அழகர் குறவஞ்சிமரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:51, 12 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் காரை ஏ.சங்கரசேது நன்றி:- தினமணி
நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழிசை - இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளில் குறவஞ்சி - இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக குறவஞ்சி நாடகங்கள் அனைத்தும் கதை அமைப்பில் ஒரே நிலையிலிருக்கும். பாட்டுடைத்தலைவன், தலைவி மட்டும் வேறுபட்டிருப்பர்.
தலைவன் நாடெங்கும் பவனி வருதல்
குறவஞ்சி இசை நாடகங்கள் பல உள்ளன.
இவைகளில்,
பிரகாசமாகக் காணப்படும்.
பாட்டுடைத்தலைவன் சோலைமலை மாலழகர் சங்கீத மும்மூர்த்திகளான,
ஆகியோரின் சமகாலத்தவர்.
இவர் சிவகங்கை சமஸ்தானத்தாலும் ஆதரிக்கப்பட்டவர். இம்மேதை, சிவகங்கை சமஸ்தான மகாராஜா கெளரிவல்லப மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டு "கவிக்குஞ்சரம்" என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். இம்மன்னருக்குப் பிறகு வந்த சத்ரபதிபோதகுரு மகாராஜாவால் இவர் மிக்க மரியாதையோடும் அன்போடும் ஆதரிக்கப்பட்டார்.இவரது படைப்புகளில் அழகர் குறவஞ்சி தனிச்சிறப்புப்பெற்றது. இக்குறவஞ்சி,
முதலிய பிரிவுகளில் அமைந்துள்ளன.
சொல் நயமான ஓசையின்பம் மற்றும் பொருட்செறிவு இப்படைப்பில் நிரம்பியுள்ளன.
"மருத தொடையும் இளைஞர் கருத்தும் இறுக்கும் "துயிலும் இல்லை பசியும் இல்லை "தவளநிறக் கருங்கூந்தல் "அங்கம் கலிங்கம் வங்கம் கொங்கம் என, சிறப்பாக இக்குறவஞ்சியில் எண்ணிலடங்காத உவமைகள், பழமொழிகள் பிரகாசிக்கின்றன. "உருகு பெருகு கோடையில் "புயல் கண்ட மயில்போல" "கிணற்று நீரைக் கொண்டு போமோ?" "கல்லினும் நார் உரிப்பேன் இவைகள் போன்ற அடிகளால் இந்நூலில் பழமொழிகளின் சிறப்பை உணரமுடியும்.
இந்நூலின் இசைதான் தனிச்சிறப்பாகும். "கமாஸ்" இராகத்தில் "ஸாமி மயூரகிரி வடிவேலா" என்ற ஓர் அற்புதப் பாடல். அழகர் குறவஞ்சி என்ற நூல் உனது அருளால் சிறப்பாக அமைய திருமுருகனை நினைந்துருகும் பாடல். இப்பாடலின் சரணத்தில் அற்புத இலய வேலைப்பாடுகளை ஆதி தாளத்தில் நிறைவுடன் தந்துள்ளார் கவி.
கட்டியக்காரன் வருகையை, "தொய்யிலேந்திய முலைமா மடந்தமோகச் என, விருத்த வடிவில் அழகாக விளக்கியுள்ளார்.
சுந்தரராஜ பெருமாள் பவனிவரும் காட்சியை நகரிலுள்ள மாதர்கள் கண்டு விரகமுறல் நிலை அற்புதம். சிங்கனும், சிங்கியைத் தேடிவரும் நிலையை தன்யாசி இராகத்தில், "சோலைமலைச் சிங்கனும் வந்தான் என்ற கீர்த்தனையின் சரணத்தில் ஒவ்வொரு அடியும் முடியும் கொண்டு.
என்ற ஒரே ஒலி நயத்தோடு கவி தந்துள்ளது தமிழிசை உணர்வு தன்னிகரற்றுப் பிரகாசிக்கிறது.
சிறப்பு மிகுந்த இந்நூலில் இசைக்கருவிகள் பெயர்களான,
முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.
நாட்டுப்பாடல் இசையான,
முதலியவை மிக்க சுவை வாய்ந்த இசையமைப்புக் கொண்டவை.
இம்மாபெரும் தெய்வீக இசைமேதை கவிக்குஞ்சர பாரதி சங்கீத மும்மூர்த்திகளின் சம காலத்தவர் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகில் உள்ள பெருங்கரையில் தமிழிசையைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், இவருக்கென தனிமண்டபம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பதும், இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிக் காக்க வேண்டும் என்பதும் தமிழிசை அன்பர்களின் அவா! |