ஃபிங்கர் பிஷ்

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:14, 16 ஆகஸ்ட் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

திருமதி. வசந்தா குகேசன்


தேவையான பொருட்கள் :


வஞ்சிரம் (அ) சுறா மீன் - நீள வாக்கில் விரல் போல் அரிந்தது.

சோள மாவு - 2 ஸ்பூன்

மைதா மாவு - 2 ஸ்பூன்

வர மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 11/2 ஸ்பூன்

சோயா சாஸ் - 1 ஸ்பூன்

சில்லி சாஸ் - 1 ஸ்பூன்

அஜினோ மோட்டோ - 1/2 ஸ்பூன்

எண்ணெய் - 1/2 லிட்டர்

உப்பு - தேவைக்கேற்ப

தேவையென்றால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.


செய் முறை :


1. மேற் கண்ட அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

2.இதனுடன் மீன் துண்டங்களைப் போட்டுப் பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

3.எண்ணெய் காய வைத்து மீன் துண்டங்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சூடாகச் சுவைக்க அபாரமான சுவை!


கிரேவி :


தேவையான பொருட்கள் :


பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

எண்ணெய் (அ) வெண்ணெய் - சிறிதளவு

பட்டை, கிராம்பு - 2

கரம் மசாலா - 1/4 ஸ்பூன்

வர கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்


செய் முறை :


1.வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும்.

2.வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், தக்காளி விழுது, மற்ற மசாலாப் பொருட்கள் அனைத்தும் போட்டு நன்கு கிளறி சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும்.

3.எண்ணெய் பிரிந்தவுடன், கொத்தமல்லி தளை சேர்த்து, பொரித்த மீன் துண்டங்களையும் போட்டு இறக்கவும்.

சூடாகப் பறிமாற சுவை கூடும்.






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 04:14, 16 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=ஃபிங்கர்_பிஷ்&oldid=7893" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 16 ஆகஸ்ட் 2011, 04:14 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,038 முறைகள் அணுகப்பட்டது.