அன்றொரு நாள்: ஜனவரி:10மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:24, 13 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் இன்னம்பூரான்
“அஸ்தமித்தவுடனே துவக்கி, பெருங்காற்றடித்தது... இந்தக் காற்றினுடைய பிரதாபம் இன்னமட்டென்று ஒருவிதமாய்ச் சொல்லக்கூடாது...இந்த முப்பது நாழிகைக்குள்ளே பட்டணத்திலே ஒரு மரமாகிலும் தப்பவிடாமல் ஊரிலே உண்டான மரங்களெல்லாம் படுகாடாய் விழுந்து போனதும், சிறிது மரங்களை முறுக்கி முறித்துப் போட்டதும், அதுவுமல்லாமல் பட்டணங்களுக்குள்ளே தோட்டந் துரவுகள், தென்னை மரம், மாமரங்கள் எப்பேர்ப்பட்ட மரமும் ஒன்றாகிலும் தப்பாமல் படுகாடாய் விழுந்து போச்சுது... அந்த மதகைப் பிடுங்கிக் கொண்டு அந்த வெள்ளம் ஓடிற்று. அந்த வெள்ளத்திலே உப்பாற்றிலே வந்து விழுந்து உப்பாற்றிலே கட்டியிருந்த வீடுகள் பேரிலே ஒரு முழ வெள்ளம் வந்து அங்கே கட்டியிருந்த மூன்று தெருவும் படுகாடாய் விழுந்துபோய், வீடுகள் வெள்ளத்தில் முழுகிப்போய், அந்த வெள்ளத்திலே வீடுகளை அடித்துக் கொண்டு போனதும், மாடுகள் கன்றுகள் செத்ததும், மனுஷர் செத்ததும் இப்படியாக வெகு சேதப்பட்டு அந்த வெள்ளம் இப்படி பட்டணத்து மேலே திரும்பினபடியினாலே, பள்ளத்துத் தெருக்களிலேயெல்லாம் அரை மட்டும் தண்ணியும் பெருந்துடை மட்டும் தண்ணியும் நின்றபடியினாலே, பள்ளத்தாக்கிலே யிருந்த வீடுகளெல்லாம் அநேகமாய் விழுந்து போச்சுது...பட்டணமெல்லாம் தெருவுக்குத் தெரு பிணநாற்றமாய் இரண்டு மூன்று நாள் மட்டுக்கும் வீதியிலே புறப்படக்கூடாமல் இப்படி அவஸ்தைப்பட்டுப் போச்சுது.. .” . நீங்க ஒண்ணு! அந்தக்காலத்து சூறாவளியை பற்றி எழுதப்பட்டது, அது. படிக்கிறீர்களா, இல்லையா என்று பார்க்கக் கதை விட்டேன்! இந்த வம்சாவளியின் நாட்குறிப்புகளில், ஒரு சகாப்தத்திற்கு வேண்டிய அளவு பாமர கீர்த்திகள் இருக்கின்றன. ஜனவரி 10, 1761 அன்று அவர் மறைந்தார் என்று தமிழ் விக்கிப்பீடியாவும், அது நடந்தது ஜனவரி 16, 1761 என்று ஆங்கில விக்கிப்பீடியாவும் கூறுகின்றன.
உசாத்துணை:
http://books.google.co.uk/books?hl=en&id=fd59Yw2I_QQC&dq=Pillai,+Ananda+Ranga&printsec=frontcover&source=web&ots=sKG8HG2hTk&sig=rbyd1JNnXvVLlnWKlG84GqviR5w&sa=X&oi=book_result&resnum=1&ct=result#v=onepage&q=Pillai%2C%20Ananda%20Ranga&f=false
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:24, 13 ஜனவரி 2012 (UTC) |