வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொருநாள்: மார்ச் 15:2: கைக்கா உருளி

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான் 


‘ப்ரூடசும், எடுபிடியும்’:1


ரோமாபுரி உயர்ந்த கதையையும், வீழ்ந்த கதையையும், ஜூலியஸ் சீஸரின் படுகொலையை மையப்படுத்தி, வரலாற்றை கூறுவதற்கு ஆரூடம் போல, அமைவது இரு உரையாடல்கள், நேரடி சம்பந்தம் யாதும் இல்லை என்றாலும். அதனால் தான் ‘ப்ரூடசும், எடுபிடியும்’ என்று உளவியல் பேசும் சித்திரத்தில், ‘கைக்கா உருளி’ உருளத்தொடங்குகிறது.‘ஜூலியஸ் சீஸர்’ நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் பன்முகத்தை, நாடகப்போக்கை, தொன்மை (mystic) வருணனைகளை, திடுக்கிடும் திருப்பங்களை, விந்தை கதைமாந்தர்களை, விறு விறு நிகழ்வுகளை போற்றி, ஆராய்ந்து, புதிரவிழ்க்கும் நூல்கள் வருடாவருடம் வந்த வண்ணம் உளன. ‘வாழ்க்கையில் மடத்தனத்துக்குக் குறைவில்லை;ஒரே கசமுசா கசமுசாவென்று சத்தம்;ஆனால் ‘ஆஹா!, ஓஹோ!‘ என்று ஒன்றும் நடந்து விடவில்லை; அந்த வாழ்க்கையின் சாரம்சத்தைத் தான் நான் அளிக்கிறேன்.‘ என்று அவரே சொன்னதாக, சொல்லப்படுகிறது. ப்ருடசும் அவனது எடுபடியான லூசியஸ்ஸும் இரு காட்சிகளில் பேசிக்கொள்வதின் மென்மையை இப்போது காண்போம். உள்ளுறையும் நுட்பத்தை பிறகு பார்க்கலாம். ஷேக்ஸ்பியரின் பன்முகத்தில், உளவியல் ஓடி விளையாடுவதையும் நோக்கலாம். ரோமாபுரி வரலாற்றுகளுடன் ஒப்பியலும் காணலாம்.

ஒரு சிறிய முன்னுரை:


‘ஜூலியஸ் சீஸர்’ நாடகத்தின் இரண்டாவது அங்கம்: முதல் காட்சி: ப்ரூடஸின் தனி மொழி:
“It must be by his death: and for my part, 
I know no personal cause to spurn at him, 
But for the general. He would be crown'd: 
How that might change his nature, there's the question. 
It is the bright day that brings forth the adder; 615

And that craves wary walking. Crown him?—that;— 
And then, I grant, we put a sting in him, 
That at his will he may do danger with. 
The abuse of greatness is, when it disjoins 
Remorse from power:..
... Fashion it thus; that what he is, augmented, 
Would run to these and these extremities: 
And therefore think him as a serpent's egg 
Which, hatch'd, would, as his kind, grow mischievous, 
And kill him in the shell.” 635

(அதாவது: ‘எனக்கு சீஸர் மீது தனிப்பட்ட விரோதமில்லை...ஆனால்,முடி சூடிய பின் அவன் குணம் மாறினால்! வெயிலேறினால், சர்ப்பம் பொந்திலிருந்து வெளியில் வந்து நடமாடுகிறது...தவறுக்கு வருந்தாத ஆளுமை தான் மேலாண்மையின் இழிவுச்செயலின் அடித்தளம்... பாம்பின் முட்டையை உடைத்து விடுவது தான் உசிதம்.’

சீஸர் ப்ரூடஸ்ஸுக்கு Father Figure: தந்தை போல. ப்ரூடஸ்ஸின் வியாகூலமே, மக்கள் ஆட்சிக்காக,சீஸரை ஒழித்துக்கட்டவேண்டிய கட்டாயம். இது ஒரு புறமிருக்க, எஜமானனுக்கும், எடுபிடிக்கும் (லூசியஸ்) உள்ள உறவை நோக்கவேண்டும்.
உரையாடல்:1
‘ஐயா! உமது அறையில் விளக்கேற்றி வைத்துள்ளேன். ஜன்னலில் எறியப்பட்ட மடல், இது’.
‘சரி.சரி. நீ தூங்கப்போ. நாளை தானே மார்ச் 15 (the Ides of March).
‘எனக்கு தெரியாது’
‘காலெண்டர் கொண்டு வா.’
*
(மடலோ ப்ரூடஸ்ஸை ஆவேசப்படுத்துகிறது. ‘தூங்கி வழியும் ப்ரூடஸ்ஸே! எழுந்திரு...ரோமாபுரி ஒருவனின் ஆணையில் முடங்கலாமா? நீ தான் ரக்ஷகன்..’)
*
லூசியஸ் வருகிறான். மறுநாள் தான் மார்ச் 15 என்கிறான். யாரோ கதவை தட்டுகிறார்கள். ‘ப்ரூட்டஸ் தனி மொழி: ‘ காஷியஸ் என் மனதை சீஸருக்கு விரோதமாக மாற்றிய பிறகு, எனக்கு துயில் கொள்ள முடியவில்லை’.

லூசியஸ் வாசலில் போய் பார்த்து விட்டு வந்து, ‘ஐயா! வந்திருப்பது உங்கள் நண்பர், காஷியஸ். கூட வந்திருப்பவர்கள், முகத்தை மறைத்துக் கொண்டு...’ அவர்களை அனுமதிக்கச்சொல்லும் ப்ரூடஸ்:
“ லூசியஸ் பையா! ஓ! ஆழந்த உறக்கமா? தூங்கு. உனக்கென்ன கவலை? சிந்தனை? அதான் அப்படி தூக்கம்”. (— Julius Caesar, Act II Scene 1)
இந்த காட்சி ஜூலியஸ் சீஸரின் படுகொலை நடப்பதற்கு முந்திய தினத்தின் நிகழ்வு.
*
திரை.
(தொடரும்)


இன்னம்பூரான்
16 03 2012


http://www.deptfordplayers.org/mstage/jc01/prodstills/Lucius%20&%20Brutus-IV,iii.jpg


‘ப்ரூடசும், லூசியஸ்ஸும்’







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:02, 19 மார்ச் 2012 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 19 March 2012, at 11:02. This page has been accessed 1,124 times.