்ட் ரேலியா அவரை மறக்கவே மறக்காது. இன்று அவர் ஒரு சுற்றுலாத்தலம். பெளராய் என்ற இடத்தில் ஆகஸ்ட் 27,1908 அன்று பிறந்த ஸர் டொனால்ட் ப்ராட்மன், கிரிக்கெட் உலகத்தின் முதல் புலி. ஆஸ்ட் ரேலியாவுக்காக, 20 வருடங்கள் (1928 ~1948) 52 டெஸ்ட்் மேட்சுகளில் விளையாடி, ரிக்கார்டுகளை முறியடைத்து, பிரபலம் ஆனவர். கிரிக்கெட்டுக்காக ஸர் விருது பெற்ற ஒரே ஆஸ்ட் ரேலியன். இவர் முதல் சென்ச்சுரி அடித்தது 12 வயதில்.டென்ஷன் இல்லாதவர் என்ற புகழ் படைத்தவர். அவருடைய தனித்திறன் யாதெனில், யாராவது எதிர்வாடைக்காரன் தன்னிடம் விட்டு நகர்ந்தால், காலியிடம் நோக்கி அக்ஷ்க்ஷணமே பந்தை அடிப்பது. இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரர் சீ.பி. ஃப்ரை சொன்னது போல, ஏகாக்ரஹ சக்தி ஜாஸ்தி, நம்ம ப்ராட்மன்னுக்கு. எப்படி நம்ம ப்ராட்மென் ஆனார், இந்த ஆஸ்ட் ரேலியர்? அதான் கிரிக்கெட்டாபிமானம்! அவர் ஒரு தடவை டக் (0) அடித்தது ஞாபகம் இருக்கு.


இன்னம்பூரான்

27 08 201





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:52, 27 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 27 August 2011, at 09:55. This page has been accessed 2,038 times.