அன்றொரு நாள்: அக்டோபர் 6மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
டைம்லைன்: முன்னும் பின்னுமாக: அங்குமிங்குமாக:
பொட்டி ஶ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்தை போய் பார்த்ததையும், ராஜாஜியின் எதிர்ப்பையும், நேருவின் விட்டுக்கொடுத்த மனப்பான்மையும், மொழிவாரி மாநிலங்கள் தேசாபிமானத்தை குலைக்கும் என்று நான் எழுதிவிட்டு, நேர்காணலில் நடந்த துவந்த யுத்தத்தையும் மறக்கவில்லை.
இன்று ஒரு பாகிஸ்தானியர் கடையில், அவரும், நானும், ஒரு பங்களாதேசியும், ஒரு பிரிட்டீஷ்காரரும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தோம். இனபேதம் ஒன்றும் தென்படவில்லை.
செர்பியா,மாண்டெனெக்ரோ,ஸ்லோவெனியா, க்ரோஷியா, பாஸ்னியா-ஹெர்ஸெகொவினியா & மாசிடோனியா ஆகிய மாநிலங்கள் அடங்கிய யூகோஸ்லாவிய சோஷலிச குடியரசின் பிரகடனம். நேருவின் நண்பரான மார்ஷல் டிட்டோ சர்வாதிகாரி. இனவெறியாளர்களை அடக்கி வைத்திருந்தார்.
மார்ஷல் டிட்டோ மறைவு.
செர்பிய கொடுங்கோலன் ஸ்லோபடான் மிலோசெவிக் அதிபரான பிறகு, இனவெறி பேயாட்டம் ஆடியது; நாடு குட்டிச்சுவரானது. இனவெறியாளரான இவரது கொடுங்கோலாட்சியில் 20 ஆயிரம் மக்கள் 1991 க்ரோஷியன் போரிலும் மாண்டனர்; 250 ஆயிரம் மக்கள் 1992 -5 பாஸ்னியன் போரிலும் மாண்டனர். அக்டோபர் 5, 2000
அரசின் கைப்பாவையான ரேடியோ கடந்த மாத தேர்தலின் முடிவு ரத்து செய்யப்பட்டதாகவும், மறு தேர்தல் நடக்கப்போவதாக, உச்சநீதிமன்றம் முடிவு செய்ததாக அறிவித்தது. உள்ளடங்கிய அனர்த்தம் ~ இன்னும் ஒரு வருடகாலம் மிலோசெவிக் நீடிப்பார். அக்டோபர் 5, 2000: மாலை மணி 3: அக்டோபர் 6, 2000:
கொஸாவா,பாஸ்னியா, க்ரோஷ்யா போர்க்கள குற்றவாளியாகவும் பாஸ்னியாவில் இனவெறி படுகொலையாளியாகவும், மிலோசெவிக், ஐநாவின் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, நாடு கடத்தப்பட்டு, ‘த ஹேக்’ என்ற நகருக்கு கொணரப்பட்டார்
மிலோசவிக் சிறையில் மாண்டு போனார். செர்பியாவின் பொருள் நிலையையும், அரசியல் ஆளுமையையும் குலைத்த புண்யம் இவரைச்சாரும். இந்த பிராந்தியங்களில், ஐநா சார்பாக பணி புரிந்தவர்களை எனக்கு நன்றாக தெரியும். ஐநா கோர்ட்டு நடவடிக்கைகளை அக்காலம் நான் கவனித்தது உண்டு, தொலைக்காட்சியில்.
இங்கு யூகோஸ்லாவியாவின் வரலாறும் இனவெறிகளும், இந்தியாவின் வரலாறும், பிரிவினை அழுத்தங்களும் ஒப்புமை செய்யப்படவில்லை. இந்திய தேசாபிமானத்தின் சுரத்து இறங்குவதையும், கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை. இன்னம்பூரான் 06 10 2011
http://www.philateca.com/thumbs/stamp_6653.jpg
உசாத்துணை: http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/5/newsid_2493000/2493021.stm http://news.bbc.co.uk/1/hi/in_depth/europe/2000/yugoslav_elections/default.stm http://news.bbc.co.uk/1/hi/world/europe/country_profiles/1039269.stm
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:50, 7 அக்டோபர் 2011 (UTC) |