கும்பாபிஷேஹம்-குடமுழுக்கு விழா!மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:14, 28 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
< ----செங்கற்களில் நவகிரஹ ஆவாஹனம்
கருவறையிலிருந்து பெருமாளின் சாந்நித்தியம் ஹோமம் மூலம் கும்பத்திற்கு மாற்றப்படுகிறது ------->
கும்பாபிஷேஹம் எல்லாக் கோயில்களிலும் பனிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய ஒன்றாகும். ஆகமங்கள் படி கட்டப்பட்ட கோயில்களுக்கு இது வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. அஷ்டபந்தனம் எனப்படும் எட்டுவகையான மருந்து/மூலிகைகளால் கட்டப்பட்ட கோயில் மூலவர்களின் பீடங்கள் பனிரண்டு வருடம் ஆனதும் பலவீனமடைவதாய்ச் சொல்லப்படுகிறது. ஆகவே பனிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அஷ்டபந்தனம் வைத்துக் கட்டுவது அவசியமான ஒன்று. இதை சிவன் கோயில் மற்றக் கோயில்களில் கும்பாபிஷேஹம் எனவும், பெருமாள் கோயில் என்றால், சம்ப்ரோக்ஷணம் என்றும் கூறுவார்கள். இந்தக் கும்பாபிஷேஹம் செய்யவென்று நாள் நிச்சயிக்கப்பட்டபின்னர் குறிப்பிட்ட ஊர்/கிராமம்/ நகரத்தில் அருகிலுள்ள வயலில் இருந்து மண் எடுத்து வந்து வழிபட்டு. அந்த மண்ணை வைத்தே முதலில் ஆரம்பிப்பார்கள் என சமீபத்தில் எங்கள் ஊர்க் கோயில் கும்பாபிஷேஹத்தின்போது பட்டாசாரியார் கூறினார். கிராமங்களில் இது முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் பின்னர் கருவறையில் இருந்து கோயிலின் அர்த்த மண்டபத்திற்கு வெளியே அல்லது ஏற்கெனவே குறிப்பிடப் பட்டிருக்கும் ஓர் இடத்தில் பாலாலயம் கட்ட ஏற்பாடுகள் செய்வார்கள். பாலாலயம் என்பது கருவறையின் விக்ரஹங்களின் புனிதத்தன்மையை, ஒரு நீர் நிறைந்த கலசத்திற்கு மாற்றுவது ஆகும். இம்மாதிரி மாற்றினதும் கருவறை சில கோயில்களில் மூடப்படும்/அல்லது திரை போட்டு மறைக்கப்படும். கும்பாபிஷேஹம் முடியும் வரை கருவறையின் மூலவருக்கு நேரடி வழிபாடு நடத்தாமல் பாலாலயம் ஏற்படுத்தி இருக்கும் கலசத்திலேயே கருவறை மூலவர் போல் தோற்றும்படி அலங்கரித்து வழிபடுவார்கள். மேலே காணப்படும் படங்கள் எங்கள் பூர்வீக ஊரான கும்பகோணம் அருகிலிருக்கும் பரவாக்கரை கிராமம் பெருமாள் கோயிலில் பாலாலயம் எடுக்கப்பட்டபோது எடுத்த படங்கள். தொடரும்
--Geetha Sambasivam 17:28, 26 அக்டோபர் 2011 (UTC) |

