அன்றொரு நாள்: நவம்பர் 21மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:36, 24 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் இன்னம்பூரான்
இந்த முள்ளுப்பொறுக்கி சண்டையின் மகத்துவம், இந்தியா விமானப்படையின் சாகசம்; தக்கதொரு தருணத்தில் தூசிப்படைக்கு கவசமாக இயங்கிய வெள்ளோட்டம். ஸேபர் (sabre) என்றால் பட்டாக்கத்தி. அது பாகிஸ்தான் விமானம். நாட் (gnat) என்றால் சில்வண்டு. அது இந்திய விமானம். கடுமையான டாங்கி போர், தரையில். பாகிஸ்தான் ஆகாயத்துணை கொணர்ந்தது, பட்டொளி வீசி. இந்தியா ‘ஞொய்ங்க்’ என்று தாக்கியது. ‘ஞொய்ங்க்’ வாகை சூடியது.
‘...பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர்: ஐயா! எப்படி சொல்வேன்? விதி விளையாடுகிறது! நாமோ அன்யோன்யாமாகிவிட்டோம். சொல்லமுடியாமல் என் நெஞ்சு அடைக்கிறது. அருண் மாவீரன். அன்று (டிசம்பர் 15, 1971) தன்னுடைய டாங்கியுடன், அச்சம் தவிர்த்து, ஆவேசம் மூண்டு, இம்மை மறந்து, ஈட்டி போல் பாய்ந்து, எங்கள் படைகளை அதகளமாக்கினான். இருபக்கமும் பயங்கர உயிர்ச்சேதம். தளவாடங்கள் நொறுங்ககிக்கிடந்தன. நாங்கள் இருவர் மட்டும். எதிரும் புதிருமாக. பகையாளி. ஒரே க்ஷணத்தில் இருவரும் சுட்டோம். நான் இருக்கிறேன். அதான் பார்க்கிறீர்களே.
இது உரையாடலோ? உருக்கமான இரங்கலோ? அது பற்றி பேச நான் தயாராக இல்லை. பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரின் வீடு, ஜனங்கள், ஏன் ஜன்னல்கள்!, பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலின் மனோநிலை (‘பரம வீர் சக்ரா’ ஷஹீத் அருண் க்ஷேத்ரபால் (21) அவர்களின் தந்தை என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா?, இந்தியனே!) எல்லாமே ஒரு ஒளிவட்டத்தில், ஒரு சூன்யத்தில். இதை விலாவாரியாக விமரிசிக்க மானிட ஜன்மங்களால் இயலாது. அவரவருக்கு, அவரவர் கற்பனாசக்தி, மனோதர்மம்!...’ நான் சொல்ல மேலே என்ன இருக்கிறது?
... border in the Battle of Garibpur, and hostilities commenced.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 05:36, 24 நவம்பர் 2011 (UTC) |