சோழர் காலத்துச் சட்டம் ஒழுங்கு, தண்டனைகள் 6மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:08, 16 ஆகஸ்ட் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் இதற்கு தகுதியற்றவர்கள் பின்வருமாறு:
பாருங்கள். இத்தனை குற்றங்களை தவிர்த்தவர்கள் மட்டுமே தேர்தலில் நின்றிருந்து, அப்படியும் போட்டி மூலமாகவே வெற்றி பெற்று மக்களுக்கு தர்மாசனம் மூலமாகவோ, ஊர்ச்சபை மூலமாகவோ பணியாற்ற வேண்டும். இத்தகையானோர் மட்டுமே குற்றங்களை விசாரிக்கவும், நீதி வழங்கவும், தண்டனை கொடுக்கவும், ஊர் பரிபாலனை செய்யவும் தகுதி பெற்றவர்கள் என வரும்போது நிச்சயமாக இதைச் சாதாரணமாகவே படிக்கும் நமக்கே இவர்கள் மீது நம்பிக்கை வருகிறதல்லவா.. ஆஹா! எத்தனை நீதிமான்கள் அவர்கள் என்று புகழுகிறோம்.. ஏனெனில் இப்போதெல்லாம் உச்ச நீதி மன்றத்தைத் தவிர மற்றவை அனைத்தும் ஆட்சியாளர் சொல்படி ஆடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கும் காலகட்டத்தில் நாம் உள்ளோம். இத்தனைக்கும் இவர்களது பதவிக்காலம் முன்னூற்றருபது நாட்கள்தான். பிறகு மறுபடி இவர்கள் போட்டியிடமுடியாது. குற்றங்களே நடக்காத காலம் எப்போதுமே இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் திருக்குறள் போன்ற அற்நூல்களை எழுதி இருக்கவே மாட்டார்கள். ஆனால் சரியான தலைவனும், அவன் கீழ் பணியாற்ற சிறிய கிராமங்களில் கூட நல்ல தலைமையும் தேவை என்பதில் கண்டிப்பாக இருந்தனர்.
ஜாதிக்கலவரங்கள் அப்போதே இருந்தனதான். முதலாம் குலோத்துங்கன் பதவிக்கு வருமுன்பு இப்படிப்பட்ட ஜாதிக்கலவரங்களால் நாடே சீரழிந்து கிடந்தது என்பதை பட்டவர்த்தனமாகவே ‘கலிங்கத்துப் பரணி’ சொல்கின்றது. வட தொண்டை மண்டல மாவட்டங்களில் தோன்றிய வலங்கை இடங்கைப் பிரிவுச் சண்டைகள் நாடு முழுவதும் பரவி மிகப் பெரிய தொல்லையாக அரசுகளுக்கு மாறியதை சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சில செப்பேடுகள் (குண்டூர் மாவட்டம்) சொல்கின்றன. வேலை கொடுப்போர் வலங்கையினர், வேலை செய்வோர் இடங்கையினர் என நாம் பொருள் கொண்டாலும், (இது எந்நாளும் உலகத்தில் எல்லா இடங்களிலும் பெருந்தொல்லை தரக்கூடியதுதான்). ஆனால் இந்த வலங்கையினரிலும் கொஞ்சம் அதிகாரம் மிகுந்தவர்கள் வல வலங்கைஎன்றும், அதிகாரமில்லாதோர் இட வலங்கை யென்றும் மேலும் பிரிந்தனர். புகழ் பெற்ற (Leyden Plates) ஆனைமங்கலச் சிறிய செப்பேட்டுத் தொகுதியைப் பொறித்தவர் அப்படித்தான் தம்மைப் போட்டுக் கொண்டு பெருமை கொண்டார் என்பதை அந்த செப்பேட்டின் கடைசிப் பகுதியைப் படித்தாலே புரியும்.
சந்துவிக்ரிஹகன் ராஜவல்லபப் பல்லவரையரும் அ
ஜாதிகள், உட்பிரிவுகள் எல்லாமே பாரதநாட்டில் ஆதியாக வருபவை போலத் தோன்றினாலும், நீதி நெறி எனப்பார்க்கும்போது பொதுவாகவே நடுநிலைமையாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதும் பல கல்வெட்டுகளின் ஆதாரம் மூலமாக தெரியவந்திருக்கிறது.
பேரரசன் ஆட்சி என்பது சர்வாதிகார ஆட்சி போலத்தான். பொதுமக்கள் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் பேரரசன் எந்த சிற்றரச நாட்டு (மண்டலங்கள்) நீதியிலோ, அல்லது கிராமத்து சபைகள் மட்டத்திலோ தலையிடுவது கிடையாது. அப்படி குறுக்கிட்டபோதும் அரசனின் ஆணை என்பது நீதி தவறுவதை தடுப்பதாகவோ அல்லது மேலும் நியாயம் செய்வதாகவோதான் அமையும். மனுநீதி கண்ட சோழ பரம்பரையில் வந்தவர்கள் நீதி பிறழக் கூடாது என்று நியாய சாஸ்திரத்தில் வெகு நியாயமாக நடந்து கொள்ள ஒவ்வொரு அரசனும் முயற்சி செய்கிறான் என்பதையும் மன்னனின் மெய்க்கீர்த்திகள் பறை சாற்றுகின்றன.
எப்போதுமே தான் சோழநாட்டான் எனப் பெருமிதமாகச் சொல்லக்கூடிய அளவுக்கு தம் மக்களை வைத்திருந்த சோழ நாட்டு ராஜாங்கத்தைப் பார்த்து நாமும் பெருமிதப்படுவோம்.
முடிவுரை:
கோவில் வழிபாடுகளை எத்தனை புனிதமாகக் கருதி இருக்கிறார்கள் என்பதை விட ஆன்மீக வழியில் அரசுகள் எத்தனை ஆர்வத்தோடு மக்களைச் செலுத்தித் திருத்தி இருக்கிறார்கள் என்பதாகவே நான் பார்க்கிறேன். மக்களுக்கு பிறவிப் பயன்களை பற்றிய அறிவும், தர்ம சாஸ்திரங்களின் பெருமையும் இலக்கிய நூல்கள் வழியாக மத போதகர்கள் மூலம் போதிக்கப்பட்டன என்பதை நான் இங்கே சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சோழர்கள் காலத்தில் பக்தி இலக்கியங்கள் அதிகம் எழுதப்பட்டு மிக அதிகமான அளவில் மக்கள் மத்தியில் பரப்பபட்டு வந்தன். ஒரு பெரிய புராணம் என்கிற திருத்தொண்டர் புராணம் போதும். ஒரு செயலுக்கான என்னென்ன பாவங்கள், அதற்கான புண்ணியங்கள் என்ன என்பதையெல்லாம் விளக்கிச் சொல்ல. இவை காரணமாகவும் அரசர்களிடையேயும் சரி, பொது மக்களிடையேயும் சரி, தாம் செய்த குற்றத்துக்கு தண்டனையாக ஆண்டவனிடமே நாம் பரிகாரம் செலுத்தும்போது நம் பாவம் கழிகிறது என்பதோடு வினைப்பயன்களை அடுத்த பிறவிக்கு நாம் எடுத்துச் செல்வதில்லை என்ற உயரிய கண்ணோட்டம் மக்களிடையே இருந்தது.
ஆரம்பத்தில் நான் சொன்ன வரிகள் இதுவே.. சோழர்கள் காலம் தமிழகத்தின் மக்களுக்கு பொற்காலம் என்பதில் எனக்கு அதிக உடன்பாடு உண்டு.
எழுத்தும் ஆக்கமும்: திவாகர்
--Geetha Sambasivam 13:55, 15 ஆகஸ்ட் 2011 (UTC) |


