மிக்சட் புரூட் ஸ்குவாஷ்மரபு விக்கி இருந்துஉமா சண்முகம்
அன்னாசி ஆரஞ்சு திராட்சை -1கிலோ எலுமிச்சம் பழச்சாறு -சிறிதளவு இஞ்சி சாறு -50 மில்லி லிட்டர் மற்ற பழங்களில் இருந்து 1 லிட்டர் சாறு இருந்தால் சீனி 2 கிலோ தண்ணீர் 1லிட்டர் சிட்ரிக் ஆசிட் 5தேக்கரண்டி மூன்றையும் கலந்து பாகு தயாரிக்கவும். பாகை வடிகட்டி ஆறவைத்து பழச்சாறுகளையும் இஞ்சி சாற்றையும் சேர்க்கவும் 1தேக்கரண்டி அன்னாசி எஸ்சென்ஸ் ராஸ்பெர்ரி சிகப்பு கலர் பவுடர் சிறிதளவு தண்ணீரில் கரைத்த1 1/4 தேக்கரண்டி சோடியம் பென்சோயேட் மருந்து முதலியவற்றை அத்துடன் கலந்து பாட்டிலில் நிரப்பவும்.
கமலா ஆரஞ்சு பிவரேஜ்
1.நன்றாக பழுத்த மஞ்சள் நிறமான கமலா ஆரஞ்சு பழங்களை எடுத்துக் கழுவி தோலுடன் சிறு துண்டுகளாக வெட்டி குக்கரில் வேகவிடவும். 2.நன்றாக மசிய வெந்ததும் வடிக்கட்டி பழக்கூழ் எடுத்துக் கொள்ளவும். 3.பழக்கூழ் 1கிலோ இருந்தால் 4 கிலோ சினீயுடன் 4 லிட்டர் தண்ணீரும் 100கிராம் 20தேக்கரண்டி) சிட்ரிக் ஆசிட்டும் சேர்த்து பாகு தயாரித்து வடிகட்டி பழக் கூழுடன் சேர்த்து ஆற வைக்கவும். 4.எஸ்சென்ஸ் தேவை இல்லை. 5.பொட்டாசியம் மெடா பைசல்பைடு1 1/2 தேக்கரண்டி சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி பாட்டிலில் நிரப்பவும். 6.1கிலோ பழக்கூழுக்கு சுமார் 11 பாட்டில் ஸ்குவாக்ஷ் கிடைக்கும்.நல்ல பழங்களாக இருந்தால் 2 பழத்திற்கு 3 பாட்டில் ஸ்குவாக்ஷ் கிடைக்கும்.
ஜிஞ்சர் ஸ்குவாக்ஷ்
நன்றாக முற்றிய இஞ்சியாக எடுத்து தோல் சீவி கழுவி அரைத்த விழுது 150 கிராம் 2. சீனி 1 1/2 கிலோ தண்ணீர் 3/4 லிட்டர் சிட்ரிக் ஆசிட் 4தேக்கரண்டி அரைத்த விழுது எல்லாவற்றையும் ஒன்றாக கலந்துஅடுப்பில் கொதிக்க வைக்கவும். 3.ஒரு கொதி வரவும் இறக்கி வடிக்கட்டி ஆறவிடவும். 4.சோடியம் பென்சொயேட் 3/4 தேக்கரண்டிசேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:33, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
|