திருவாதிரைக்களி செய்முறையும், ஏழுதான் குழம்பும்!மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:24, 9 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் திருவாதிரைக்களி செய்முறை:
பச்சரிசியைக் களைந்து சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறின அரிசியில் இருந்து நீரைச் சுத்தமாக வடித்து வைக்கவும். வடிகட்டி இருந்தால் அதில் போட்டு நீரை வடிக்கவும். நீர் நன்றாக வடிய வேண்டும். ஒரு மணி நேரம் வைத்திருந்த பின்னர் அடுப்பில் ஒரு கடாயை ஏற்றிச் சூடு செய்யவும். அதில் இந்த அரிசியைக் கொஞ்சம்கொஞ்சமாகப் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். மொத்த அரிசியையும் இப்படி வறுத்துக்கொண்டு ஆற வைக்கவும். ஆறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு ரவை போல் உடைக்கவும்.
இப்போது அடுப்பில் நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது வெண்கல உருளி அல்லது அடி கனமான பாத்திரம் ஒன்றை ஏற்றி நாலு கிண்ணம் நீரை ஊற்றவும். கொஞ்சம் கூட வைத்தாலும் நீர் கொதித்ததும் எடுத்துத் தனியாக வைத்துக்கொண்டால் பின்னால் தேவைப்படும்போது கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றிக்கொள்ளலாம். நீர் நன்கு கொதித்து வருகையில் ஊற வைத்த துவரம்பருப்பைப் போட்டு ஒரு கொதி வரும்போது தூள் வெல்லத்தையும் போடவும். வெல்ல வாசனை போகக் கொதிக்க வேண்டும். கொதித்ததும் அரைத்துப் பொடித்த மாவைப் போட்டுக்கொண்டே கிளறவேண்டும். மாவைக் கட்டியில்லாமல் கிளற வேண்டும். நன்கு உப்புமா பதத்துக்கு வரும்வரை கிளறவேண்டும். நீர் போதவில்லை எனில் எடுத்து வைத்திருக்கும் வெந்நீரை ஊற்றிக்கொள்ளலாம். நன்கு பொல பொலவென்று வந்ததும், பக்கத்தில் இன்னொரு பாத்திரம் அல்லது வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுக்கவும். முந்திரிப்பருப்பைக் களியில் போட்டுவிட்டு அந்த நெய்யிலேயே தேங்காய் துருவலையும் வறுக்கவும். களியில் போடவும். ஏலக்காய்ப் பொடியைத் தூவவும்.
இதோடு சைட் டிஷாகப் பண்ண வேண்டியது ஏழுதான் குழம்பு. சிலர் வீட்டில் கூட்டுப் போல் கெட்டியாகவும் இருக்கும். மதுரை, தஞ்சை மாவட்டங்களில் இதற்குத் துவரம்பருப்பையும் குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் பருப்பே போடாமல் செய்வார்கள். இதற்குப் பெரும்பாலும் நாட்டுக்கறிகாய்களே சுவையாக இருக்கும். கிடைக்காத இடம் என்றால் கிடைக்கும் வேறு காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையான காய்கள்:
பெரு கிழங்கு
கால் கிலோ துவரம்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக்க் குழைய வேகவைக்கவும். புளி நூறு கிராம் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். இவை எல்லாம் தயாராக இருக்கட்டும். இப்போது அரைக்க வேண்டியவை
அரைக்க:
காய்களைக்கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். புளி கரைத்த நீரைக் கொதிக்க வைத்து வேக விட்ட காய்களை சேர்க்கவும். புளிக்கரைசலுக்குத் தேவையான உப்பையும் போடவும். நன்கு கொதிக்கையில் வெந்த பருப்பைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொதி விட்டதும், அரைத்து வைத்த பொடியைப் போடவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டு அதில் கடுகு, மி.வத்தல் 2 கருகப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும். பச்சைக்கொத்துமல்லியைத் தூவவும். மேற்சொன்ன முறையிலேயே பருப்பே சேர்க்காமல் மற்றவைகளைச் சேர்த்தும் செய்வார்கள். இதையே தாளகம் என்றும் சொல்வார்கள். |