அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 12மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:05, 12 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் இன்னம்பூரான்
அஜந்தா என்போம்;எல்லோரா என்போம்; சித்தன்ன வாசல் என்போம். கொனரக் சூர்யன் என்போம்; கஜுரஹோ மன்மதராதனை என்போம்; கல்லும் வெட்டும் வரலாற்றுக்கு உறுதி என்போம்; நடுகல் நாடுவோம். இவற்றையெல்லாம் போற்றுதல் செய்யோம். வாய்சொல்லில் கூட கலையார்வம் உதட்டசைவுடன் சரி. இத்தனைக்கும், நமது கலையார்வ மரபு தொன்று தொட்டு வரும் பண்பு. புராதனத்தை பாதுகாக்கும்/ஆய்வு செய்யும் அரசு/தன்னார்வ நிறுவனங்களின் திறன் அறியப்பட்டதே. இருதரப்புக்கும் திறன் உண்டு. முன்னவருக்கு ஆர் வம் குறைந்து விட்டது. பின்னவரிடம் செல்வமில்லை. புராதனச்சின்னங்களை கண்ணின் மணி போல் பாதுகாக்கும் ஆர்வம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால், நாசகார கும்பல்களல்லவா அவற்றை அழிக்கின்றன. ஒரு முறை சாரநாத் என்ற புனித தலத்தில், அசோகச்சக்ரவர்த்தியின் தூணை (நம் நாட்டு அரசு சின்னம்) பார்க்கையிலே, ஒரு ‘இந்தியன்’ அதன் ஸ்தலத்தில் எச்சில் உமிழ்ந்தான். நான் அவனை அறைந்தேன். போலீஸ் வந்தது. மக்கள் அவன் பக்கம்! விதுஷா என்ற மத்தியப்பிரதேச நகரின் ம்யூசியம் காணச்சென்றோம். எல்லாம் சிதறிக்கிடந்தன. ஆழம் தெரியாமல், அந்த க்யூரேட்டர் பள்ளி மாணவியான என் மகளின் ஆர்வம் கண்டு, அவளை கருத்து எழுதச் சொன்னார். “அருமையான சேகரம். அசட்டையான பராமரிப்பு” என்று எழுதினாள். பான் ஜொள்ளு வழிய சிரித்தாரே தவிர, ரோஷமே இல்லை! தஞ்சை பெரிய கோயிலில் அம்பாள் சன்னதி விதானத்தின் ஓவியங்களின் மீது புகை. சித்தன்ன வாசலில் ஓவியங்கள் மேல் கிறுக்கல். கள்ளழகர் பள்ளியறையோ தந்தச்சிற்பம். புகையால் கறுத்தது. இருக்கிறதோ? இல்லையோ? ஆத்திகர்கள் கூடும் எந்தக் கோயிலிலும் சிலாபங்கங்கள்! நம் ஜனங்கள் எல்லாருமே மாலிக் கஃபூர்கள். சரி. ஃபிரான்ஸுக்குப் போவோம், லஸ்கா குகை ஊவியம் காண்க.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:05, 12 செப்டெம்பர் 2011 (UTC) |