சித்தர் வழியில் சுரைக்காய்ச் சித்தர் 24மரபு விக்கி இருந்துதமிழக எல்லை, ஆந்திர எல்லையோரத்தில் புத்தூர் என்கிற மலைப் பிரதேசத்தில் வாழ்ந்த சுரைக்காய்ச் சித்தர்.நீண்டு அடர்ந்த சடைமுடியோடும் சிறிய கோவணத்துடனும், தீட்சண்யமான பார்வையோடும் காணப்பட்ட சித்தருக்கு…. சுரைக்காய்தான் பிரதானப் பொருள். அவர் சாப்பிடுவது, தண்ணீர் அருந்துவது எல்லாம் காய்ந்த சுரைக்காய் குடுவையில்தான்முதலில் இவர் பித்துப் பிடித்தவர் போல் புத்தூர், திருப்பதி, நகரி போன்ற இடங்களில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். மெல்ல மெல்ல அவரின் அமானுஷ்ய சக்தியும்,மூலிகை மருத்துவர் என்பதும் தெரிய வரபுத்தூர் மலையில் குடில் அமைத்துக்கொண்டு தன்னைத் தேடி வரும் நோயாளிகளுக்கு மூலிகை சாற்றையும், திருநீறு கலந்த தீர்த்தத்தையும் சுரைக்காய்க் குடுவையில் தருவார். அதனால்தான் அவருக்கு சுரைக்காய்ச் சித்தர் என்ற பெயர் வந்திருக்கிறது.
ஒருநாள் மாலை வேளையில் அவர் தியானத்திலிருக்கும் போது அவர் எதிரே முப்பது வயது பெண்ணொருத்தி கலங்கிய விழிகளோடு வந்து நின்றாள். சற்று நேரத்தில் கண் திறந்தார் சித்தர். எதிரே நிற்கும் பெண்ணைப் பார்த்து…, “என்னம்மா உன் கணவர் என்னைப் பார்க்க பயந்து மலை அடிவாரத்திலேயே நிற்கிறாரா?’’ என்று கேட்டார். சட்டென்று நிமிர்ந்த அந்தப் பெண்.., - “தன் கணவர் இவரைப் பார்க்கத் தயங்கி மலை அடிவாரத்தில் நிற்பது இவருக்கு எப்படித் தெரிந்தது? என்று வியப்பாய் சித்தரைப் பார்க்க..
“என்னம்மா பார்க்கிறே? எனக்கு எப்படித் தெரியும்னுதானே? இதோ இவன்தான் சொன்னான் ” என்று சித்தர் கை நீட்டிக் காட்ட அந்த இடத்தைப்பார்த்து அந்த பெண் மேலும் திகைத்தாள்.அங்கே சித்தரைக் கரம் கூப்பிவணங்கியபடி குரங்கு ஒன்று மரக்கிளையில் அமர்ந்திருந்தது.அந்தப் பெண் சித்தரை கண் கலங்கப் பார்த்தபடி சொன்னாள். “ ஐயா என் கணவருக்கு உடல் முழுவதும் புண் ஏற்பட்டு இப்போது… பார்க்கவே அருவருப்பாக வேதனையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் “ தெரியும், குறைவாக இருக்கும் போதே அழைத்து வரமால் இதுவரை நீங்கள் ஏன் தாமதிக்கணும்?’’
” நான் கொஞ்சம் இருக்கும் போதே கூப்பிட்டேன் ஆனால், என் கணவர்தான் அவருக்கு ஏன் உடல் முழுவதும் புண்கள் வந்ததுங்கிற காரணத்தை நீங்க கண்டு பிடிச்சிடுவீங்கன்னு பயந்துக்கிட்டு வரல. நாமஆங்கில வைத்தியர்கிட்டே போகலாம்னு சொன்னாரு. நானும் எங்கெல்லாமோ கூட்டிக்கிட்டுப் போனேன். ஆனால் குணமாகாம … உடல் முழுவதும் பரவி இப்ப முகமே விகாரமாகிறளவிற்கு வந்துடுச்சு..’’ என்றவாறு கண் கலங்க.. சித்தர் அவளைக் கனிவாகப் பார்த்தபடி சொன்னார். “லேசாகப் புண் இருக்கும் போதே வந்திருந்தால் மிக விரைவாக புண் இருந்த சுவடே தெரியாமல் செய்திருக்கலாம். இப்போதும் ஒன்றுமில்லை, நான் வணங்கும் ஈசன் அருளால் உன் கணவருக்கு விரைவில் குணமாகிவிடும்…’’ என்றவாறு கண்மூடி தியானிக்க ஆரம்பித்தார். சடென்று ஏதோ நினைத்தவாறு எழுந்து சரசரவென மலைஉச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“இவர் எங்கு போகிறார் ?” என்ற கேள்வியாய் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு பழுத்த சுரைக்காயோடு திரும்பி வந்தவர், அதனை இரண்டாகப் பிளந்து, அதற்குள் மூலிகைக் களிம்பை வைத்து அந்தப்பெண்ணிடம் கொடுத்து விட்டுச் சொன்னார்.“இந்தக் களிம்பு மிகவும் சக்தி வாய்ந்தது. இதை தினமும் இரவு வேளையில் உன் கணவர் உடல் முழுவதும்தேய்த்துக்கொண்டு தனிப்படுக்கையில் படுக்கச் சொல். காலையில் குளித்து முடித்து விட்டு வழக்கம் போல் வேலையைத் தொடரலாம். ஒரு மண்டலம் 48 நாட்கள் தொடர்ந்து இந்தக் களிம்பைத் தேய்த்து வர அவருக்குப் பூரண குணம் கிடைக்கும். அதுவரை நீங்கள் பாய்-துணி படுக்கையைத் தவிர்த்து வெறும் தரையில்படுத்து.., தினமும் ஈசனுக்கு விரதமிருந்து ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும்”
சித்தர் சொன்னதைக் கவனமாக கேட்ட அந்தப் பெண் நன்றியாய் வணங்கிவிட்டு நகர…, சித்தர் அந்தப் பெண்ணை “ஏம்மா..” என்று அழைத்தார். “அந்த களிம்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அதை உன் வீட்டு பூஜை அறையில் கொண்டு போய் வை.. தவறியும் அதை சாப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லக் கூடாது..: என்று கண்டிப்பான குரலில் சொல்ல… “சரிங்கய்யா… என்றவாறு நகர்ந்தாள். ‘இதை ஏன் சாப்பாட்டு அறைக்குக் கொண்டு போக கூடாது என்கிறார்? ஒரு வேளை இது விஷத் தன்மையுள்ளதோ…’’ என்று எண்ணியவாறு சர சரவென கீழே மலையடி வாரத்திற்குவந்தாள். அங்கே மரத்தடியில் கணவன் உடல் முழுவதும் போர்த்திருந்த போர்வையை விலக்கிவிட்டு ஆவலாய்க் கேட்டான்.
‘’ சாமி என்ன சொன்னாரு..’
“உங்களுக்குக் குணமாகிடுமாம், நீங்க பழைய மாதிரி மாறிடுவீங்களாம். 48 நாட்கள் இந்தக் களிம்பை தேய்ச் சுட்டா சரியாகி விடும்னு சொன்னாரு…’’ – அவள் நம்பிக்கையாய்ச் சொல்ல அவனுக்குள்ளும் நம்பிக்கை நுழைந்து பிரகாசமானான். சித்தர் சொன்னது போல் அன்று இரவு அவள் கணவன் உடல் முழுவதும் மூலிகைக் களிம்பைப் பூசிக் கொண்டு படுக்க … அவள் உண்ணா நோன்பிருந்து வெற்றுத் தரையில் படுத்தாள். பொழுது விடிந்து அவன் அறைக்குள்ளே சென்றவள் இப்போது முகம் முழுவதும் புண்கள் பரவி கண்கள் கூடும் விதமாக இமைகளை அசைத்தவனைப் பார்த்து அதிர்ந்தாள். நொடியில் அவளுக்கு சாப்பாட்டு அறைக்கு அந்த களிம்பை எடுத்துச் செல்லக் கூடாது என்று சித்தர் சொன்னதை அவள் கணவனிடம் சொல்லாமல் மறந்து போனது நினைவிற்கு வந்தது.
“ஏங்க.. ராத்திரி நான் கொடுத்த மூலிகைக் களிம்பைச் சாப்பாட்டு அறைக்கு எடுத்துக்கிட்டுப் போனீங்களா?
“’ ஆமாம், வழக்கம் போல ராத்திரி தண்ணீர் குடிக்கிறதுக்கு எழுந்தப்போ சாப்பாட்டு ரூமிற்குப் போனேன். நான் படுத்திருந்த வழியில் களிம்பு இருந்தால் அதை தட்டிவிட்டுப் போகிறேன்னு… கையிலயே எடுத்துக்கிட்டு சாப்பாட்டு ரூமிற்குப் போய் தண்ணி குடிச்சிட்டு வந்தேன் ” என்று அவன் சொல்ல அவள் குற்றம் செய்து விட்ட உணர்வினளாய்க் கண்கலங்க கணவனைப் பார்த்தாள்.
“தப்பு பண்ணீட்டேங்க… நானும் தப்பு பண்ணிட்டேன்…. வாங்க இப்பவே சித்தர் ஐயா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கலாம்..’’ என்று அவள் தன் கணவனின் கரங்களைப் பற்றி இழுத்தபடி சித்தரிடம் போனாள். தன் எதிரே கலங்கிய கண்களோடு நின்றிருக்கும் அந்த பெண்ணையும் அவள் கணவனையும் பார்த்த சித்தர், சட்டென்று கண்களில் கோபம் கொப்பளிக்க பற்களை நறநறவென கடித்தவாறு … அவன் கன்னங்களில் அறைந்தார். சட்டென வந்த தாக்குதலால் அதிர்ந்து போனவன் தனது தாடைகள் இரண்டிலும் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்து மேலும் அதிர்ந்தான். எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்
--Geetha Sambasivam 15:31, 26 மார்ச் 2011 (UTC) |
