அரிநெல் - கவிதை நூல் - எம் பார்வையில்மரபு விக்கி இருந்துபவள சங்கரி
‘அரிநெல்’ என்ற கவின்மிகு தலைப்பின் தோன்றலின் கூற்றையும் அச்சொல்லின் பொருள் அளிப்பதன் மூலம் ஆரம்பித்திருக்கிறார்.
அரிநெல் கசக்கி விளைந்தவைதான் எதார்த்தம் என்பது எப்போதும், எளிமையாகவும் உண்மையாகவும் இருக்கிறது என்று தாம் நம்புவதாலோ என்னவோ , மூழ்கி எடுத்த மிக எளிமையாக இத்தொகுப்பைப் படைத்ததன் காரணமாக, தன் சுவாசமாக இருப்பதும், உயிராக இருப்பதுவுமான கவிதை மானுடத்தின் மீது கொண்ட அதீத விசுவாசத்தின் காரணமாக , தன்னையே ஆசானாகவும், மாணாக்கனாகவும் ஆக்கிக் கொண்டமையையும் உணரச் செய்கிறார்.- நான் ’நடைமுறை’ எனும் கவிதையில், மனமெல்லாம் அதே போன்று, ‘அறிவுரை’ எனும் கவிதை, பார்க்கும் திசையெல்லாம் ‘எதார்த்தம்’ என்னும் கவிதையோ, புதுச்செருப்போடு ‘இலக்கியம்’ - மௌனத்தின் கற்காலமாய் இருந்தேன் செடியும்,மலரும், வேர்களும் கூட மொழிபெயர்ப்பின் மூலம் தங்களை படைப்பாளியாக்கிக் கொண்ட விதததை கவிஞர் வருணிக்கும் விதம் கரும்பின் சுவை - மௌனம். துன்பங்களால் துளையிடப்பட்ட புல்லாங்குழல் - இனிய கீதம் - சுவையான புனைவு! இரண்டே வார்த்தைகளில்,இருபது அர்த்தங்களை உணர்த்தும் அற்புதம் எழுதுகோல்! - கை, நா. தம் மொழி தாய்மொழியான விந்தையை விளக்கும் இனிமை - தாய்மொழி. பூக்களிடம் நம் செம்மொழியின் வல்லமையை பறைசாற்றும் விதமாக ஒரு பெரும் போராட்டத்தையே ஒரு சில வார்த்தைகளின் கூட்டமைப்பில் முடித்து வைத்த பாலஸ்தீனம் - இஸ்ரேல் எது எல்லை நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும், விண்மீன்களும், நிறைமதியும், இரவும், மலரும், மரமும்அனைத்தும் கவியின் புகழ்மாலையை புனை மாலையாய்ச் சூடி நாணி நின்று மேலும் அழகு சேர்க்கின்றன. கவிதை எழுதுவது ஒரு கலை. கவித்துவம் என்பது படைப்பாளிகளின் வரப்பிரசாதம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த உண்மை. ஆயினும் வாசகர்களின் புரிதல் மட்டுமே, அவர்களைச் சிந்திக்கச் செய்யும் அந்த வல்லமை மட்டுமே ஒரு படைப்பாளியை வெற்றியாளராக்கக் கூடியது. அந்த வகையில் நாலு வார்த்தைகளின் மூலமாக நாற்பது கருத்துகளைச் சிந்திக்கச் செய்திருக்கும் கவிஞரையும் வெற்றியாளர் என்று கருத வைத்துள்ளார். [நீ] நிராசை - எலிகளின் புலி பசித்தன்ன மெலிவில் உள்ளத்து எளிமையின் வியப்பும், அக்கறையின் வர்ணமும் வரையறுக்கப்பட்ட விதம் கவிதைக்கு வலிமை! “இன்னொருவரால் கட்டுப்படுத்தப்படுகிற, பச்சைப் பொய் சொல்லும் கதையைக் கேட்டால், ஜே.கே சொன்ன தத்துவத்தை ஒப்பிட்டு நோக்க ஏதுவாகும்! (பச்சைக்கிளி) நீ ஆடினால் பகட்டாயத் திரியும் இலட்சியவாதிகளை(?) அந்தியின் புனைவு அருஞ்சுவை! ’வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று சொன்ன மகாகவியை முன் மொழியும், புரட்சி. மாதப்பசு மாதையும், மதுவையும் புதிய கோணத்தில் புனைவு - அதிசய மது! பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை, கவியரசு கண்ணதாசன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கானக்குயில் பி.சுசீலா, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஆகிய நல் முத்துக்களனைத்தையும் சுவையாக வர்ணித்த கவிஞர், இறுதியாக தாய்த்திருநாட்டையும், வறுமைக் கோடுகளின் வரைபடத்தொகுப்பே இந்தியா என்ற நிதர்சனத்தின் அவலத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். சிறப்பங்காடியை, சிரிப்பழகிக்கு உவமையாக்கியது இனிமை. வழமையாக கவிஞர்களின் பார்வைக்குத் தப்பாத பொய் முகம் - இக்கவிஞரின் பார்வையிலும்! ஆழ்மனக்கடலின் அழகிய கட்டிடங்களைத் தன்னகத்தேக் கொண்ட, வண்ணமிகு வடிவழகையுடைய சிங்கப்பூர் துறைமுகமும் இவர் பார்வைக்குத் தப்பாமல் திருத்தலமாகியுள்ளது! மூழ்கி எடுத்த முத்தல்ல
ஆசிரியர் - பிச்சினிக்காடு இளங்கோ
நன்றி : திண்ணை வெளியீடு.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:33, 21 மார்ச் 2012 (UTC) |