முதற் சங்கத் தமிழ்: ஈனன்னை சீர்பியம் -பாடல்கள் 17&18(முற்றும்)

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஈனன்னை சீர்பியம் பாடல்கள் 17&18(முற்றும்)

உரை முனைவர் கி. லோகநாதன்

ஈனன்னை சீர்பியம் :பாடல் 17

வேதச் சார்பின் எழுந்துள்ள வைதீக சமயம் என்றால் என்ன? ஆகமங்களின் சார்பாக எழுந்துள்ள ஆகமீய சமயம் என்றால் என்ன என்று பிரித்தறிய பேருதவியாக அமைகின்றது பாடல் 16. இஇதில் முக்கியமானது என்னவென்றால், வைதீக மார்க்கத்தின் முக்கியக் கூறாக இருக்கின்ற வேள்வி அல்லது அக்னி ஹோத்திரம் எனப்படுவது ஆகமீயச் சமயத்தில் இருந்து அங்கு சென்ற ஒன்று என்ற உண்மையை உணர்த்துவதே யாகும்.

இந்த உண்மையைத் தாங்கி வரும் ஓர் வரியை மீண்டும் காண்பம்

136 izi-ur mu-un-dub su-luh si bi-in -sa
one has heaped up the coal (in censor) prepared the lustration
எசிஓர் முன் தோப்உ சூலை சீ பீயின் சார்

இங்கு izi என்பதின் இன்னொரு வடிவாக "ஈ-சீ" என்று கொள்ளலாம் அதாவது வெளிச்சமாகிய "சீ"யை ஈவது என்றவாறு. அப்படியென்றால் "coal" என்பதற்கு ஒக்க ஓர்வகை எரிபொருள். "ur" என்பது "உயர்" என்றோ அல்லது ஒன்றாகத் திரட்டுவது என்று பொருள்படும் "ஓர் " என்றோ ஆகலாம். "dub" என்பது "தோப்பு" என்பதெனின் , அதாவது குவிப்பது எனின், இஇந்த ஈ-சிகள் எரிக்கப்படும் குச்சிகள் அல்லது விறகுக் கட்டைகள் என்றாகும். su-luh என்பது "சூலை" என்பதின் பழைய வடிவம் எனின், இப்பொழுது இஇந்த வரியின் பொருள் தெளிவாகின்றது. சூலை என்னும் வேள்விக் குழிக்குள், சுள்ளிகளாக பல அந்தக் குழியே நிறையுமட்டும் குவிக்கப்படுகின்றன என்றே பொருள் படுகின்றது.

கோயில்களில் இஇன்று கூட வேள்விகள் இஇப்படித்தானே நடத்தப்படுகின்றன? எரிப்பதற்கு இஇன்று பலவகையான குச்சிகளோடு நவதானியங்களையும் சேர்க்கின்றனர்.

இஇது ஏற்புடைத்து என்றால் பழைய பாண்டிய மன்னர்களில் ஒருவனாகிய "பல்யாகசாலை" முதுகுடுமி பெருவழுதி, ஆரிய வயப்பட்டு ஓர் வைதீக சடங்கினைச் செய்தவன் அல்ல, பண்டே ஆகமீய சமயத்தின் ஓர் முக்கிய சடங்காக இஇருந்த ஒன்றை செய்தவன்தான் என்றும் ஆகிறான்!

அடுத்த வரியும் ஆழ சிந்திக்க வேண்டிய ஒன்றாக விளங்குகின்றது.

137. e-es-dam-ku ma-ra-gal sa-zu-na-ma-sed-e
The nuptial chamber awaits you let your heart be appeased

இங்கு "இல் ஈசத்தம்" (e-es-dam) என்பதை "nuptial chamber" என்று கொள்வது பொருந்துவதாகத் தெரியவில்லை-- கோ- எனும் அடை இருப்பதால். ஆக இந்த "இல் ஈசத்தம்" எனும் மனையை அதிகார பீடம் அல்லது தலைமை பீடம் என்று கொள்வதே பொருந்தும். இது கருவறையாகவும் இருக்கலாம். ஆக இது ஈனன்னையை மூலத்தில் ஆவாகனம் செய்வதாகவும் இருக்கலாம்

அல்லது தமது இதயத்தையே தந்து அதில் ஈனன்னையை ஆவாகனம் செய்வதாக இஇருக்கலாம். அதனால் ஈனன்னை மனந் தணிவதாக இஇருக்கலாம். இஇதனால் இந்த வேண்மாள் ஊன் உடம்பை ஓர் ஆலயமாக்குகின்றாள், அதனால் தன் விதியை மாற்றுகின்றாள் என்றும் ஆகின்றது!

மந்திரக் கலையின் பொருள் இஇதுதானே? போற்றி போற்றி இஇறைவனைப் புகழ்ந்து அவனது அன்பிற்குப் பாத்திரமாகி அவன் தன்னுள்ளே எழுந்து தனைச் செலுத்த விடத் தானே இஇந்த மந்திர செபங்களும் பற்பல தவங்களும் தியானங்களும்?

இந்தத் தெளிவோடு அடுத்த பாட்டிற்குச் செல்வோம்.

சீர்பியம்: பாடல் 17.

143. nin gu-tuku nir-gal gu-en-na-ke
The first lady the reliance of the throne room

நின் கோதகு நீர்கள் கோ ஏண்ணக்கே

144. sizkur-ra-na su ba-an-si-in-ti
Has accepted her offerings

சீர்சு கூறன சூர் அவன் சீயின் தில்

145. sa-inanna-ke ki-be ba-na-ab-gi
Innana's heart has been restored

சாய் ஈனன்னாக்கே கீழ்பே பண்ணு ஆப் மீள்

146. u ba-an-na-du la-la ba-an-su-su hi-li-ma-az ba-an-du-du
The day was favourable for her, she was clothed sumptuosly, she was garbed in womanly beauty

ஓர் அவன்ன தூ; இஇழைஇஇழை அவன் சூழ்சூழ் எழில்மாள் அபன் தோல்தோல்

147. iti-e-gim a-gim la-la ba-an-kur
Like light of the rising moon how she was sumptuosly attired!

இ(ந்)தி ஏஙின் ஆங்ஙன் இஇழைஇஇழை அவன் கூர்

148. nanna u-zi-de-es mu-un-e-a
When Nanna appeared in proper view

நன்னா உன் சித்தேயிசு முன் ஏய

149. ama-ni nin-gal-la-ra sud-mu-na-an-ra-as
They( all ) blessed her (Inanna's ) mother Ningal

அம்மா-நி நின்கள்ளன்ற சூதம் மோன்னன் அறையிசு

150 gis-ka-an-na-ke silim-ma mu-na-ab-be
The (heavenly) doorstill called "Hail!"

குச்சிகண்ணக்கே சீலிம்ம அவைமுன!

குறிப்பு.

143. gu-tuku=ku-tuku.> கோ தகு: அரசிமைக்குப் பொருந்துவது; gu-en-na=ku-en-na> கோ ஏண்ண : உயர்ந்த அரசப் பதவி

144. sizkur-ra-na> சீர் கூறு அவன: இஇங்கு 'அ(வ)ன்" ஆண் என்றும் பெண் என்றும் பகா உயர்திணை சுட்டு; su ba-an> சூர் அவன்> கரம் அவன்: கை அவன்; si-in-ti. சீயின் தில்> தில்லிசின்? தில்> திகழ்?

145. ki-be ba-na- ab-gi> கீழ்பே அபன்ன ஆப் மீள்: துரந்து சென்று விட்ட அம்மை அவளுக்காக பூமிக்கு மீள்தல்

146. u>ஊ, ஓர்: காலம் , ba-an--na-du> அவன்ன தூ : இஇதனால் காலம் ஒருவருக்கு தூய்து என்றும் அல்லை என்றும் அன்று காலக்கணிப்பு நடந்துள்ளது போலும்; சோதிடக்கலை? la-la> இஇழை இஇழை: அணிகலன்கள்; su-su> சூழ் சூழ்; hi-li> எழில். ma-az> மாசு> மாது?

147. iti>இஇதி> இந்தி> இந்து?

148 u-zi-de-es> ஊ சித்தேயிசு: உன் சித்தேயிசு :மெய்யாகும் காலம்? மீண்டும் சோதிடக்கலையின் குறிப்பு?

149 sud> சூதம், சுதி , ஓர்வகை துதிபாடல். பண்டு அரசர்களை துயில் எழுப்ப சூதர் என்பார் அரண்மனையில் இஇருந்தனர் என்று சங்க இஇலக்கியங்களின் வழி அறிய வருகிறோம்.

150. gis-ka-an-na> குச்சி கண்ண: திறவு கோல்? கண்: வாயில்? சாளரம்? ab-be> அவையே: அவைத்தல்: கூட்டமாக
செப்பல்?

ஈனன்னை சீர்பியம்: பாடல் 18

சென்ற பாட்டில் வரும் சில வரிகளை நாம் ஆழ சிந்திக்கவேண்டியவர்களாக இஇருக்கின்றோம். சுமேருத் தமிழர்கள் உழவினை முறைபடுத்தி அதனை ஓர் அறிவியல் துறை ஆக்கியவர்கள். காட்டாறு வெள்ளத்தை அணைகள் கட்டி கட்டுப்படுத்தி மழை பெய்யா காலத்தும் நீர் கிடக்குமாறு செய்து அதன்வழி ஆண்டு நெடுக ஒரே இஇடத்தில் குடிகொண்டு உழவு செய்து வாழக்கற்றவர்கள். இஇந்த திறத்தோடு வந்ததே வானசாத்திரக் கலை. இஇதுவும் கோயில்களிலே பெரிதும் பயின்றதாக அறிகிறோம். ஒவ்வொரு திருவிழாவும் பண்டிகையும் காலக்கணிப்புடனே இஇன்றுபோல் அன்றும் நடந்துள்ளது. ஆயினும் astronomy என்னும் அறிவியல் துறை வேறு, astrology என்னும் இஇந்த சோதிடக் கலை வேறு. இஇந்த வேண்மாள் சோதிடக்கலையின் குறிப்புக்களை இஇங்கு தருகின்றாளா? என்பதே நம் கேள்வி.

இஇதற்கு காரணமாக அமைவது இஇரண்டு கிளவிகள் : u4 -ba-an-na-du என்பதுவும் u8-zi-de-es என்பதுவும். இஇங்கு இஇந்த இஇரண்டு "ஊ" வெவ்வேறு சொற்கள். முன்னது "ஊ" அதாவது உயர்வது அல்லது உதிப்பது என்ற கருத்தில் அதன் சார்பாக "காலம்" என்ற கருத்தை மொழிவது.இ இதுவே "utu" என்றாகி குமரித் தமிழில் சூரியன் அதாவது "உதியன்" என்று பொருள் படும். "உதி" என்ற வினைச்சொல் இஇன்றும் பயிலும் ஒன்றுதான்

இஇரண்டாவது "u" என்பது "in proper view" எனப்படுகிறது. ஆகவே இஇதனை "பார்த்தல்" "சிந்தித்தல்" என்ற பொருளுடைய "உன்" என்று கொள்வதே பொருந்தும். "உன் சித்தி" "உன் சத்து" என்பதின் பழைய வடிவம் என்று கொள்ளலாம்.

இஇதனால் காலக் குறிப்பொடு வரும் முதல் கிளவியை " ஓரை அபன்ன தூ" அல்லது "உதி அபன்ன தூ"என்று கொண்டால், சோதிடக் கலையின் "நல்ல காலம்" போன்று ஆகின்றது. இஇப்படிக்கொள்ள முடியுமா? "நல்ல காலம்" என்பது "தூய காலம்" என்பதும் ஒன்றா?

அல்லை என்றே தோன்றுகிறது. "உதி அவன்ன தூ" என்பது முன்பு அவள் தூய்மைக் கெட்டிருக்க இஇப்பொழுது அக மாசுக்களைப் போக்கி தூய்மை உற்று நிற்கின்றாள் என்றே பொருள்படும். அகத் தூய்மை உதிக்கின்ற ஒன்று. ஆக இஇது சோதிடக் கலையின் கணிப்பு அல்ல மாறாக உளவியல் துறையின் அகநிலைக் கணிப்பு. அகத்தூய்மையோடு இஇறைவன் சந்நிதானத்தில் இஇருக்கவேண்டிவள் காம இஇழுப்பிற்கு ஆளாக அதனால் மாசுற்று இஇறைவி தனக்கு அகத்தே மொழிவதனை உணர்ந்து தெய்வாக்குகளாக மக்களுக்கு எடுத்துரைக்கும் திறத்தினை இஇழக்கின்றவளாக தான் ஆகப்போகிறோம் என்ற அச்சத்தில் தானே இந்த புலம்பல்?

ஆனால் இஇப்பொழுது வரவிருந்த அந்த வீழ்ச்சியை வென்றுவிட்டாள். அவள் இஇஷ்ட தெய்வம்(?) நன்னா (நல்லவள் என்று காட்டும்தெய்வம்?) அனைவரின் பார்வைக்குப் படுமாறு அவளோடுதான் இஇருக்கின்றாண் என்பதை அனைவரும் காணுமாறு அவன் வெளிப்படுகின்றான். அம்மை நின்களும் காட்சி தருகின்றாள், மூடப்பட விருந்த வானுலகின் நெடுங்கதவங்களும் திறக்கின்றன, இஇறைமையோடு இஇசைந்த வாழ்வு இஇந்த அகத்தூய்மையின் காரணமாக அவளுக்கு உரித்தாகின்றது, எழில் முழுமதி போல அவளும் எழுகின்றாள் , அழகான ஆடை அணிகலங்களோடு கண்டார் வியக்க அவள் உலாவருகின்றாள். வானுலகத்திலிருந்து விரட்டப்பட இருந்தவள் அந்தக் கொடுமையிலிருந்து தப்பிக்கின்றாள்.

The paradise about to be lost, is never lost; it is regained

இஇதெல்லாம் எப்படி? கோள்களின் இராசி மண்டலங்களின் நற் சேர்கையினாலேயா?

அப்படி இஇல்லவே இஇல்லை. அது அப்படித்தான் என்றால் பிரசவ வேதனை பட்டது போன்று இஇந்த அழகிய சீர்பியத்தைத் தொடுத்திருக்கமாட்டாள்; அம்மையை , ஈன்னைன்னையை கொற்றவைத்தாயை துர்க்கையை வியந்து அவள் திறத்தை எல்லாம் போற்றி போற்றி துதித்து செபம் செய்திருக்க மாட்டாள். இஇவ்வாறு செய்துதான "உதி தூ" அடைகின்றாள்.

இஇது கன்மக்கோட்ப்பாட்டைப் பற்றி ஓர் உண்மையை விளக்குகின்றது: நன்மையை செய்தால் நல்லதே நடக்கும். மேலும் இஇவ்வாறு செய்கின்ற நன்மை இஇறைவனை துதித்துப் போற்றி அவனை/அவளை தன் அகத்தே பிரதிட்டை செய்வதாக அமையுமெனில் எவ்வித தீங்கும் வராது . "உள்ளவாம் தெய்வங்கள் உள்ளத்திலே எழ, எல்லாஅம் நடக்கும் இனிதாக" என்று அருட்குறள் கூறும் அதே உண்மையைத்தான் இந்த அம்மையாரின் சொற்களும் உணர்த்துகின்றன என்று நினைக்கிறேன்.

இவ்வாறு வெற்றி கண்ட இந்த வேண்மாள் இஇறைவிக்கு நன்றிகூறி முடிக்கின்றாள் இஇந்த அற்புதத்திலும் அற்புதமாகி அழகிய பாட்டை. வேறு என்னதான் செய்யமுடியும்?

நானும் முடிக்கிறேன் ஏறக்குறைய நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இறையருள் துணை நிற்க எந்த மக்களுக்கு எந்த மொழியினருக்கு இஇப்பாடல் உரித்தோ அந்த மொழியினரிடம் மீண்டும் சேர்த்துவிட்டேனே என்ற பெருமிதத்தோடு, ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு

சீர்பியம் : பாடல் 18

151. nu-gig-ra du-ga-ni mah-a
For that her (Enduanna's) speaking to the Hierodule was exalted

நுங்கின்ற தூக்கனி மாஹ்-அ

152. kur-gul-gul an-da me-ba-a
Praise be (to) the devastatrix of the lands, endowed with me's from An

குன்று கொல்கொல் ஆண்டால் மெய் பாய

153. nin-mu hi-li gu-e inanna zami!
(To) y lady wrapped in beauty, (to) Inanna!

நின்மோ எழில் கோவே ஈனன்னா சாமீ!

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2011, 10:48 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,562 முறைகள் அணுகப்பட்டது.