அன்றொரு நாள்: ஜூலை 23:IIமரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
I. சுளீர்! சுளீர்! சுளீர்! பாலகனுக்கோ வயது 15; கசையடிகளும் 15. ஒவ்வொரு சுளீருக்கும் ஒரு ‘பாரதமாதாவுக்கு ஜே!’ வெள்ளைக்காரனுக்கே தாங்கவில்லை. உன் பெயர் என்னவென்றான். இவனும் ‘திவாரி’ என்று சொல்லமாட்டானோ? ‘சுதந்திரப்பறவை என்று பொருள்பட ‘ஆசாத்’ என்றான். சுளீர்! சந்திரசேகர் ‘ஆசாத்’ என்ற புரட்சி வீரனின் ஜென்ம தினம் ஜூலை 23, 1906. ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் என்ற அமைப்பை தோற்றுவித்தது, நம்ம ‘ஆசாத்’, பகத் சிங்க், சுக்தேவ், ராஜ்குரு. ‘ஆசாத்’ ஹனுமத் உபாசகர். ஜாலியன்வாலா பாக் படுகொலை (அதை பற்றி எழுதணும்.) இவரை மிகவும் பாதித்தது. வைஸ்ராய் பயணித்த ரயில்வண்டியை தகர்க்க முயன்றது (1926), ககோரி ரயில் கொள்ளை (1926), லாலா லஜ்பத் ராய் மரணத்துக்கு பழிக்கு பழி என்று ஸாண்டர்ஸ் கொலை என்று தீவிர வாத குற்றம் சாட்டிய வழக்குகள். பாருங்கள், விதி விளையாடுவதை! ஃபெப்ரவரி 27, 1990 அன்று, சந்திரசேகர் ‘ஆசாத்’ தோட்டத்தில் (முற்காலம் ஆல்ஃப்ரெட் பார்க்), 1931ம் வருடம் இங்கு தன் கையாலேயே வீரமரணம் அடைந்த சந்திரசேகர் ‘ஆசாத்’ அவர்களுக்கு, அஞ்சலி செலுத்த சென்றிருந்தேன். அலஹாபாத் நகரம். ஒரு முதியவர், ‘இங்கு தான் வந்தார், இப்படித்தான் போனார், இங்கு தான் துரோகிகள் காட்டிக்கொடுத்தனர். இங்கு தான் சுட்டுக்கொண்டார். இங்கு தான் அவரது பூதவுடல் கிடந்தது’ என்று காண்பித்தார். 1931ல் அவர் சிறுபையனாக இருந்திருக்கலாம். வெள்ளைக்காரன் ஆட்சியில் போய் பார்த்திருப்பது துர்லபம். ‘உங்களுக்கு எப்படி தெரியும்’ என்று கேட்டேன். தன்னுடைய தந்தை காண்பித்ததாகச் சொன்னார். கனத்த மனதுடன் திரும்பி வந்தேன்.
http://www.indiapicks.com/stamps/Gallery/1997-98/1824_Lt-Indra-Lal-Roy.jpg
இன்னம்பூரான் 23 07 2011 உசாத்துணை: http://www.iloveindia.com/indian-heroes/chandrashekhar-azad.html http://www.firstworldwar.com/bio/roy.htm
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:59, 28 ஜூலை 2011 (UTC)
|
