நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 4.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 
ஆரோக்கியமான அழகு என்பது, மேல்பூச்சு இல்லாத இயற்கையான பளபளப்பான தோற்றம்தான்..ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவு மூலமாகதான் பாதுகாக்கப் படுகிறது, ஆகவே நாம் உண்ணும் உணவில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டாலே ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

Brinjal 2.jpg

உலகம் முழுவதும் கிடைக்கக் கூடிய ஒரு சில காய்  வகைகளில், கத்தரிக்காயும் ஒன்று. ஆங்கிலத்தில் மட்டும் இதற்கு ஆறு வித்தியாசமான பெயர்கள் இருக்கிறது.. இந்திய உணவு வகைகளில் கத்தரிக்காய்க்கு மிக முக்கிய பங்குண்டு. கொழுப்புச் சத்து இல்லாத, குறைந்த கலோரி உணவு என்பதும் இதன் தனிச் சிறப்பு. எண்ணெய் உறிஞ்சும் தன்மை என்பது இந்த காய்க்குச் சுத்தமாக இல்லாததால், உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவர்களின் கனவு என்றே இதைக் கூறலாம். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையாகச் சமைத்தாலும் நம்ம ஊர் காரசாரமான சமையல் முன்னே, வேறு எதுவும்
நிற்க முடியாதுங்க.........பலவிதமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் இருக்கும் கத்தரிக்காய்,சுவையில் மற்ற காய்கறிகளிலிருந்து தனிப்பட்ட ஒன்றாகும்


100 கி.கத்தரிக்காயின் ஊட்டச்சத்தின் அளவு :


6352401827.jpg

கலோரிகள் - 24.K                                                                                               நீர்க்கசிவு - 92.3 கி 

சோடியம் - 3 மி.கி.
கார்போஹைடிரேட் - 4 கி.                                                                                புரோட்டீன் - 1.4 கி.
பொட்டாசியம் - 200 மி.கி.
கொழுப்பு - 0.3 கி
வைட்டமின் C - 12 மி.கி.
வைட்டமின் A - 124 LU                                                                                      

1. குஜராத்தி பகாரா பைங்கன்.                                                                          
நம்ம ஊர் கத்தரிக்காய் காரக் குழம்புதான். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.                                                  

'4. 'பேருக்குத் தேவையான அளவு:                                                                                                                          

நல்லெண்ணெய் -30 மி.லி
450 கி. கத்தரிக்காய், 4 துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
15 கி தனியா
5 கி. சிகப்பு மிளகாய்.
225 கி. வெங்காயம்.
115 கி. துறுவிய தேங்காய்.
5 கி.பூண்டு.
5 கி. எள்ளு.
Eggplant curry.jpg
115 கி புளி கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

5. கி. பச்சை மிளகாய்.
1/2 டீ.பூன் - மஞ்சள் தூள்.
150 மி.லி. தண்ணீர்.
5 கி. வெல்லம்.
உப்பு தேவைக்கேற்ப.
தாளிப்பதற்கு, கடுகு, கருவேப்பிலை.                                               .

கடாயில், எண்ணெய் விட்டு, கத்தரிக்காயை அதில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். மேல் தோல் லேசாக பொன்னிறமாக ஆக வேண்டும். தீயில் இருந்து வெளியே எடுத்து, தனியே வைக்கவும். அந்த எண்ணெயிலேயே, தனியா , சிகப்பு மிளகாய் மற்றும் வெங்காயம் இவற்றை வதக்கிக் கொள்ளவும். அதனை எடுத்து தேங்காய் மற்றும் பூண்டுடன் அரைத்துக் கொள்ளவும் .   

எள்ளைத் தனியாக வேறு கடாயில் எண்ணெய் இல்லாமல், வறுத்து பொடித்துக் கொள்ளவும்.                       

புளித்தண்ணீரை அரைத்த மசாலுடன் சேர்க்கவும் .                                                                                                        .

மீதமிருக்கும் எண்ணெயில், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் போட்டு, அரைத்த மசாலுடன், எள்ளுப் பொடி, மற்றும் தண்ணீரும், தேவையான உப்பும் சேர்த்து மூடிவைத்து கொதிக்க விடவும். சிறிது கெட்டியானவுடன், வெல்லம் சேர்த்து, தகுந்த அளவு கெட்டியானவுடன், கீழே இறக்கி வைத்து விடவும்.      

தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகும் கருவேப்பிலையும் தாளித்து குழம்பில் ஊற்றவும்.


2. ஒரு எளிமையான, கத்தரிக்காய் கொத்சு :.                                                                                                               

கத்தரிக்காயை அப்படியே முழுதாக மைக்ரோவேவ் அடுப்பிலோ அல்லது ஆவியிலோ வேகவைத்து, தோலை நீக்கிவிட்டு, நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். அதில் சிறிய வெங்காயம், பச்சை மிளகாயுடன், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கருவேப்பிலையும் போட்டு நன்கு வதக்கி, அத்துடன், கத்தரிக்காயும், சிறிது புளித்தண்ணீரும் சேர்த்து லேசாகக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித் தழை போடவும்.                                                                                                                                                                        .

மேற்கண்ட முறையிலேயே கத்தரிக்காயை வேகவைத்து, பிசைந்துக் கொண்டு, அத்துடன், தக்காளி பொடியாக நறுக்கிப் போட்டு சிறிது வெங்காயமும், எலுமிச்சை சாறு மற்றும் சிறிது ஆலிவ் எண்ணெயுடன் தேவையான உப்பும் சேர்த்து கலக்கவும். ரொட்டி அல்லது சப்பாத்திக்கு நல்ல மேட்ச்.                                                                                                                                                                                                                                                                                         பவள சங்கரி திருநாவுக்கரசு.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2010, 15:59 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,369 முறைகள் அணுகப்பட்டது.