சோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு, தண்டனைகள் 5மரபு விக்கி இருந்துசண்டை என்பது எப்போதுமே தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. அதுவும் இரு ஊர்களுக்குமிடையே சண்டை வந்தால் அடிதடி கொலை வஞ்சம் இவைதான் மிஞ்சும். அப்படியே இரு ஊருக்குமிடையே சண்டை வந்தாலும், பொதுவாக இந்த ஊர் சபைகள்தான் நியாயமான சபைகள் என்ற பெயர் பெற்றதாயிற்றே.. ஆலோசித்து செயல்பட்டு தீர்த்துக் கொள்ளவேண்டாமோ.. ஆஹா.. இப்படியெல்லாம் பிரச்னைகள் சடக்’கென தீர்ந்துவிட்டால் அது ராம ராஜ்ஜியம் என்ற பெயர் பெற்றுவிடுமே. மகாஜனங்கள் விடுவார்களா? உலகம் தோன்றிய முதலே மக்களோடு சண்டையும் ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்துவிட்டதே!
உணர்ச்சிவசப்படுதல், ஈகோ இவை போன்றவை அதுவும் இரு ஊருக்கிடையில் எனும்போது அந்தந்த ஊரின் கௌரவம் முன்னிலைப்படுத்துவதால் சம்பந்தப்பட்ட இரண்டு ஊர்களுமே விட்டுக்கொடுக்காதுதான். இரண்டு பூனைகள் ரொட்டித்துண்டுக்காகச் சண்டைபோட்டு நடுவில் குரங்கை வரவழைத்து அவஸ்தைப்படுமே, அதுபோல ஒரு சம்பவம் ஒன்று.:
திருச்சி மாவட்டத்தில் உள்ள இன்றைய திருவெறும்பூர், ராஜராஜன் காலத்தில் எறும்பியூர் என்ற பெயரால் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு வந்த வழக்கு ஒரு விசித்திரமான வழக்கு, இந்த எறும்பியூர்க்கும், அதன் அண்டை பிரதேசமான ஸ்ரீகாந்த சதுர்வேதிமங்கலம் ஊருக்கும் எல்லைத் தகராறு
இப்படி ஒரு அரியதான வழக்கை நடுநிலையாகத் தீர்க்க அரசன் இவர்கள் சம்பந்தம் இல்லாத மூன்றாம் நாட்டு பிரதிநியான கிள்ளியூர் நாட்டைச் சேர்ந்த வீரநாராயணன் செம்பியன் வடிவேலரை அனுப்பி வைக்கிறார். திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் பீபிலிகேஸ்வரம் கோயிலில் ஒரு கல்வெட்டு. இரு ஊர்களிலும் தீர விசாரித்து சம்பந்தப் பட்ட இரண்டு ஊர்களான எறும்பியூர், மற்றும் ஸ்ரீகாந்த சதுர்வேதிமங்கலத்துக்கும் இடையேயான எல்லைகளை வரையறுத்து, அந்தந்த ஊர் சபைகளுக்கும் தண்டனையும் சேர்த்தே விதிக்கப்படுகிறது. நிலவரி, அதற்கு எச்சோறு எனப்படும் தண்டனை வரி,
இது சிறிய பிரதேசங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும், இப்போதைய மாநில-நடுவண் அரசுகள் பாடம் கற்றுக் கொள்ளப்படவேண்டிய தீர்ப்பு இது. குறிப்பாகக் காவிரிப் பிரச்சினையில் நடுவண் அரசால் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படாமல் தீர்ப்பாயங்களில் நீண்ட நெடுங்காலமாக கிடக்கும் காவிரி
நிலவரி, நீர்வரிகள் ஏய்ப்பவர்கள் அவ்வப்போது தண்டிக்கப்பட்டது நிறையக் கல்வெட்டுகளில் வருகின்றனர். (வரி ஏய்ப்பது என்பது எக்காலத்து மக்களுக்கும் சகஜம் போலும்). நிலவரியை வசூல் செய்ய அவர்கள் நிலங்கள் அரசுடையாக்கப்பட்டு, பின் அவை விற்கப்பட்டு, நிலவரிகளைக் கழித்து ஏனைய
நிலவரி ஏய்ப்போருக்கு முதலில் தண்டம், இந்த மேல்வரி கட்டாவிட்டால் பிறகு நிலத்தை உரிமைப்படுத்தி விற்றல், நில அளவையையும் மீறிய தொகையென்றால் சிறை வாசம் எனச் சட்டங்களை அடுக்காக வரையறுத்து தர்மாசனம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு அரசு பொக்கிஷத்தைக் காத்தும் வளர்த்தும் வந்தனர். ஆனால் அதே போல வரி வசூலில் அதிகப்படியான செய்கைகளுக்குப் பொறுப்பானவர்களும் தண்டிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. (ARE 148/1927) அப்படிப்பட்ட அதிக வசூல் செய்யும் கிராம அதிகாரிகள் 5 மடங்கு தண்டம் செலுத்தவேண்டும். ஆகையினால் இவர்கள் அதி எச்சரிக்கையாகவே வசூல் செய்தனர் எனலாம்.ஏனெனில் இப்படி அதிகாரிக்கு ஒத்துழைத்த ஊர் சபையினரும் தண்டனைக்குள்ளான சம்பவங்கள் உண்டு.
திருவாண்டார் கோயிலுக்காக இறையிலியாக (வரிவிலக்கு) விடப்பட்ட நிலத்துக்காக, அந்த ஊர் சபையினரான திருபுவனமாதேவி சதுர்வேதிமங்கலம் அந்த நிலத்து வேளாண் இடம் வரியை வசூலித்துக் கட்டி விடுகின்றனர். இதை எதிர்த்து அந்த நிலத்து வேளாண் கோயிலில் முறையிட, கோயில் நிர்வாகி (தேவகண்மி) தர்மாசனத்தை நாடுகிறார். தர்மாசனம் ஊர் சபையினரைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் பொதுப்பணத்திலிருந்து 25 கழஞ்சு பொன் கோயிலுக்கு தண்டனையாகச் செலுத்த வேண்டும் என்றும், அப்படி வரி வசூல் செய்த கணக்குப்பிள்ளைக்கும் ‘வெட்டி’ (இதுவும் ஒரு தண்டனைதான்) யாக வசூல் செய்யப்பட்டு, இந்த தீர்ப்பை எதிர்ப்பவர் ஒவ்வொருவரும் 15 கழஞ்சு பொன் தர்மாசனத்துக்குக் கொடுக்கவேண்டும் என பயமுறுத்தியும், இறையிலி என்ற புனிதத்தைக் காப்பாற்றியது. இந்தக் கல்வெட்டு ராஜராஜனின் 12 ஆவது ஆண்டில், கி.பி.997 இல் பொறிக்கப்பட்டது (ARE 362/1919).
இந்தக் கல்வெட்டிலிருந்து இன்னொரு விஷயமும் நாம் தெரிந்து கொள்கிறோம். சில சமயம் சில செலவுகள் செய்யும்போது இக்கால கட்டத்தில் அழுதுகொண்டே செய்கிறோம். தண்டச் செலவு, வெட்டிச் செலவு என்றும் எரிச்சலாகப் பேசுகின்றோம். இந்த தண்ட, வெட்டி என்ற சொற்கள் சோழர்கள் காலத்தில் செய்த தவறுக்குத் தண்டனையாகப் பிராயச்சித்தப் பணமாகக் காண்கிறோம். சில ஊர்களில் கூடுதலாக வசூலிக்கப்படும் நில வரிகளை எதிர்த்து அரசாங்கத்துக்கு பிராது செய்தால் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உடையார் பாளையம் தாலுக்காவில் உள்ள மேலப்பழுவூரில் அகஸ்தியேஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகளின் படி (சுந்தர சோழர் காலம் – (966/67) கரம்பியன் பிரந்தகன் என்பான் அங்குள்ள நகரத்தார் சார்பில், அரசன் பழுவேட்டரைய அடிகளிடம், அதிகரிக்கப்பட்ட நிலவரிகளை ரத்து செய்து, பழையபடி குறைவான அளவில் வரிகள் விதிக்கப்படவேண்டுமென கோரிக்கை விடுக்க, உடனே பழுவேட்டரைய மாறவன் கந்தனார் ஒப்புக் கொள்வதாக இந்தக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. (ARE 374/1924 & are 367/1924 or SII-13,
--Geetha Sambasivam 14:30, 14 ஆகஸ்ட் 2011 (UTC)
|

