சிலம்பும், பெரிய புராணமும் - பகுதி - 2மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:31, 30 டிசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் பவள சங்கரி
இறையாண்மையும், நீதி வழுவாமையும் இரண்டையும் உயிராய் மதிக்கும் உத்தம சோழ மன்னனாம் மனுநீதிச் சோழனின் வரலாறு எக்காலத்தும் மறக்கவொண்ணா காப்பியமன்றோ? அம்மட்டும் , ஐந்தறிவு சீவனான ஒரு கன்றைத் தவறுதலாகத் தேர்க்காலில் பலியிட்ட அரசிளங்குமரனை , நீதி கேட்டு வந்த தாய்ப்பசுவிற்கு நீதி வழங்கும் வண்ணம் தம் மகனை அதே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மன்னனின் நீதியும், தம் இறையாண்மையின் வல்லமைக்குக் கிடைத்த பெரும் பரிசாக , சிவபெருமான் நேரில் தோன்றி , இறந்துபோன தம் மகனையும், கன்றையும் உயிர்ப்பித்துக் கொடுக்க வானோர்கள் பூமாரி பொழியும் பேரதிசயமும் நடந்தது.
தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தவாத் தரியா தாகி
“மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பினால், கோவலன் கள்வன் என்று முடிவெடுத்து கொலையுண்டபோது , அதை அறிந்த கற்புக்கரசி , சிலம்பின் நாயகி, கண்ணகி,
‘ஈர்வது ஓர் வினை காண்; ஆ! இது! என உரையாரோ? என்று பதைபதைத்து, கோபாவேசமாக மன்னன் முன் நின்று நீதி கேட்கிறாள் தலைவிரி கோலமாக!
அரசன் வினாவும் கண்ணகி விடையும்
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் பெரும்பெயர்ப் புகார் என் பதியே; அவ்ஊர் என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
தாழ்ந்த குடையான்: தளர்ந்த செங்கோலன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் அம்மட்டும் ஒரு கன்றிற்காக தம் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியை நிலைநாட்டிய மனு அவதரித்த சோழ வள நாட்டில் பிறந்து, ஊழ்வினை உறுத்து வந்து பாண்டிய நாட்டிற்குத் துரத்தியடிக்க, அங்கோ மன்னனின் அநீதியால் கணவனை இழந்த கைம்பெண்ணாக கோபாவேசமாக மதுரையம்பதியைத் தீக்கிரையாக்கிவிட்டு, சேர நாட்டில் வந்து தெய்வமாகிப் போனாள் இளங்கோவடிகளின் சிலம்பின் நாயகி கண்ணகி! அழகிய கயல்விழி மங்கையர் வாழும் திருமுனைப்பாடி எனும் நாட்டில் ஆணையின் வழி அவதரித்த ஆலால சுந்தரர் ,உலக வழியில் செல்லாது,அருள் வழியில் சென்று நமக்கு வழிகாட்டியாக விளங்கச் செய்யும் வண்ணம் இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்ட விதத்தைக் காண்போம்! மணமேடையில் மணப்பெண்ணின் வரவை நோக்கி ஆவலாய் காத்திருக்கும் வேளைதனில்,மணப்பெண்ணவளும் பரியிலிருந்து இறங்கி மணமேடை நோக்கி வர, மங்கல நாதம் முழங்க, திடீரென அங்கு தோன்றிய சிவபெருமான் பிஞ்ஞகனு நாவலர் பெருந்தகையை நோக்கி அதற்கு ஆதாரமாக ஓர் ஓலையைக் காட்ட அதையும் கிழித்த சுந்தரருக்கு உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனின் , மனத்தினால் உணர்தற்கெட்டா மாயை என்றாயிற்று .
‘ஆட்சியி லாவ ண்ததி லன்றிமற் றயலார் தங்கள் மூலவோலையில் அப்படி என்னதான் வாசகம் இருந்தது? அந்நாளில் நீதிமன்றத்தில் இது போன்று ஆவணங்களை வாசிக்கும் நீதிமன்ற சேவகனான காரணத்தானும் அவ்வோலையை உரியவாறு தொழுது வாங்கி, உறையை நீக்கி, சுருளோலையை விரித்து, வாசிக்கலானான்...
”அருமறை நாவ லாதி சைவனா ரூரன் செய்கை இதுவே அவ்வோலையில் இருந்த வாசகம். நீதிமன்றத்தால் அவ்வோலையில் இருந்த கையெழுத்துகள் பரிசோதனை செய்யப்பட்டு சரியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டு, நீதி முறைப்படி இனி செய்ய வேண்டியது வேறு ஒன்றுமில்லை என்பதால் நீதிபதிகள் தீர்ப்பையும் வழங்கினர்.
‘நான்மறை முனிவ னார்க்கு நம்பியா ரூரர் தோற்றீ வென்று நின்றவரின் பின்னால் சென்ற ஆலால சுந்தரர், திருநாவலூர் ஆலயத்தினுள் சென்று ஆங்கு மறைந்த மறையோன் தன்னை ஆட்கொள்ள நடத்திய திருவிளையாடலை எண்ணி பேரானந்தம் கொண்டார்.
‘மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டனென்னு நாமம் அந்த நொடியிலிருந்து நம்பி ஆரூரர், ஆண்டவனை , பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா என்று தேவாரப் பதிகம் பாட ஆரம்பித்தார்.
சேக்கிழார் பெருமான் பண்டைக்காலத்தில் பத்தினிகள் வாழ்ந்த வாழ்க்கை முறைமைகளையும், பதி பக்தி கொண்ட தமிழ் மகளிரின் வரலாறுகளையும் வெளிப்படுத்தும் விதமாக, காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை 65 பாடல்களில் அழகுற விளக்கிய பாங்கு குறிப்பிடத்தக்கது. பொங்கிய பேரழகுமிகு புனிதவதியார் என்று போற்றப்பட்ட அம்மையார், பதி பக்தியில் சிறந்து விளங்கிய காரணத்தால், தம் பதி பரமதத்தன் விருப்பத்துடன் வேண்டிய மாங்கனியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற்றுக் கொடுத்தார். அதனைக் கண்ட கணவனோ, மனைவியை தம் குலதெய்வம் எனக் கருதி இனியும் அவருடன் வாழும் தகுதி சாமான்யனான தனக்கு இல்லை என ஊரை விட்டே போய் மறுமணமும் செய்து கொண்டு , அதனால் பிறந்த குழந்தைக்கும் புனிதவதி என்று நாமகரணம் சூட்டி,மனைவி மகளுடன் வந்து காலில் விழுந்து வணங்க அந்த நொடியே,
”ஈங்கிவன் குறித்த கொள்கை இது: இனி இவனுக்காகத் அம்மையின் வேண்டுதலுக்கு செவி மடுத்த ஐயனின் அருளினாலே, “மெய்யில் ஊனடை வனப்பை எல்லாம் உதறிஎற் புடம்பே யாக, வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய் வடிவம் ”ஆனார்.
அம்மையே என்று விளித்த ஐயனை, ‘அப்பா’ என்று பங்கயர் செம்பொற்பாதம் பணிந்து வீழ, வேண்டும் வரம் கேட்க, அம்மையாரும், இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்.
கோவலனும், பாடுஅமை சேக்கையுள் புக்குத் தன் பைந்தொடி பதிபக்தியில் சிறந்த கண்ணகியோ மறுமொழியாக, நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சொல்லி கணவனின் குறிப்பறிந்து சற்றும் அவன் மனம் கோணாமல் நடந்த பாங்கு குறிப்பிடத்தக்கதாம்.
மயிலை வாழ் சிவனேசன் என்னும் வணிகத் தொழில் புரியும் சிவனடியார், சிவபெருமானின் பொற்பாதங்கள் மட்டுமே நிலையானதென்ற ஆணித்தரமான எண்ணம் கொண்ட பக்தர். சிவனடியார்கள் மீதும் அளவிலா அன்பு கொண்டவர். தம் செல்வ மகளான பூம்பாவை எனும் கன்னியை, அபிராமி அன்னையிடமே ஞானப்பால் பருகி, ஆண்டவன் திருநாமம் ஒன்றையே சிந்தையில் கொண்டு வாழ்ந்து வரும் சிவனடியாராகிய திருஞானசம்பந்தர் வசம் ஒப்படைக்க வேண்டி சீரும், சிறப்புமாக வளர்த்து வருங்கால், ஓர் நாள் தந்தையின் வழிபாட்டிற்காக மலர் கொய்யும் பொருட்டு, நந்தவனம் சென்ற போழ்து ஆங்கே ஓர் நாகம் தீண்டி, இன்னுயிர் இழக்க, இறந்த உடலை எரியூட்டி சாமபலையும், எலும்புகளையும் ஒரு சட்டியில் இட்டு அது சம்பந்தரின் சொத்து, என்று அவரைச் சந்திக்க நேருகிறதோ அன்று அவர் வசம் ஒப்படைப்பதே தம் கடமை என அதற்கு ஆடை ஆபரணங்கள் அணிவித்து , ஒளியூட்டி, வழிபாடும் செய்து வந்தார். ஒருநாள் ஞானசம்பந்தப்பெருமான் திருவொற்றியூர் எழுந்தருளியுள்ளது அறிந்து, அவரைக் காண ஓடோடிச் சென்று அவர் திருப்பாதம் தொட்டு வணங்கி மயிலை வரும்படி அழைக்க, அவரும் கபாலீசுவரரை தரிசிக்கும் பொருட்டு உடன்வர, அங்கு கபாலீசுவரரை வணங்கி, பூம்பாவையின் புனித சாம்பல் இருந்த கலயத்தைக் கொணரும்படி பணித்தார். ஆலயத்தில் வெளியில் ஆண்டவரின் திருமுன் நின்று,
“மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும் அவ்வண்ணம் ஆண்டவர் திருமுன் சில பாடல்கள் பாடிப் பரவவும், குடம் உடைந்து, தாமரை மொட்டவிழ்ந்தது போன்று அழகுற விரிந்தெழுந்த பாவையவளின் அழகின் வர்ணனையைக் காண்போம்;
கன்னிதன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார் மண்ணிய மணியின் செய்ய வளரொளி மேனி யாள்தன் இங்கனம் 17 பாடல்களில் அம்மங்கையின் எழிலை வர்ணித்த பாங்கு ,கவிநயம் அனைத்தும் செந்தமிழின் எழிலைச் சுவைபட சுட்டியதற்கு ஓர் காட்டாம்.
கண்ணகியின் நெற்றி,புருவம்,இடை, கண் இவைகளைப் புகழ்தல்
தேவர் கோமான் தெய்வக் காவல் அம்சுடர் நெடுவேல் ஒன்று நின்முகத்துச்
மாஇரும் பீலி மணி நிற மஞ்ஞை, நின் நல்நீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்; உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின ;
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! பெரும்குடி வாணிகன் பெரு மடமகளே! உலவாக் கட்டுரை பல பாராட்டி,
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:31, 30 டிசம்பர் 2011 (UTC) நன்றி - பிரான்சு உலகத்தமிழ் மகாநாட்டு மலர் |