அன்றொரு நாள்: ஜூலை 21மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
கலையரங்கம் தமிழ் இலக்கியத்திலே ஊறியது என்பதற்கு அரிய சான்றுகள் பண்டை காப்பியமான சிலப்பதிகாரத்தில் உளன. அரங்கத்தின் அமைப்பு, திரைகள், இசைக்கருவிகள், ஆசிரிய பெருமக்கள், நர்த்தகி ஆகியவை மென்மையான கலையுணர்வுடன் சித்தரிக்கப்படும்போது, தற்கால பேசும்படங்களையும், நடிக, நடிகையரையும் நினைப்பது இயல்பே. பேசும்படத்தின் அன்னை நாடகமேடை. என்றாவது ஒரு நாள், உசிலம்பட்டி கொட்டாயில் சங்கீத சம்ராட் சங்கரய்யர் வாசிக்கும் ஹார்மோனியத்தில் லயித்து, டிராமா பார்க்காமல் தூங்கி வழிந்ததை அசை போடும் போது, சங்கரதாஸ் ஸ்வாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் ராஜமாணிக்கம் (என் தாத்தாவின் ஃபெரண்ட்.), டி.கே.எஸ். சகோதரர்கள், மனோஹர், சிவாஜி கணேசன் எல்லாரும் குறும்படக்காட்சியாக முன்னால் வந்து நிற்கிறார்கள். நமது தேசீய நாடகபண்புகள் ஸூபர்! வள்ளியும், முருகனும் காதலிக்கும்போதே காந்தி மஹான் பாட்டு பாடுவார்கள்! அதெல்லாம் பற்றி ஒரு நாள் எழுதணும்.
சிவாஜி கணேசன் அரசியலுடன் பரீக்ஷார்த்தமாகவே சற்றே ஊடலும், கூடலுமாக இருந்தாலும், விவேகத்துடன் விலகியே இருந்தார். அவரை பற்றி அதிக எழுதாமல், உசாத்துணையில் இருக்கும் தளத்தில், அவரை பற்றி விருப்பமுள்ளவர்கள் தெரிந்து கொள்ளலாம், என்று கேட்டுக்கொள்கிறேன். என் நண்பர் ஒருவர் எழுதிய ஆங்கில நூலையும் அங்கு சுட்டியிருக்கிறேன்.
http://www.vinavu.com/wp-content/uploads/2010/05/Sivaji_Ganesan_India_postal_stamp.jpg
இன்னம்பூரான் 21 07 2011
உசாத்துணை: http://velu.blogsome.com/2006/08/02/vc/ Sundararaj Theodore Baskaran (2008): Sivaji Ganesan:Legends of Indian cinema
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:38, 25 ஜூலை 2011 (UTC)
|
