திருக்கைலை யாத்திரைப் பயணம் 1From மரபு விக்கி நமச்சிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க!
அதுக்கு அப்புறம் என் கணவரின் வேலை நிமித்தமாகவும், வேறு பலகாரணங்களாலும் ஊர் ஊராகச் சுற்ற நேர்ந்த போதும் இந்த மாதிரி ஒரு நினைப்பு இல்லை. சமீபகாலமாக யாத்திரீகர்கள் அதிகம் போக ஆரம்பித்ததிலும்,அதைப் பற்றி எழுதியதைப் படிக்க நேர்ந்ததிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆசை துளிர் விட்டது. ஆனால் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளானால் மறுக்கப் படும் என்ற உண்மைநெஞ்சைக் குடைந்து
வீட்டில் வேறு யாருக்கும் விஷயத்தைச் சொல்லவில்லை. ஆனால் முதலில் நம் நாட்டிலேயே சில கோயில்களுக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டு வரலாம் என எண்ணிக் கர்நாடகாவில் சில கோயில்களுக்குச் சென்றோம். அங்கே சிருங்கேரி சென்ற போது ஆசாரியரிடம் என் கணவர் கைலைப் பயணம் செல்ல இருப்பது பற்றிக் கூறி ஆசிகளை வாங்கிக்கொண்டார். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆசாரியர் எனக்குப் பழம் ஒன்றைக் கொடுத்து என்னையும் ஆசீர்வதித்தார்.. போகிற காரியம் ஜெயமாகும் என்பது போல் பழம் கிடைத்ததும் மனசுக்கும் ஒரு ஆறுதலாக இருந்தாலும் வீட்டில் வேறு யாரிடமும் சொல்லவே இல்லையே என்று குடைச்சல் இருந்து கொண்டு தான் இருந்தது. . எங்களோட பையன், பெண்ணுக்குக் கூட விசா வந்ததும் தான் சொன்னோம். அப்போ கூட இங்கே சென்னையில் உள்ள உறவினர்கள் கிட்டேயோ அல்லது என் கணவரின் வயதான அம்மாவிடமோ கூடச் சொல்லவில்லை. டெல்லி போனதும் அவங்க கிட்டே நேபாள் போகிறோம் என்று மட்டும் தான் சொன்னோம்.முக்திநாத் கோவிலுக்கு என்று நினைத்த அவர்கள் அதுக்கே கவலைப் பட்டார்கள். டெல்லியில் மாமியாருடன் என்னை விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டு வருவதாக இருந்தார் என் கணவர். ஆனால் அங்கே தங்குவதாக இருந்த நான் திடீரென ஏற்பட்ட மாறுதலால் பயணத்திற்குத் தயாரானேன். ஒரு விதத்தில் சந்தோஷம் தான். அவரை மட்டும் தனியாக எப்படி அனுப்புவது? என்று குழப்பமாக இருந்தது தற்சமயம் நானும் போவதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுத் தமிழ்நாடு விரைவு வண்டியில் டெல்லி போனோம்.
--Geetha Sambasivam 08:31, 2 ஏப்ரல் 2011 (UTC) |